Wednesday, September 12, 2007

பிரபாகரனின் நண்பர் கைது பாங்காக் நகரில் சர்வதேச போலீஸ் அதிரடி

12 September 2007

* கட்டுரைகள்

K_Pathmanathan_0.jpgPrabaharan_family.jpgபுலிப்பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்கி கடத்தி வந்தவரும், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிக நெருங்கிய நண்பரும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நெருங்கிய தொடர்புடையவர் என்று கருதப்படுபவருமான "கே.பி.' என்ற குமரன் பத்மநாதன் பாங்காக்கில் சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் கடத்தலுக்காகவும் தேடப்பட்டு வந்த "கே.பி.' கைது செய்யப்பட்டுள்ளது புலிகளுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"கே.பி.' என்கிற குமரன் பத்மநாதன் புலிகளின் மிக முக்கிய நபராக கருதப்படுபவர் சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்கிற குமரன் பத்மநாதன். இவர் சர்வதேச போலீசாரால் நேற்று பாங்காக்கில் கைது செய்யப்பட்டார். இது குறித்து தாய்லாந்து பத்திரிகைகள் தெரிவித்துள்ள செய்தி வருமாறு:

புலிகளுக்கு ஆயுதம் கடத்துவதில் மிக முக்கியமானவராக கருதப்படும் குமரன் பத்மநாதன் பல்வேறு நாடுகளில் தங்கியிருந்து போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டு வந்தார். பெருமளவு போதைப் பொருட்களை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் ஆயுதங்களை வாங்கி புலிகளுக்கு கடத்துவது இவரது முக்கிய பணியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளிலிருந்து புலிகள் இயக்கத்திற்கு பெருமளவில் பணம் வசூலித்து அனுப்பும் பொறுப்பையும் அவர் மேற்கொண்டிருந்தார். தாய்லாந்து குடியுரிமை பெற்றிருந்த பத்மநாதன், போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தலுக்காக சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்தார். தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் மாறி மாறி வசித்து வந்த "கே.பி.' என்று புலிகளால் மிகவும் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் லண்டன், பிராங்பட், டென்மார்க், ஏதன்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்து செயல்பட்டு வந்தார்.

மேலும் ரங்கூன், சிங்கப்பூர், ஜோகன்னஸ்பர்க் ஆகிய நகரங்களிலும் இவருக்கென பெரும் கட்டமைப்பு இருந்து வந்தது. சுமார் 200 பாஸ்போர்ட்களுடன் பல்வேறு நாடுகளுக்கும் தங்கு தடையின்றி பறந்து, புலிகளுக்கு பெரும் பண வசூலிலும் அவர் ஈடுபட்டு வந்தார். 1991ம் ஆண்டு டோங்நோவா என்ற கப்பல் புலிகளுக்கு ஆயுதங்களை கடத்திச் செல்ல முயன்றபோது சென்னை அருகே பிடிபட்டது. அதிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த ஆயுத கடத்தலிலும் குமரன் பத்மநாதன் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடி வந்தனர். இது தொடர்பாக சர்வதேச காவல் துறையின் ஒத்துழைப்பையும் தமிழக போலீசார் கோரியிருந்தனர்.

இத்தகைய முக்கியமான புலிகளின் நெருங்கிய பிரமுகர் பாங்காக்கில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இத்தகவலை இலங்கை பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இவரது கைது புலிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், புலிகளின் ஆயுத சப்ளைக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அடியாகவும் கருதப்படுகிறது.

புலிகளுக்கான ஆயுத கடத்தல் விசாரணையில் மிகப் பெரிய திருப்பமாக இதை சர்வதேச போலீசார் கருதுகின்றனர். மேலும் இது குறித்து நடந்து வரும் புலன் விசாரணையில், ஆயுத கடத்தல், பணபரிமாற்றம், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதையடுத்து இலங்கை அரசு அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்று வலியுறுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டுள்ள குமரன் பத்மநாதன் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மட்டுமல்லாமல் அவரது மனைவி மதிவதனிக்கும் மிக நெருங்கிய நண்பர் என்ற முக்கிய தகவலும் ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப் பட்டவர் என்ற அதிர்ச்சி தரும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

கே.பி. கைது செய்யப்பட்டுள்ள தகவல் புலிகளின் சர்வதேச கட்டமைப்புக்கு மிகப் பெரிய இடியாக இறங்கியுள்ளது என்றும், வன்னியிலுள்ள புலிகள் முகாமில் பெரும் மாரடைப்பு போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் புலிகளின் வேவு பிரிவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கூறியதாக தாய்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.
யார் இந்த பத்மநாதன்? பரபரப்பு தகவல்கள்

புலிப்பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் மற்றும் ஆயுத சப்ளை செய்து வந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. புலிகளுக்கான ஆயுதங்களை கடத்தி வந்த அந்த மூலகர்த்தா பற்றிய தகவல்கள் வருமாறு: சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்கிற குமரன் பத்மநாதன் என்கிற "கே.பி.' (வயது 49). புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதக்கடத்தல் பிரிவின் மிக முக்கிய புள்ளியாவார்.தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் வசித்து வந்த அவர், சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்த மிகக் கொடிய பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம்பெற்றவராவார்.

பல பயங்கரவாத செயல்கள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவர் என்று கருதப்படுகிறது. பல பெயர்களை கொண்ட பத்மநாதன், 200க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்களை வைத்திருந்தார். மேலும் லண்டன், பிராங்பர்ட், ஏத்தேன்ஸ், அவுஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய இடங்களில் அவருக்கு வங்கி கணக்குகளும் உள்ளன.

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மட்டுமல்லாமல் அவரது மனைவி மதிவதனிக்கும் மிக நெருங்கிய நண்பராவார் இந்த கே.பி. புலிகளின் சர்வதேச குழுவில் மதிவதனியுடன் செயல்பட்டு வந்தார். பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமான கே.பி., புலிகளுக்கு ஆயுத சப்ளையும் மற்றும் பணசப்ளையும் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான ஆயுதங்கள், வெடி மருந்துகளை மட்டுமல்லாமல், தொழில் நுட்பத்தையும் அளித்து வந்த புலிகளின் ரகசிய சர்வதேச நடவடிக்கைகளின் மூலகர்த்தாவான பத்மநாதனின் நடவடிக்கைகள் "கே.பி. பிராஞ்ச்' என்ற சங்கேத குறியீடு மூலம் செயல்பட்டு வந்தது சர்வதேச போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் புலிகளின் போர்க்குழுவில் இடம்பெற்றிருப்பவர்களைப் போல வெளியுலகுக்கு அதிகம் தெரியமாட்டார்கள். புலிகளின் மற்றய பிரிவுகள் போல் இல்லாமல் "கே.பி. பிராஞ்ச்' சுதந்திரமாக இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. கே.பி. பிராஞ்ச் ஆயுதங்களை சிறிய அளவிலும், பெரிய அளவிலும் கடத்தி கடற்புலிகளுக்கு அளித்து வந்தது. ஆயுத சப்ளைக்காகவே மிகப் பெரிய ரகசிய கப்பல் கம்பெனியே இயங்கி வந்தது என்பது பிரமிப்பூட்டும் விஷயமாகும்.

இந்த கப்பல்கள் பெரும்பாலும் சரக்கு கையாளுவதை முக்கிய நடவடிக்கையாக கொண்டிருந்தன என்பதும், இதன் மூலம் திரட்டப்படும் பணத்தை கொண்டு ஆயுத சப்ளையும் செய்து வந்தன என்பதும் கூடுதல் தகவல்களாகும்.

மியான்மார், புக்கெட் எனப்படும் தாய்லாந்து தீவு ஆகியவற்றை தளமாக கொண்டு இந்த கப்பல்கள் செயல்பட்டு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஹெராயின் எனப்படும் போதைப் பொருள் கடத்தலிலும் இந்த கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில் இந்த கப்பல்கள் இயக்கப்படுவது வழக்கமாகும்.

1997ஆம் ஆண்டு தான்சானியாவிலிருந்து இலங்கை ராணுவத்திற்காக கொண்டு செல்லப்பட்ட நவீன ஆயுதங்களை மிக சாதுர்யமாக அப்படியே புலிகளுக்கு கடத்தியது கே.பி. பிராஞ்சின் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக தாய்லாந்தை தலைமையிடமாக கொண்டு புலிகள் செயல்பட்டு வந்துள்ளதும் பெரும் கட்டமைப்பை அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்ததும் சர்வதேச போலீஸ் நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, புலிகளின் கிழக்கு ஆசிய கட்டமைப்பு தளமாக கம்போடியாவையும் அவர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

No comments: