Saturday, August 2, 2008

தெற்காசிய நாடுகளுக்கு பயங்கரவாதம் ஒரு சாபக்கேடு - சார்க் மாநாட்டில் மகிந்த ராஜபக்ச உரை

தெற்காசிய நாடுகளுக்கு பயங்கரவாதம் ஒரு சாபக்கேடு - சார்க் மாநாட்டில் மகிந்த ராஜபக்ச உரை

சனி, 02 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்]

பயங்கரவாத்தை ஒழிப்பதற்கு பிராந்திய நாடுகள் வழங்கும் ஒத்துழைப்புக்கு மகிந்த ராஜபக்ச தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை கொழுபில் இடம்பெறும் 15வது சார்க் உச்சி மாநாட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அங்கு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத்தில் நல்ல பயங்கரவாதம் கூடாத பயங்கரவாதம் என பிரிவுகள் கிடையாது. பிராந்தியத்தில் பாதுகாப்பையும், சமாதானத்தையும், அமைதியையும் நிலைநாட்டுவதற்கு பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பது மிகவும் அவசியம். தெற்காசிய நாடுகளுக்கு பயங்கரவாதம் ஒரு சாபக்கேடாக அமைந்துள்ளது.

சிறீலங்காவில் பயங்கரவாதத்தை ஒழிப்பது கைகொடுத்து உதவிகள் வழங்கிய நாடுகளுக்கு எனது நன்றிகள். கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத்தை அடியோடு அழித்துள்ளோம். அங்கு பங்கரவாத்தில் ஈடுபட்டோர் ஐனநாயக வழிக்குத் திரும்பிவிட்டார்கள். சிறுவர் போராளியாக இருந்தவர் இன்று கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று பயங்கரவாதிகளிடம் இருந்து வடக்கையும் கைப்பற்றுவோம். அங்கும் ஐனநாயகத்தை நிலைநாட்டுவோம்.

தென்னாசிய நாடுகளில் பொருளாதாரம் மிகப் பலமானது. அதன் ஸ்திரத்தன்மை தொடர்ந்து பேணப்பட வேண்டும். அத்துடன் தென்னாசிய நாடுகளிடையே புலனாய்வுத் தகவல்கள், தொடர்பாடல்கள் என்பவற்றை பரிமாறிக்கெள்ள வேண்டும் என மகிந்தராஜபக்ச அங்கு மேலும் உரையாற்றியுள்ளார்.

பங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தில் நாங்கள் தோல்வியடைக் கூடாது - மன்மோகன் சிங்

சனி, 02 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்]

பயங்கரவாதத்தை தோற்கடிக்க நாங்கள் இணைந்து செயற்படுவோம் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் ஆரம்பமாகிய 15வது சார்க் உச்சி மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சார்க் பிராந்திய நாடுகளில் பயங்கரவாதம் இன்று தலைதூக்கியுள்ளது. இந்த நாடுகளுக்கு பயங்கரவாதமே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தீவிரவாதிகளுக்குத் தெரியும் பயங்கரவாத்திற்கு எல்லைகள் இல்லை என்று. பங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தில் நாங்கள் தோல்வியடைக் கூடாது.

அண்மையில் இடம்பெற்ற காபூலிலுள்ள இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் அஹமதாபாத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் என்பன பயங்கரவாதம் இன்னமும் உக்கிரமான நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

சவால்களை எதிர்கொள்வதற்கு தெற்காசிய நாடுகளிடம் அதிக வளங்கும் திறன்களும் உள்ளன. கடந்த நான்கு வருடங்களில் இந்தியா 8.8 விழுக்காடு பொருளாதாரத்தில் வளச்சியடைந்துள்ளது. இதேபோன்று ஏனைய தெற்காசிய நாடுகளும் வளர்ச்சி அடைந்துள்ளன.

தெற்காசிய சுங்கச் சங்கம் மற்றும் தெற்காசிய பொருளாதாரச் சங்கம் என்பவற்றை அமைப்பதற்கு நாங்கள் ஏற்கனவே இணைக்கம் தெரிவித்திருந்தோம் என மன்மோகன் சிங்கு அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவித்துள்ளார்.


Friday, August 1, 2008

"ஆனந்த விகடன்" கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தமிழ்நாட்டில் புலிகளுக்கு 54.25% ஆதரவு- தமிழீழமே தீர்வு- 55.44%- தடையை நீக்க வேண்டும்- 47.65% "ஆனந்த விகடன்" கருத்துக்கணிப்பு முடிவுகள்!
[வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:37 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" தெரிவித்துள்ளது.
ஆனந்த விகடன் இதழில் (06.08.08) இது தொடர்பில் இடம்பெற்றுள்ள கருத்துக் கணிப்பு விவரம்: