Monday, January 28, 2008

ஈழப்போரும் ஊடக நாட்டியமும்- சில வாசிப்புகளும்

மக்களின் வரிப்பணத்தில் வடிவமைக்கப்பட்ட நவீன ராடாரை சிறிலங்காவிற்கு வழங்கியது கனடா
[செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2008, 04:51 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]
சிறிய படகுகளைக் கூட கண்டறியும் நவீன ராடார் சாதனத்தை சிறிலங்காவிற்கு கனடிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கனடிய மக்களின் வரிப்பணத்தில் வடிவமைக்கப்பட்ட நவீன ராடார் சாதனத்தை கனடிய அரசாங்கம் சிறிலங்காவில் நிறுவ தீர்மானித்துள்ளது. உயர் அலைவரிசை கொண்ட இந்த ராடார் சாதனம் 39 மில்லியன் டொலர் பெறுமதியில் வடிவமைக்கப்படடிருந்தது. அதனை ஒட்டாவா பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், றெதோன் நிறுவனமும் இணைந்து வடிவமைத்திருந்தன.

இது உலகில் உள்ள ராடார்களில் மிக நவீனமானது எனப் பல வருடங்களுக்கு முன்னர் கூறப்பட்டது. எனினும் இந்த ராடார் சாதனம் பொதுமக்களின் தொலைத்தொடர்புகளை குறுக்கீடு செய்வதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து அதன் பரீட்சார்த்த பரிசோதனைகள் நிறுத்தப்பட்டதுடன், திட்டமும் கைவிடப்பட்டிருந்தது.

ஆனால் பரீட்சார்த்த ராடாரானது 10 வருடங்களாக சிறப்பாக செயற்பட்டு வந்துள்ளதாக அதன் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த உயர் அலைவரிசை கொண்ட ராடார்களை உற்பத்தி செய்து வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை கனடிய றெதொம் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த ராடாரை தற்போது சிறிலங்காவிற்கு கனடிய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வேறு பல நாடுகளும் அதனை பெற்றுக்கொள்வதற்கு முன்நிற்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ராடாரானது தற்போது பாவனையில் உள்ள பெரும்பாலான ராடார்களை விட மிகவும் அதிக தூரத்திற்கு அப்பால் கப்பல்களை கண்டறியும் சக்கி கொண்டது. அதாவது 200 கடல்மைல்கள் (370 கி.மீ) தூரத்திற்கு அப்பால் அது கப்பல்களை கண்டறியும் தன்மை கொண்டது. ராடார் தொழில்நுட்பத்தில் கனடா முன்னணியில் திகழ்வது குறிப்பிடத்தக்கது.



கருணாவை அவரது குடும்பத்துடன் இணைய விடாது தடுப்பது மனித உரிமை மீறல்: கோத்தபாய
[செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2008, 05:09 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணாவை அவரது குடும்பத்துடன் இணைய விடாது பிரித்தானியா தடுப்பது மனித உரிமை மீறலாகும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தனது மனைவியும், பிள்ளைகளும் பிரித்தானியாவில் வசிப்பதனால் பிரித்தானியாவிற்குச் செல்வதற்கு தனக்கு உதவி புரியுமாறு கருணா என்னைக் கேட்டிருந்தார். நான் அவரை அங்கு அனுப்புவதற்கு மூன்றாவது நட்பு நாடு ஒன்றின் ஊடாக முயற்சி செய்திருந்தேன். ஆனால் அது கைகூடவில்லை. இதன் பின்னர் அவருக்கு உதவும் முயற்சியை நான் கைவிட்டு விட்டேன். இது நீண்ட காலத்திற்கு முன்னர் நடைபெற்றது.

கருணாவை சிறிலங்காவிற்கு வெளியே அனுப்பும் தேவை எமக்குக் கிடையாது. ஏனெனில் அவர் எமக்குப் பயன் உள்ளவர். அவர் எவ்வாறு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டார் என்பது எனக்குத் தெரியாது.

ஆனால் எனது மனதில் எழும் கேள்வி என்னவெனில் அவர் எவ்வாறு பிரித்தானியாவுக்கான விசாவைப் பெற்றுக்கொண்டார் என்பது தான். பிரித்தானியாவிற்கான விசாவை பெற்றுக்கொள்வது அவ்வளவு இலகுவானது அல்ல. அங்கு பாதுகாப்புக்கள் பலமானவை. கருணாவை அவரது குடும்பத்துடன் இணையவிடாது பிரித்தானியா அரசு தடுப்பது மனித உரிமை மீறலாகும் என்றார் அவர்.

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவே தனக்கு போலியான கடவுச்சீட்டை வழங்கியதாக கருணா கடந்த வாரம் பிரித்தானியாவின் நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கோத்தபாய ராஜபக்சவின் குற்றச்சாட்டுக்களுக்கு கருத்து கூறுவதனை சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதரகத்தின் பேச்சாளர் தவிர்த்து கொண்டுள்ளதுடன், கருணா போலியான கடவுச்சீட்டுடன் எவ்வாறு பிரித்தானியாவுக்குள் நுழைந்தார் என்பது தொடர்பாக தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


தமிழ் தேசியவாதம், சிங்களப் பேரினவாதம், இஸ்லாமியத் தமிழர்கள் இதுவே இன்று கிழக்கை ஆக்கிரமிக்கும் புதிய புலிக்கூட்டமைப்பின் வாதமும் ( பணம் பேசும்)

இத்தனை ஆண்டுகாலமாக தமிழ் தேசியவாதம் பேசி தமிழர்களை ஏமாற்றியது போதாதென்று ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி ஏப்பம் விட்ட ஆயதம்தாங்கி அட்டூழியங்கள் செய்த தமிழ்த்தலைவர்கள் இன்னும் இன்னும் தமிழ் மக்கள் மேல்சவாரி செய்ய நினைப்பது மிகந்த வேதனை தரும்விடயமாகும. காலத்துக்கு காலம் தத்தம் பதவிகளைக் காப்பற்றிப் பணபலம் பெற எதையும் செய்ய துணிந்தவர்கள இவர்கள்;? தமிழ்மக்கள் படுகின்ற அத்தனை துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தாம்தான் காரணகர்த்தாவாக விளங்கியவர்கள் என்பதை மறந்து, ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அப்பட்டமான துரோகங்கள் அத்தனையும் செய்தவர்கள் என்பதனைமறந்து மக்களைப் பற்றி பேசுகின்றார்கள். இதேமக்களை நடுரோட்டில் விட்டுவிட்டு தலைநகரில் அரசபாதுகாப்போடு சுகபோகவாழ்க்கை வாழ்ந்துகொண்டு அதனை மறைப்பதற்கு புதிது புதிதாக கதைகளை கட்டி இந்தமக்களை ஏமாற்றி வருவதை மக்கள் ஒண்றும் மறந்து விடமாட்டார்கள. காலத்துக்குக் காலம் அரசதரப்பால் தமிழ்மக்களுக்கு வழங்கபட்ட அத்தனை தீர்வு யோசனைகளையும் புலிகள் உட்பட தமிழ்தலைவர்கள் அத்தனை பேரும் நொண்டிசாட்டுகள் சொல்லி தமிழ்மக்களுக்கு கிடைக்கவிடாமல் பண்ணியது இந்ததலமைகள் தான் என்பதனை இன்றுவரை நிரூபித்து வருகிறார்கள்.

இதே தொழிலைதான் இன்று கிழக்கில் நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலை எந்தவழியிலாவது தடுத்து நிறுத்துவது, இல்லையேல் எந்தவகையிலாவது குழப்புவது என்று கங்கணம் கட்டியுள்ளார்கள். தமிழ்மக்களை இயல்பாகச் சிந்திக்கவிடாது வியாகூலப் படுத்தி, அவர்களது இயல்பு வாழ்வைக் குழப்பி, அவர்களது அவலவாழ்வில் தங்கள் தலைமையை தக்க வைப்பதே இவர்களுடைய நோக்கமே தவிர இதில் மக்கள் நலன் ஏதும் இருப்பதாக நாம் உணரவில்லை. இது இப்படி இருக்க கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் ஆளும் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது மிகவும் வரவேற்கத் தக்கது. இதனுடாகவே கிழக்குமாகாணத்தில் பல அபிவிருத்திப் பணிகளை செய்யமுடியும் என்பதனை 1960 காலபகுதியில் யாழ்மாவட்டதில் அல்பிரட்துரையாப்பா அன்றய ஆட்சியாளர்களுடன் இணைந்து நிரூபித்திருக்கிறார் என்பதனை இந்த தலைவர்கள நினைத்து பார்பது நன்று.

ஏற்கனவே சுனாமி அபிவிருத்திக்கென்று சர்வதேச நாடுகளால் வழங்கப்பட்ட ஏறத்தாள 1800 மிலலியன் டொலர் அபிவிருத்தி நிதியாகக் காத்திருக்கிறது. இந்த நிதி அளவானது அன்று அல்பிரட் துரையப்பாவால் யாழ் நகர அபிவிருத்திக் கென்று பயன்படுத்தப் பட்டதிலும் பார்க்கப் பல பத்து மடங்கு அதிகமானதாகும். கிழக்குக்கு அல்பிரட் துரையப்பா போன்ற மாநகரசபை நகரசபைத் தலைவர் கிடைப்பதுவே பாக்கியமாக இருக்கிறது.

இன்றய சூழலில் கிழக்குவாழ மக்கள் அறழைபேர்ந்த குறுமன தமிழ்தலைவர்களது காலத்துக்கொவ்வாத கோரிக்கைகளை ஏற்பது முக்கியம் அல்ல. அங்கு உள்ள சூழலுக்கேற்ப அங்கு வாளும் மூவினமக்களுடன் இணைந்து இசைந்து பரஸ்பரம் பகிர்ந்து வாழ்வதே முக்கியம். முதலாம் இரணடாம் உலகயுத்தத்தில் தமக்குள்ளே கொல்லுப் பட்டு அழிந்த ஐரோப்பிய நாடுகள் தமது பழைய பகைமை அத்தனையையும் மறந்தது மாத்திரமல்ல அந்தப் பழைய கசப்பான அனுபவங்களை மீண்டும் நினைத்தப் பார்ப்பதுகூட அருமையாகி விட்டது.

உலக நிலமையோ இப்படியிருக்க இந்தப் படு பிற்போக்குவாதிகள் மீண்டும் மீண்டும் தமிழ், சிங்கள மக்களிடையேயான முரண்பாடுகளை, சண்டையை மூட்டுபவர்களாக இருக்கிறார்கள். இதற்கு இந்திய உபகண்டவரலாறு பல உதாரணங்களை வழங்கும். இந்தியாவிலே தமிழருக்கும் தெலுங்கருக்கும், தெலுங்கருக்கும் ஒட்டருக்கும், ஒட்டருக்கம் வங்காளிகளுக்கம், வங்காளிகளுக்கும் ஹிந்திக் காறருக்கும், ஹிந்திக் காறருக்கும் பஞ்சாபிகளுக்கும், பஞ்சாபிகளுக்கும் ராஜபுத்திரர்களுக்கும், ராஜபுத்திரர்களுக்கும் பஞ்சாபியர்களுக்கும், பஞ்சாபியர்களுக்கம் மகாராஷ்டிரர்களுக்கும், இந்ததுக்களுக்கும் முகமதியர்களுக்கும் என்று எண்ணற்ற யுத்தங்கள் நடைபெற்று லட்சகணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களை ஒருவரையொருவர் அடக்கி ஆண்டதும் சூறையாடினதும் வரலாறு. இன்று இவர்கள் எலலோருமே தாம் இந்தியர்கள் என்று ஐக்கியப் பட்டு வாழ்கிறார்கள். சீனர்களும் இந்தியர்களும் ஐக்கியப் பட்டுவிட்டனர். ஆனால் இலங்கையிலுள்ள சிங்களவரும் தமிழரும் உலகம் முடியுமட்டும் ஊழிக்காலம்மட்டும் விரோதிகளாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். அண்மையில் ரி.எம்வி.பியினருக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் உடன்பாட்டைப் பொறுக்கமாட்டாதா தாட்டான் தமிழத் தலைவர்ரொருவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சிப் பிரமுகரொருவரிடம் சென்று நீங்கள் பிழையானவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகப் பிரஸ்தாபித்துள்ளார். ரி.எம்.வி.பி எத்தனையோ தவறுகள் செய்தபோதும் தாம்செய்த தவறுகளுக்குப் பிராயற்சித்தமாக ஆளும் சிங்களக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததே மகத்தானதாகும்.

தேசியவாத குறுங்குழுக் கொலை, கொள்ளை வழிப்பறியைத் தொழிலாகக் கொண்ட தமிழ் பிற்போக்குவாதிகளுடன் கூட்டுச் சேர்வதை நிராகரித்து ஒரு தேசிய சிங்களக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது வரலாற்றுக் காலக் குறியாகும். வடமாகாணமும் எதிர்காலத்தில் இந்த வழியைப் பின்பற்றினால் மாத்திரம் உய்வுண்டாகும்.

பரபஞ்சமே நிரந்தரமில்ாலாதது என்று அறிவியல் திருப்பித் திருப்பி நிரூபித்துக்காட்டிய இந்த அறிவியற்சகாப்தத்தில் நிரந்தரத் தீர்வு பற்றிக் கூறும் அசடர்களை எண்ணி அழுவதா சிரிப்பதா? ஏதுவுமே நிலையானதும் நிரந்தரமானதுமல்ல என்று புத்தபகவான் சொல்லி 2500 வருடங்களாகி விட்டது. உலகபொருளாதரம் எப்ப பொறியும் என்று அண்மைய பங்குச் பொறிவுகள் காட்டியதோடு எந்த நாட்டு அரசாங்கமும் எப்பவும் பொறியலாம் என்றிருக்கும் பொழுது தமிழர் பிரச்சனைக்கா நிரந்தரத் தீர்வு வரப் போகிறது. அதை இலங்கை அரசியலோ அல்லது இலங்கை மக்களின் அரசியல் உணர்வின் உயர்ச்சியோ மட்டும் தனித்து நிர்ணயிக்காது. ஒற்றையாட்சியைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று ஏதோ ஏதோ தமிழ் மக்களிடம் அண்மையில் போயே அறியாத தாட்டான் ஒன்று ஏதோ ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் அபிப்பிராய வாக்கெடுத்த தோறணையில் அரசியற்சித்தாட்டம் ஒன்று அலம்புகிறது. அதென்ன ஒற்றை அட்சி. இரட்டையாட்சி மூட்டையாட்சி. தமிழனைத் தமிழன் ஆண்டால் தமிழர்கள் எல்லோரும் நிம்மதியாக வாழ்ந்துவிடுவார்களோ?

எழுபதுகளுக்கு முன் பெரும்பான்மைப் பொறியிலாளர்கள் ஓவர்சியர்கள் கொந்தராத்துத் தமிழர்கள் எல்லாம் பொதுச் சொத்தைச் சூறையாடிதுதான் வரலாறு. பிரச்சினை ஆளுபவன் தமிழனோ சிங்களவனோ என்பதல்ல. ஆளுபவன் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக ஆட்சிசெய்கிறானா. உலக மோசடிக்காறர்களின் பணப்பையைக் கொழுக்கவைப்பதன் மூலம் தான் கொழுக்க விரும்பகிறானா என்பதுவே அரசியல். அறிஞர் அண்ணாத்துரை ஆட்சிக்காலத்திலேதானே விவசாயிகள் சுடப்பட்டதும் வெண்மணிக் கிராமம் சாம்பலாகியதுமாகும். கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் குப்பம் சேரியும் ஒழிந்து விட்டதா? சேரிப்புறம் நாற்றமடிக்கவிலலையா? இலங்கையில் சமாதானமும் அதன் ஒட்டுமொத்த முன்னேற்றமும் எவ்வளவு விரைவாக தமிழ் மக்கள் தமது சிங்ள விரோதத்தை விடுகிறார்களோ, எவ்வளவு விலரவாக சிங்களமக்கள் தமிழ்விரோதிகளைத் தமது அரசியல் வானிலிருந்து அகற்றுகிறார்களோ அதுவே நிர்ணயிக்கும். தமிழர்களுக்கு விளங்கும் மொழியிற் சிங்களவர் பேசுவதும் சிங்களவர்க்கு விளங்கம் மொழியில் தமிழர்கள் பேசுவதும் பரஸ்பரம் ஒருவரையொருவர் உயர்ந்த மட்டத்தில் புரிந்துகொள்வதுமே நிர்ணயிக்கும்.

வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில் மேலும் கிழக்கிலுள்ள சிங்கள, முஸ்லிம் தமிழர்கள் ஐக்கியப்படுவதே சம்பவிக்கும். இதுவே யாதாத்தம். இதனை மறுபவர்கள் புலிகளும் அதன் அடிவருடிகளுமே தவிர மக்கள்நலன்கொண்டவார்களாக இருக்க முடியாது என்பதனை நாம்வலியுறித்தி கூற விரும்புகிறோம். இத்தனை ஆண்டுகாலமாக தமிழ் தேசியவாதம் பேசி தமிழர்களை ஏமாற்றியது போதாதென்று ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி ஏப்பம் விட்ட ஆயதம்தாங்கி அட்டூழியங்கள் செய்த தமிழ்த்தலைவர்கள் இன்னும் இன்னும் தமிழ் மக்கள் மேல்சவாரி செய்ய நினைப்பது மிகுந்த வேதனை தரும்விடயமாகும். காலத்துக்கு காலம் தத்தம் பதவிகளைக் காப்பற்றிப் பணபலம் பெற எதையும் செய்ய துணிந்தவர்கள இவர்கள்;? தமிழ்மக்ள் பட்டு படுகின்ற அத்தனை துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் தாம்தான் காரணகர்த்தாவாக விளங்கியவர்கள் என்பதை மறந்து, ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அப்பட்டமான துரோகங்கள் அத்தனையும் செய்தவர்கள் என்பதனைமறந்து மக்களைப் பற்றி பேசுகின்றார்கள்.

இதேமக்களை நடுரோட்டில் விட்டுவிட்டு தலைநகரில் அரசபாதுகாப்போடு சுகபோகவாழ்கை வாழ்ந்துகொண்டு அதனை மறைப்பதற்;கு புதிது புதிதாக கதைகளை கட்டி இந்தமக்களை ஏமாற்றி வருவதை மக்கள் ஒன்றும் மறந்து விடமாட்டார்கள் காலத்துக்குக் காலம் அரசதரப்பால் தமிழ்மக்களுக்கு வழங்கபட்ட அத்தனை தீர்;வு யோசனைகளையும் புலிகள் உட்பட தமிழ்தலைவர்கள்; அத்தனை பேரும் நொண்டிசாட்டுகள் சொல்லி தமிழ்மக்களுக்கு கிடைக்கவிடாமல் பண்ணியது இந்ததலமைகள் தான் என்பதனை இன்றுவரை நிரூபித்து வருகிறார்கள்.

இதே தொழிலைதான் இன்று கிழக்கில் நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலை எந்தவழியிலாவது தடுத்து நிறுத்துவது, இல்லையேல் எந்தவகையிலாவது குளப்புவது என்று கங்கணம் கட்டியுள்ளார்கள். தமிழ்மக்களை இயல்பாகச் சிந்திக்கவிடாது வியாகூலப் படுத்தி, அவர்களது இயல்பு வாழ்வைக் குளப்பி, அவர்களது அவலவாழ்வில் தங்கள் தலைமையை தக்க வைப்பதே இவர்களுடைய நோக்கமே தவிர இதில் மக்கள் நலன் ஏதும் இருப்பதாக நாம் உணரவில்லை. இது இப்படி இருக்க கிழக்கில் ரீ.எம்.வி.பியினர் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் ஆளும் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது. மிகவும் வரவேற்கத் தக்கது. இதனுாடாகவே கிழக்குமாகாணத்தில் பல அபிவிருத்த்திப் பணிகளை செய்யமுடியும் என்பதனை 1960 காலபகுதியில் யாழ்மாவட்டதில் அல்பிரட்துரையாப்பா நிரூபித்தார். அன்றைய ஆட்சியாளர்களுடன் இணைந்து நிரூபித்திருக்கிறார் என்பதனை இந்த தலைவர்கள் நினைத்து பார்பது நன்று.

ஏற்கனவே சுனாமி அபிவிருத்திக்கென்று சர்வதேச நாடுகளால் வழங்கப்பட்ட ஏறத்தாள 1800 மிலலியன் டொலர் அபிவிருத்தி நிதியாகக் காத்திருக்கிறது. இந்த நிதி அளவானது அன்று அல்பிரட் துரையப்பாவால் யாழ் நகர அபிவிருத்திக் கென்று பயன் படுத்தப் பட்டதிலும் பார்க்கப் பல பத்து மடங்கு அதிகமானதாகும். கிழக்குக்கு அல்பிரட் துரையப்பா போன்ற மாநகரசபை நகரசபைத் தலைவர் கிடைப்பதுவே பாக்கியாக இருக்கிறது. இன்றய சூழலில் கிழக்குவாழ மக்கள் அறழைபேர்ந்த குறுமனதமிழ்தலைவர்களது காலத்துக்கொவ்வாத கோரிக்கைகளை ஏற்பது முக்கியம் அல்ல. அங்கு உள்ள சூழலுக்கேற்ப அங்கு வாளும் மூன்று இனமக்களுடனும் இணைந்து இசைந்து பரஸ்பரம் பகிர்ந்து வாழ்வதே முக்கியம். முதலாம் இரணடாம் உலகயுத்தத்தில் தமக்குள்ளே கொல்லுப் பட்டு அழிந்த ஐரோப்பிய நாடுகள் தமது பழைய பகைமைகள் அத்தனையையும் மறந்தது மாத்திரமல்ல அந்தப் பழைய கசப்பான அனுபவங்களை மீண்டும் நினைத்தப் பார்ப்பதுகூட அருமையாகி விட்டது.

உலக நிலமையோ இப்படியிருக்க இந்தப் படு பிற்போக்குவாதிகள் மீண்டும் மீண்டும் தமிழ் சிங்ளச் சண்டையை மூட்டுபவர்களாக இருக்கிறார்கள். இதற்கு இந்திய உபகண்டவரலாறு பல உதாரணங்களை வழங்கும். இந்தியாவிலே தமிழருக்கும் தெலுங்கருக்கும், தெலுங்கருக்கும் ஒட்டருக்கம், ஒட்டருக்கம் வங்காளிகளுக்கம், வங்காளிகளுக்கும் ஹிந்திக் காறருக்கும், ஹிந்திக் காறருக்கும் பஞ்சாபிகளுக்கும், பஞ்சாபிகளுக்கம் ராஜபுத்திரர்களுக்ளும், ராஜபுத்திரர்களுக்கும் பஞ்சாபியர்களுக்கும், பஞ்சாபியர்களுக்கும் மகாராஷ்டிரர்களுக்கும், இந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும், என்று எண்ணற்ற யுத்தங்கள் நடைபெற்று லட்சகணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களை ஒருவரையொருவர் அடக்கி ஆண்டதும் சூறையாடினதும் வரலாறு. இன்று இவர்கள் எலலோருமே தாம் இந்தியர்கள் என்று ஐகியப் பட்டு வாழ்கிறார்கள். சீனர்களும் இந்தியர்களும் ஐக்கியப் பட்டுவிட்டனர். ஆனால் இலங்கையிலுள்ள சிங்களவரும் தமிழரும் உலகம் முடியுமட்டும் ஊழிக்காலம்மட்டும் விரோதிகளாக இருக்கவேண்டும் என்று இந்தத் தமிழ் தலைவர்கள் கூறுகிறார்கள்.

அண்மையில் ரி.எம்.வி.பியினருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் உடன்பாட்டைப்பொறுக்கமாட்டாத தாட்டான் தமிழ்த் தலைவர் ஒருவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சிப் பிரமுகரொருவரிடம் சென்று நீங்கள் பிழையானவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகப் பிராஸ்தாபித்துள்ளார். ரி.எம்.வியினர் பிரபாகரன் என்னும் கொடிய விலங்குடன் இணைந்திருந்தபோது தாம்செய்த தவறுகளுக்குப் பிராயற்சித்தமாக பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தனர். அத்துடன் ஆளும் சிங்களக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததே மகத்தானதாகும். தேசியவாத குறுங்குளு கொலை கொள்ளை வழிப்பறியைத் தொழிலாகக் கொண்ட தமிழ் பிற்போக்குவாதிகளுடன் கூட்டுச் சேர்வதை நிராகரித்து ஒரு தேசிய சிங்களக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது வரலாற்றுக் காலக் குறியாகும்.

வடமாகாணமும் எதிர்காலத்தில் இந்த வழியைப் பின்பற்றினால் மாத்திரம் உய்வுண்டாகும். பரபஞ்சமே நிரந்தரமில்லாதது என்று அறிவியல் திருப்பித் திருப்பி நிறுத்திக்காட்டிய இந்த அறிவியற்சகாப்தத்தில் நிரந்தரத் தீர்வு பற்றிக் கூறும் அசடர்களை எண்ணி அழுவதா சிரிப்பதா? ஏதுவுமே நிலையானதும் நிரந்தரமானதுமல்ல என்று புத்தபகவான் சொல்லி 2500 வருடங்களாகி விட்டது. உலகபொருளாதரம் எப்ப பொறியும் என்று அண்மைய பங்குச் பொறிவுகள் காட்டியதோடு எந்த நாட்டு அரசாங்கமும் எப்பவும் பொறியலாம் என்றிருக்கும் பொழுது தமிழர் பிரச்சினைக்கா நிரந்தரத் தீர்வு வரப் போகிறது. அதை இலங்கை அரசியலோ அல்லது இலங்கை மக்களின் அரசியல் உணர்வின் உயர்ச்சியோ மட்டும் தனித்து நிர்ணயிக்காது. ஒற்றையாட்சியைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று ஏதோ ஏதோ தமிழ் மக்களிடம் அண்மையில் போயே அறியாத தாட்டான் ஒன்று ஏதோ ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் அபிப்பிராய வாக்கெடுத்த தோறணையில் அரசியற்சிதாட்டான் ஒன்று அலம்புகிறது. அதென்ன ஒற்றை அட்சி. இரட்டையாட்சி மூட்டையாட்சி. தமிழனைத் தமிழன் ஆண்டால் தமிழர்கள் எல்லோரும் நிம்மதியாக வாழ்ந்துவிடுவார்களோ? ஏழுபதுகளுக்கு முன் பெரும்பான்மைப் பொறியிலாளர்கள் ஓவர்சியர்கள் கொந்தராத்துத் தமிழர்கள் எல்லாம் பொதுச் சொத்தைச் சூறையாடியதுதான் வரலாறு. பிரச்சினை ஆளுபவன் தமிழனோ சிங்களவனோ என்பதல்ல. ஆளுபவன் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக ஆட்சிசெய்கிறானா. ஊலக மோசடிக்காறர்களின் பணப்பையைக் கொழுக்கவைப்பதன் மூலம் தான் கொழுக்க விரும்பகிறானா என்பதுவே அரசியல். அறிஞர் அண்ணாத்துரை ஆட்சிக்காலத்திலேதானே விவசாயிகள் சுடப்பட்டதும் வெண்மணிக் கிராமம் சாம்பலாகியதுமாகும். கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் குப்பம் சேரியும் ஒழிந்து விட்டதா? சேரிப் புறம் நாற்றமடிக்கவிலலையா? இலங்கையில் சமாதானமும் அதன் ஒட்டுமொத்த முன்னேற்றமும் எவ்வளவு கெதியாக தமிழ் மக்கள் தமது சிங்ள விரோதத்தை விடுகிறார்களோ, எவ்வளவு கெதியாக சிங்களமக்கள் தமிழ்விரோதிகளைத் தமது அரசியல் வானிலிருந்து அகற்றுகிறார்களோ அதுவே நிர்ணயிக்கும். தமிழர்களுக்கு விளங்கும் மொழியிற் சிங்களவர் பேசுவதும் சிங்களவர்க்கு விளங்கம் மொழியில் தமிழர்கள்பேசுவதும் பரஸ்பரம் ஒருவரையொருவர் உயர்ந்த மட்டத்தில் புரிந்துகொள்வதுமே நிர்ணயிக்கும். வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில் மேலும் கிழக்கிலுள்ள சிங்கள தமிழர்கள் ஐக்கியப்படுவதே சம்பவிக்கும். இதுவே யாதாத்தம். இதனை மறுபவர்கள் புலிகளும் அதன் அடிவரிடிகளுமே தவிர மக்கள்நலன்கொண்டவார்களாக இருக்க முடியாது என்பதனை நாம் வலியுறித்தி கூற விரும்புகிறோம். நன்றியுடன் தவம்

Sunday, January 27, 2008

சில பதிவுகள்

சுதந்திரதினத்திற்கு முன்பு வடக்கில் மாகாண சபை நிர்வாகம்:

சுதந்திரதினத்திற்கு முன்பு வடக்கில் மாகாண சபை நிர்வாகம்:ஒன்றினை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இந்த மாகாணசபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஐவரடங்கிய நிர்வாகக்கட்டமைப்பும் நியமிக்கப்பட விருக்கிறது. இந்த சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக தேவையேற்படும் பட்சத்தில் அமைச்சர் பதவியை துறப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சபையில் இருக்கும் ஐவரில் மூவர் தமிழர்கள் என்றும் ஏனைய இருவரில் ஒருவர் முஸ்லிம் பிரதிநிதி என்றும் மற்றவர் சிங்கள பிரதிநிதி என்றும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சபையை நியமிக்கவிருக்கிறார். இந்த மாகாண சபை ஒரு வருடத்திற்கு இயங்கும். அதன்பின்னர் வடக்கிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டிருக் கிறார். அபிவிருத்தி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து அரசுக்கு ஆலோ சனைகளை வழங்குவதே இந்த மாகாண சபையின் பணியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய மாகாண சபைகளில் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்றோருக்கு உள்ளது போன்ற அதிகாரங்களை வடக்கு இடைக்கால நிர்வாக சபையினருக்கு இருக்கும். இதேவேளை 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வுத்திட்ட யோசனைகளை அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவும் ஜனாதிபதி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். எனினும் வடக்கு மாகாணசபைக்கான அங்கீகாரத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும், தேவைப்படின் இது குறித்து நாடாளுமன்றில் ஆராயலாம் என்றும் அரசாங்க உயர் மட்டங்கள் தெரிவித்துள்ளன.

ஈழவேந்தனுக்கு பதிலாக இஸ்லாமிய சட்டத்தரணி ரசீன் முகம்மது இமாம் நியமனம்
[வியாழக்கிழமை, 24 சனவரி 2008, 03:48 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இஸ்லாமியத் தமிழரான சட்டத்தரணி ரசீன் முகம்மது இமாம் (வயது 63) நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட மா.கா.ஈழவேந்தனின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 5 ஆம் நாள் இவர் அதிகாரபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரசீன் முகம்மது இமாம் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவர் ஆவார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளிலும் அவர் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தார்.

1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய இவர், கொழும்பில் தங்கியிருந்து சட்டத்தரணி பணியை ஆற்றி வந்தார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளராக இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது.

தேசியப் பட்டியல் வரிசையில் ஈழவேந்தனுக்கு அடுத்த இடத்தில் இருந்த இவரை வெற்றிடாகிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் முடிவு செய்திருந்தது.

இது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தேர்தல் ஆணையாளருக்கு நேற்று முன்நாள் அறிவித்திருந்தார். இதனையடுத்து ரசீன் முகம்மது இமாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவிருப்பதான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ளது.


BBC....News

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரான ரஜீம் முகமது இமாம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டப்போது, வடமாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.


சிறிலங்கா அரசுதான் போலிக் கடவுச்சீட்டை வழங்கியது: கருணா
[சனிக்கிழமை, 26 சனவரி 2008, 03:36 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்]
பிரித்தானியாவுக்கு தான் தப்பிச் செல்வதற்கு தேவையான போலியான கடவுச்சீட்டை சிறிலங்கா அரசும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சவும்தான் தனக்கு வழங்கியதாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த கருணா பிரித்தானியா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்று பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பி.பி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவில் இருந்து இராஜதந்திரிகளுக்கு உரிய போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைந்ததை கருணா ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பிரித்தானியாவின் ஐல்ஸ்வெத் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டணையை வழங்கியுள்ளது.

இந்த விசாரணைகளின் போது தனக்கு இராஜதந்திரிகளுக்கு உரிய கடவுச்சீட்டை சிறிலங்கா அரசும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சவுமே வழங்கியதாக கருணா தெரிவித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்குள் நுழைந்த கருணா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரித்தானியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பிரித்தானிய சிறையில் கருணா மீது தாக்குதல்: "த நேசன்"
[ஞாயிற்றுக்கிழமை, 27 சனவரி 2008, 05:27 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடிய சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுக்களின் முன்னாள் தலைவரான கருணாவுக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

9 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள கருணா மீது சிறையில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகம் உள்ள சிறையிலேயே கருணா அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் அரசியல் கைதியாகவே வைக்கப்பட்டுள்ளார். அந்தச் சிறையில் இரு தமிழ்க் கைதிகளும் உள்ளனர். அவர்கள் வேறு குற்றங்களுக்காக அங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள தமிழ்க் கைதிகள் கருணா மீது வெந்நீரைக் கொட்டியதுடன், ஆயுதங்கள் கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கருணாவுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே கருணா தனது சிறைவாசத்தை நிறைவு செய்த பின்னர் அவர்மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

கருணா தனது சிறைவாசத்தை அங்கு கழித்த பின்னர் அவர் சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும். ஆனால் அவர் மீதான போர்க்குற்றங்களை பிரித்தானியாவில் விசாரணை செய்யுமாறு அனைத்துலக மன்னிப்புசபை, மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன பிரித்தானியா அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.

சித்திரவதைகள், சிறார் படைச்சேர்ப்பு, கடத்தல், படுகொலைகள் போன்ற அவர் மீதான போர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கருணா மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Wednesday, January 23, 2008

தற்போதைய அரசியலமைப்பு வரையறைக்குள் மாகாணங்களுக்கு அதிகாரமளிக்க ஒரு குறுகிய கால செயற்றிட்டம்


[24 - January - 2008] [Font Size - A - A - A]

*விதாரண குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழு அதன் இடைக்கால அறிக்கையொன்றை நேற்று புதன்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருக்கிறது.

ஒன்றரை வருடகாலமாக 63 அமர்வுகளை நடத்திய விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அக்குழு அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் `மாகாணங்களுக்கு கூடுதல் பட்ச அதிகாரப் பரவலாக்கல் செய்வதை அனுமதிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளையே,' அந்த அறிக்கையில் முன்மொழிந்திருக்கிறது.

இறுதி அறிக்கைக்கு முன்னோடியான ஒரு ஆவணம் என்றே சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழு அதன் இடைக்கால அறிக்கையை வர்ணித்திருக்கிறது. தற்போதைய அரசியலமைப்பின் ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதி பதியினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளே முன்மொழியப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப் பரவலாக்கல் விவகாரத்தைப் பொறுத்தவரை, அடிப்படைக் கட்டமைப்புகளில் எந்தவித மாற்றமும் இன்றி நிருவாக ரீதியான மாற்றங்களுக்கே யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப் படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் அங்கு மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கூறும் சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழு, அண்மைய எதிர் காலத்தில் வடக்கில் தேர்தல் நடத்தப்படக்கூடியதாக நிலைமை இல்லையென்பதால் தற்போதைய அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு இசைவாக அந்த மாகாணத்தில் இடைக்காலசபையொன்றை நிறுவுவதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்க முடியுமென்று விதந்துரைத்திருக்கிறது.

புதிய அதிகாரப் பரவலாக்கல் முறைமையொன்றுக்கு வழிவகுக்க கூடிய முற்றிலும் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான யோசனைகள் அடங்கிய தனியான அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் தனது தலைமையிலான குழுவினால் பின்னர் கையளிக்கப்படும் எனறு பேராசிரியர் விதாரண தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி (ஜனநாயகக்குழு) ஜாதிக ஹெல உறுமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) மலையக மக்கள் முன்னணி, ஷ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி.) தேசிய காங்கிரஸ் மேலக மக்கள் முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய அரசியற் கட்சிகளே சர்வகட்சி மாகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவில் அங்கம் வகிக்கின்றன.

இடைக்கால அறிக்கையின் முழு விபரம்.

1. அறிமுகம்

1.1. தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படையாக அமையக்கூடிய ஒரு தொகுதி யோசனைகளைத் தயாரிக்குமாறு ஜனாதிபதியினால் சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழுவுக்கு ஆணை வழங்கப்பட்டது. இக்குழு ஒன்றரை வருடகாலமாக 63 அமர்வுகளை நடத்தியபிறகு கருத்தொருமிப்பு ஆவணம் பூர்த்திசெய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் அண்மைய எதிர்காலத்தில் அந்த ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும். அதன் பெறுபேறு பொருத்தமான அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அடிப்படையானதாக அமையும். அதை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களைக் கொண்டு வரவேண்டியிருக்கும். சில பிரிவுகளைப் பொறுத்தவரை சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமாக மக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டியிருக்கும். இவற்றைச் செய்வதற்கான உகந்த சூழ்நிலை உருவாக்கப்படுவதற்கு கணிசமான காலம் தேவை.

1.2. இத்தகையதொரு சூழ்நிலையில் சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழு அதன் சொந்த முன்மொழிவுகளை கருத்தில் எடுத்து, குறுகிய கால இடைவெளியில் மாகாணங்களுக்கு கூடுதல் பட்சமானதும் பயனுறுதியுடையதுமான அதிகாரப்பரவலாக்கலைச் செய்வதற்கான செயற்திட்டமொன்றை இனங்கண்டிருக்கிறது. இதன் நோக்கம் தமிழ் பேசும் மக்களின் குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்றவர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்வதேயாகும். தற்போதைய அரசியலமைப்பு (1978 அரசியலமைப்பு) வரையறைக்குள் இந்தச் செயற்திட்டம் அமையும். சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவினால் முன்மொழியப்படுகின்ற இச்செயற்திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும். அத்துடன், வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்படும் மாகாண சபைகள் அமைக்கப்படும் வரை இடைக்கால ஏற்பாடொன்றையும் இத்திட்டம் விதந்துரைக்கிறது.

1.3. 1987 ஜூலையில் இந்திய- இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் 1978 அரசியலமைப்புக்கு 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தத்தின் விளைவாக இலங்கைபூராவும் மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்பட்டது. பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் இரு பட்டியல்களின் கீழ் அதாவது மாகாணங்களுக்கான பட்டியல், பொதுப் பட்டியல்- குறித்துரைக்கப்பட்டன. ஏனைய சகல அதிகாரங்களும் ஒரு ஒதுக்கீட்டு பட்டியலின் ஊடாக மத்திய அரசாங்கத்துக்கு ஒதுக்கப்பட்டன. இந்த மூன்று பட்டியல்களிலும் உள்ளட்டக்கப்படாத எந்தவொரு விடயதானமும் அல்லது செயற்பாடும் ஒதுக்கீட்டுப் பட்டியலின் கீழ் வருபவையாகவே கருதப்படும்.

1.4. பொதுப்பட்டியலின் ஊடாக மாகாணங்களுக்குப் பரவலாக்கம் செய்யப்பட்ட விடயதானங்களும் செயற்பாடுகளும் எந்த வகையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு சொந்தமானவையாகவே இந்த விடயதானங்களும் செயற்பாடுகளும் கருதப்பட்டு அவற்றை மத்திய அரசாங்கமே அதன் கைகளில் வைத்திருந்தது.

2. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு கூடுதல் பட்ச அதிகாரப் பரவலாக்கலை அனுமதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள்

2.1. சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பொறுத்தவரை தற்போது இருக்கக்கூடிய குறைபாடுகளை இல்லாமல் செய்து அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

2.2. மாகாணசபைகள் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவதற்கு வசதியாக போதுமான நிதி அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும்.

2.2.1. மாகாணங்களின் நோக்கெல்லைக்குள் வருகின்ற எந்தவொரு விடயதானத்தைப் பொறுத்தவரையிலும் மத்திய அரசாங்கத்தினால் மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்திட்டங்களுக்கான சகல நிதிகளும் அந்தந்த மாகாண நிருவாகங்களின் ஊடாகவே மத்திய அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டும்.

3. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் பட்ச அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்படுவதை அனுமதிப்பதற்கு தேவையான விசேட ஏற்பாடுகள்

3.1. கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இருப்பதாகவும் அந்தத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழு கருதுகிறது.

3.2. வடமாகாணத்தின் நிலைமை அமைதியானதாக இல்லை. வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதென்பது அண்மைய எதிர்காலத்தில் சாத்தியமாகப் போவதில்லை. அதனால், அதிகாரப் பரவலாக்கத்தின் பயன்களை வடமாகாணத்தின் மக்களும் அனுபவிப்பதற்கு வகை செய்ய மாற்று ஏற்பாடு ஒன்று அவசியமாகிறது.

3.3. வடக்கில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதால், அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் வடமாகாணத்தில் இடைக்காலச் சபையொன்றை நிறுவுவதற்கான உகந்த உத்தரவை ஜனாதிபதியால் பிறப்பிக்க முடியும். அத்தகைய இடைக்கால சபை சட்டங்களை இயற்ற வேண்டிய அவசியமும் இருக்கலாம்.

3.4. ஆளுநர் அவருக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை செயற்படுத்தும் விடயத்தில் மாகாணமொன்றின் இடைக்காலச் சபை அவருக்கு உதவியும் ஆலோசனையும் செய்யும். மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் வரை இடைக்கால சபை செயற்படும்.

3.4.1 இடைக்கால சபை அந்த மாகாணத்தின் இனத்துவ குணாம்சத்தை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும்.

3.4.2. எனவே, அரசியல் அனுபவமும் மாகாணத்தினதும் அதன் மக்களினதும் அபிவிருத்தியில் கடப்பாட்டுடன் கூடிய அக்கறையும் கொண்ட மாகாண மக்களினால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நபர்களை உள்ளடக்கியதாக இடைக்காலசபை இருக்கவேண்டும் என்று முன்மொழியப்படுகிறது.

4. அரசியலமைப்பின் அரசகருமமொழிகள் ஏற்பாடுகளின் அமுலாக்கம்

4.1 மொழிகள் தொடர்பிலான அரசியலமைப்பின் 4 ஆவது அத்தியாயத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்களை பாராளுமன்றம் நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் உடனடி நடவக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

4.2. சட்டவாக்க குணாம்சத்திலும் பார்க்க நிருவாக ரீதியான தன்மைகளை எடுக்கக் கூடிய பரிகாரநடவடிக்கைகளை எடுப்பதற்கான பல கட்டங்கள் இருக்கின்றன. பின்வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் அக்கறையுடன் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(அ) வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரமல்ல, நாடு பூராவும் தமிழ் பேசும் மக்கள் பொலிஸ் நிலையங்களில் தங்கள் சொந்தமொழிகளில் தொடர்பாடல்களைச் செய்து அலுவல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக போதுமான எண்ணிக்கையில் தமிழ் பொலிஸ் அதிகாரிகளை ஆட்திரட்டல் செய்ய வேண்டும்;

(ஆ) பொதுமக்கள் தங்களது சொந்த மொழிகளில் அமைச்சுகள், அரசாங்க திணைக்களங்கள், சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுடன் அலுவல்களைச் செய்து கொள்வதற்கு வசதியாக ஊழியர்களை நியமித்தல் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் உட்பட சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்;

(இ) மக்களைத் தேடிச் சென்று அதேஇடத்தில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வசதியாக தமிழ் மொழியில் தாராள பரிச்சயமுள்ள அதிகாரிகளைக் கொண்ட நகரும் அலுவலகங்களை கிரமமாக நடத்துவதற்கான ஒழுங்கமைப்புகள் செய்யப்பட வேண்டும்;

(4) மேற்கூறப்பட்டவாறு தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்குகின்றவற்றையொத்த பிரச்சினைகளை வடக்கிலும் கிழக்கிலும் வாழும் சிங்களச் சிறுபான்மையினர் எதிர்நோக்குகிறார்கள். அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

Thursday, January 10, 2008

சுயநிர்ணய உரிமையுடன் தமிழர்கள் வாழ்வதற்கு சர்வதேச சமூகம் அங்கீகாரம் வழங்க வேண்டும்: விடுதலைப் புலிகள்



இலங்கையில் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைபட்சமாக வெளியேறிய நிலையில் சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கினை புரிந்துகொண்டு தமிழர் தேசத்தின் நியாயமான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வியாழக்கிழமை (10.01.08) வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கினை புரிந்துகொண்டு தமிழர் தேசத்தின் நியாயமான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்

2002 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தின் ஆதரவுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையினை சிறிலங்கா அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக முறித்துக் கொண்டதையிட்டு நாம் மிகவும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய இராணுவ வெற்றிகளைக் குவித்து படை வலுச்சமநிலையில் மேலோங்கியிருந்த நிலையில், 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கமானது போரில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாதென்பதை உணர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்வந்தது.

இதனடிப்படையில் போர்நிறுத்த ஒப்பந்தமானது 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி இருதரப்புக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைகள் காரணமாக அழிவுக்குள்ளாகியிருந்த தமிழீழ தாயகத்தில் போர் அமைதியை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையினை எமது மக்கள் அனுபவிப்பதற்கு வழிகோலுவதற்கும் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் அத்திவாரமாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் இது கைச்சாத்திடப்பட்டது.

தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள ஆக்கிரமிப்புப் படையினரால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இராணுவ வலயங்கள் அகற்றப்பட்டு,

அங்கு தமிழ் மக்கள் மீளக்குடியமர்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு,

தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரால் மூடப்பட்டிருந்த மக்கள் போக்குவரத்துப் பிரதான பாதைகளான ஏ-9 யாழ்-கண்டி, செங்கலடி-பதுளை வீதிகள் திறக்கப்பட்டு,

பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், மக்கள் குடியிருப்புக்கள் ஆகியனவற்றிலிருந்து சிறிலங்காப் படையினர் வெளியேறி மற்றும் மீன்பிடித் தடைகளை முழுமையாக நீக்கி இயல்பு வாழ்க்கையை மீண்டும் தமிழர் பிரதேசத்தில் நிலைநாட்டுவதற்கான ஏற்பாடுகள் இந்த ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த ஒப்பந்தத்தினை நூறு வீதம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசைகளிலும், சர்வதேச பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போதும் மற்றும் தமது பல்வேறு அறிக்கைகளிலும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்ததுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தம்மால் இயன்றவரை ஆக்கபூர்வமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சிறிலங்கா அரசோ அல்லது சிறிலங்காப் படையினரோ போர்நிறுத்த உடன்படிக்கையினை முழுமையாக செயற்படுத்தி இயல்பு வாழ்க்கையை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கால வரையறைகளுக்கு அமைய மேற்கொள்ளாது தொடர்ந்தும் தனது போர்நிறுத்த மீறல் நடவடிக்கைகளைத் தொடர்ந்த வண்ணமிருந்தன. அவ்வாறிருந்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசுடன் 2002 செப்ரெம்பர் முதல் 2003 மார்ச் வரை ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இதய சுத்தியுடன் கலந்துகொண்டு சிறிலங்கா அரசாங்கமும் அதனது படைகளும் போர்நிறுத்த உடன்படிக்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய சரத்துகளை தொடர்ச்சியாக மீறிவருவது தொடர்பாக அனுசரணையாளர்கள், கண்காணிப்புக்குழுவினர் மற்றும் சர்வதேச சமூகத்தினர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

சிறிலங்கா அரசானது போர்நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களை மீறியது மட்டுமன்றி, பேச்சுவார்த்தை மேசைகளில் இணக்கம் காணப்பட்ட உடனடி மனிதாபிமானத் தேவைகளுக்கான உப குழு, பகைமைத் தணிப்பு மற்றும் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கான உப குழு போன்ற குழுக்கள் செயற்பட முடியாதவாறு பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு அமைதி முயற்சிகளைப் பலவீனப்படுத்தியது.

போர் நிறுத்த உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமை, பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாமை, போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் சமாதான முயற்சிகளின் ஒரு தரப்பாகிய விடுதலைப் புலிகளை சம தரப்பாக நடாத்துவதற்குத் தவறியமை ஆகிய காரணங்களால் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இருந்தபோதிலும், விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்தோ அல்லது சமாதான முயற்சிகளிலிருந்தோ முற்றிலுமாக வெளியேறாது, தொடர்ந்தும் நோர்வே அரசின் அநுசரணையுடன் சமாதான வழிகளிலே ஒரு நிரந்தரமான அமைதித் தீர்வை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வகையில், பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்காகவும் தமிழர் தாயகப் பகுதியில் இடைக்கால நிர்வாகத்தைக் கொண்டுவந்து போரினால் பேரழிவுக்குட்பட்டிருந்த தமிழர் தாயகப் பகுதிகளில் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு இயல்பு வாழ்க்கையினை ஏற்படுத்துவதற்காகவும் சிறிலங்கா அரசாங்கம் ஓரு முன்மொழிவினை முன்வைக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தினார்கள்.

சிறிலங்கா அரசு முன்வைத்த இடைக்கால நிர்வாகத்திற்கான முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக்கூடத் தீர்ப்பதற்குத் தேவையான அதிகாரங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. இதனால், விடுதலைப் புலிகள் நோர்வேயின் அனுசரணையுடன், பல நாடுகளிலுமுள்ள சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையினை முன்வைத்தனர். சிறிலங்கா அரசானது பேச்சுவார்த்தைக்கான ஓர் அடிப்படையாகக்கூட இதனை ஏற்கமறுத்தது. இதன் காரணமாக, பேச்சுவார்த்தைக்குப் புத்துயிர் கொடுப்பதற்கு ஏதுவாக, விடுதலைப் புலிகள் நோர்வே மற்றும் சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைய எடுத்த முயற்சிகள் எந்தவிதப் பலனையும் தந்துவிடவில்லை.

இதேபோலவே ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் மீள்கட்டுமானப்பணிகளை மேற்கொள்வற்கெனக் கைச்சாத்திடப்பட்ட பொதுக்கட்டமைப்பினையும் சிறிலங்கா அரசானது வழமைபோலவே குப்பைக்கூடைக்குள் வீசியது.

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் எள்ளளவும் கருத்தில் எடுக்காது, சிறிலங்கா அரசானது தமிழர் தாயப் பகுதியில் பாரிய இராணுவ நடவடிக்கைகளைத் தொடராக மேற்கொண்டு மனித அவலத்தினை ஏற்படுத்திநின்ற வேளையில், மீண்டும் நோர்வே அனுசரணையாளர்களும் சர்வதேச சமூகமும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று வேண்டிக்கொண்டதற்கமைய விடுதலைப்புலிகள் ஜெனிவாவில் 2006 ஆம் ஆண்டு இரு தடவைகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்கள்.

இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளின்போதும் விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். அத்துடன், விடுதலைப் புலிகள் தாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நூறு வீதம் நடைமுறைப்படுத்தத் தயாராகவுள்ள அதேவேளை, சிறிலங்கா அரசாங்கமானது போர் நிறுத்த உடன்படிக்கையின் ஒரு சரத்தான ஏ-9 வீதியினைத் திறந்து யாழ். குடாநாட்டில்; போக்குவரத்துப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு திறந்தவெளிச் சிறச்சாலையில் அடைபட்டதுபோன்று அவலப்படும் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் அவலங்களை நீக்குவதற்கு முன்வரவேண்டும் என மனிதாபிமான ரீதியில் வேண்டுகோள் விடுத்த போதிலும் சிறிலங்கா அரசாங்கமானது இக்கோரிக்கையினை நிராகரித்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தை முயற்சிகள் மீண்டும் தொடரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவராகவும் அரசியல்துறைப் பொறுப்பாளராகவும் விளங்கிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சிறிலங்கா அரசானது படுகொலை செய்தபோதிலும் கூட விடுதலைப் புலிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான முடிவு எதனையும் எடுக்கவில்லை.

சிறிலங்கா அரசானது தற்போது போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து எதுவிதமான நியாயங்களுமின்றி ஒருதலைப்பட்சமாக விலகிவிட்டது.

இந்நிலையிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையினை வரிக்கு வரி அமுல்படுத்தி அதனை நூறு வீதம் கடைப்பிடிப்பதற்குத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

அத்துடன், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சமாதான முயற்சிகளுக்கான அனுசரணைப் பணியினை நோர்வே அனுசரணையாளர்களே தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

சிங்கள இனவாத அரசுகள் காலத்திற்குக் காலம் தமிழ் மக்களின் நிரந்தர அமைதிக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒப்பந்தங்கள் அனைத்தையுமே நடைமுறைப்படுத்தாது உதாசீனப்படுத்தியதே வரலாறாகும்.

தமிழ் மக்கள் நிரந்தரமான அமைதியுடன் தமது தாயக பூமியிலே சுதந்திரமாக, கௌரவமாக வாழ்வதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதுமே இடமளிக்கமாட்டார்கள் என்பதை தற்போது முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அண்ணளவாக ஆறு வருடங்கள் நீடித்த போர் நிறுத்த உடன்படிக்கையினை முறித்தமை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

எனவே சர்வதேச சமூகம் இதனைப் புரிந்துகொண்டு, சிறிலங்கா அரசுகளின் பொய்ப் பிரசாரத்திற்கு எடுபட்டு விடுதலைப் புலிகள்மீது விதித்திருக்கும் தடைகளை உடனடியாக நீக்கி, தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை ஏற்று, அவர்களின் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழுவதற்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 8, 2008

வன்னிப் பெருஞ்சமர் தொடங்கும் நிலையில் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றுக் கடமை என்ன?: முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம்

வன்னிப் பெருஞ்சமர் தொடங்கும் நிலையில் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றுக் கடமை என்ன?: முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம்
[வியாழக்கிழமை, 03 சனவரி 2008, 04:26 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்]
வன்னிப் பெருஞ்சமர் தொடங்கும் நிலையில் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றுக் கடமை என்ன? என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் 29.12.07 ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணல்:

கேள்வி: விடுதலைப் புலிகள் ஏடு என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது? அது தனது பணியை எந்த வகையில் முன்னெடுத்துச் செல்கிறது?

பதில்: விடுதலைப் புலிகள் ஏடு எங்களின் தேசியத் தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. எங்களின் ஏடு தொடங்கப்பட்ட போது, எங்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய கருத்துக்களை அரசியல் ரீதியாகவோ அல்லது இராணுவ ரீதியாகவோ அதன் உண்மை நிலவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கம் அன்று இருந்தது.

ஏனைய ஏடுகள் பெரும்பாலும் எங்களின் போராட்டச் செய்திகளை தெளிவாகப் போடாத காலகட்டம் அது. அந்தக்கால கட்டத்தில்தான் எங்கள் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வையும், எங்கள் போராட்டத்தின் தன்மைகளையும் எடுத்தியம்ப வேண்டும் என்கிற நோக்கில் தலைவர் அவர்களால் விடுதலைப் புலிகள் ஏடு தொடங்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் ஏடு தமிழ்நாட்டில் வைத்தே தொடங்கப்பட்டது. அங்கிருந்துதான் சில இதழ்கள் வெளிவந்தன. பின்னர் 1990 ஆம் ஆண்டிலிருந்து எங்களின் தாயக நிலப்பரப்பிலிருந்துதான் இன்று வரை வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

எங்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் இங்கு எத்தனையோ அற்புதமான வீரங்கள், தியாகங்கள் வெளிப்படுத்தப்படுத்திய படி இருக்கின்றன.

எங்களின் ஈழத் தமிழ் இனத்திற்கு இது முன் அனுபவம் இல்லாத ஒரு விடயம்.

போராட்டத்தின் தொடக்க கட்டங்களில் வீர- தீரமாக, தியாகங்கள் நிறைந்த படி, ஏன் அழிவுகளையும் சந்தித்த படி போராட்டத்தை முன்னெடுக்க முடியுமா? என்கிற மயக்கமெல்லாம் எங்களின் மக்களிடம் இருந்தது.

ஆனால், அந்த மயக்கங்களை எல்லாம் தலைவர் அவர்கள் தன்னுடைய தெளிவான, தீர்க்கதரிசனமான நடவடிக்கைகள் மூலமாகவும் படிப்படியான இராணுவ கட்டமைப்புக்கள் மூலமாகவும் வெற்றிகண்டு, இன்று எங்களின் போராளிகளை ஒரு பெரிய உன்னதமான மரபுப் போர் ஆற்றல் வாய்ந்த போர் வீரர்களாக வளர்த்தெடுத்து விட்டுள்ளார்.

களமுனை வீரமும், தியாகமும் நிறைந்ததுடன் அழிவுகளும் சேர்ந்ததுதான். இத்தகைய களமுனை யதார்த்தம் ஒன்று போர் இலக்கியமாக படைக்கப்பட வேண்டும் என்கின்ற அவா தலைவரிடம் இருந்தது. அத்தகைய ஓரு போர் இலக்கியம் படைக்கும் பணியையும் விடுதலைப் புலிகள் செய்ய வேண்டும் என்றும் தொடக்க கட்டத்தில் தலைவர் எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கு அமைவாக இன்றுவரை எங்களின் அரசியல்- இராணுவ முன்னெடுப்புக்கள், அவை தொடர்பான விளக்கங்கள் என்பனவற்றுடன் போர் இலக்கியம் என்கிற விடயமும் உள்ளடக்கப்பட்டதாக, எங்களின் ஒட்டுமொத்தமான தமிழீழ மக்களின் ஒரு விடுதலைக் குரலாக இன்றுவரை விடுதலைப் புலிகள் ஏடு வெளிவந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: விடுதலைப் புலிகள் ஏடு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியோடு போட்டியிட்டு எந்த வகையில் தனக்குள் இணைத்துக் கொண்டு செல்கிறது?

பதில்: விடுதலைப் புலிகள் பத்திரிகையைப் பொறுத்தவரையில் போட்டி என்பதற்கு இடமில்லை. அது தனித்துவமான ஒரு ஏடு.

2001 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கான போர் நிறுத்த உடன்படிக்கை வரும்வரை "லெற்றர் பிறஸ்" என்று சொல்லப்படுகின்ற எழுத்து வடிவு என்கின்ற பழைமையான அச்சுக்கலை மூலமாகத் தான் எங்களின் ஏட்டை வெளிக்கொணர்ந்தோம்.

மேற்குலக நாடுகளில் வசிப்பவர்களுக்கு அது கண்களைவிட்டு அகன்ற விடயமாகக்கூட இருக்கும். இப்பொழுதும் பழைய இதழ்களைப் பார்த்தால் அவற்றில் ஒரு அச்சுக்கலை நேர்த்தி ஒன்று கடைப்பிடிக்கப்பட்டிருப்பது தெரியும். அதன் பின்னர் எங்களின் மண்ணில் ஏற்பட்ட சமாதான சூழலைப் பயன்படுத்தி நாங்கள் தொழில்நுட்பக் கருவிகளையும் அதற்குள் இணைத்து புதிய நவீன ரகமான அச்சு இயந்திரங்களையும் அதற்குள் உள்வாங்கி விடுதலைப் புலிகள் ஏட்டை வெளியிட்டு வருகிறோம். எங்களின் ஏடு இணையத்தளத்திலும் வெளியிடப்படுகிறது.

தற்போது போர் நெருக்கடி ஏற்பட்டிருகிறது. இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் நாங்கள் நின்று நிலைத்து விடுதலைப் புலிகள் ஏட்டை இன்று வரைக்கும் நவீன அச்சுக்கலையுடன் இணைத்தே வெளியிட்டு வருகிறோம். ஆனால், மிக நீண்டகால நெருக்கடிகள் என வரும்போது நாங்கள் புதிய அச்சுக்கலை வடிவமைப்பை விட்டு பழைய அச்சுக்கலையை நாட வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் எது எப்படியிருந்தாலும் தொடர்ச்சியாக அந்த ஏட்டை வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறோம்.

கேள்வி: இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கிழக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனைப் போன்று வடக்கில் குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது. எஞ்சியிருக்கும் வன்னிப்பெருநிலப்பரப்பை மிக விரைவில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் போவதாக அரசாங்கத் தரப்பு கூறுகிறது. சிறிலங்கா இராணுவத்தளபதி பகிரங்கமாகவே அடுத்த வருட நடுப்பகுதிக்குள் வன்னியை தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து புலிகளை முற்றாக ஒழித்துவிடுவோம் என சூளுரைத்திருக்கிறார். இதனை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?

பதில்: கிழக்கில் அவர்கள் நில ஆக்கிரமிப்பில் வெற்றி பெற்றது, யாழ். குடாநாட்டை கணிசமான காலம் கையகப்படுத்தி வைத்திருப்பது என்கிற அடிப்படையில் அவர்கள் ஒரு வெற்றி பெருமித அறிக்கையை விட்டவண்ணம்தான் உள்ளனர்.

வரலாற்றை சற்றுப் பின்நோக்கித் திரும்பிப் பார்த்தால், 1979 ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய வார்த்தை வீரங்களை சிங்களத் தலைவர்களிடமிருந்து அல்லது தளபதிகளிடமிருந்து நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். அன்றிலிருந்து இன்றுவரை 20 வருடங்களை தாண்டிய அல்லது எட்டியபடியும் இன்றும் எங்களின் போராட்டம் வளர்ந்தபடிதான் இருக்கின்றது.

சிங்கள அரசியல்வாதிகளும் சரி, சிங்களத் தளபதிகளும் சரி, மேல்நாட்டு இராணுவ விற்பன்னர்களும் சரி எங்களின் விடுதலைப் போராட்டத்தை இராணுவ பரிமாணத்துடன் அலசி ஆராயும் போது ஒரு தவறு இழைக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது அவர்கள் ஒரு மரபுவழி அரச இராணுவத்தை எங்களுடன் ஒப்பிட்டுக் கதைப்பது போன்றே தெரிகிறது.

மரபு வழி அரச இராணுவம் ஒன்றைப் பொறுத்தவரை அந்த இராணுவத்திற்கு போரிடும் ஆற்றல், அதனுடைய தாக்குப் பிடிக்கும் திறன் என்பவை வேறுபட்டவை. அது அரசுகளுக்கிடையிலானது. அரசினுடைய பொருண்மிய அல்லது அரசினுடைய கட்சி அரசியல் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் உள்ளடங்கியிருப்பதால் ஒரு அரசினுடைய மரபு வழி இராணுவம் மிக நீண்டகாலமாகப் போரை முன்னெடுக்க முடியாது என்பது ஒரு யதார்த்தமாக இருக்கிறது.

இதற்கு சிறந்த உதாரணங்களாக முதலாம் உலக மகா யுத்தம், இரண்டாம் உலக மகா யுத்தங்களை நாங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த உலக மகாயுத்தங்கள் என்னதான் மிகப் பெரிய, பிரமாண்டமான, இராணுவப் பரிமாணத்துடன் நடைபெற்றாலும் கூட, ஒரு குறிக்கப்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கே வெற்றி- தோல்வி என்பது நிர்ணயிக்கப்பட்டன.

ஆனால், விடுதலைப் போராட்டம் என்பது அப்படியல்ல. விடுதலைப் போராட்டம் என்பது கெரில்லா யுத்திகளை அடித்தளமாகக் கொண்டு மெது மெதுவாக வளர்ந்து அந்த போராட்டத்தினது வளர்ச்சியில் ஒரு அரை மரபுவழி பின்னர் முழு மரபுவழி படையாக அது மாற்றம் கண்டு வரும்.

அதேவேளை, ஒரு விடுதலை இயக்கம் தன்னுடைய தாயக நிலப்பரப்பில் பல்வேறு இராணுவப் பரிமாணங்களையுடைய போர்க்களத்தையும் வைத்திருக்கும். உதாரணத்திற்கு ஒரு விடுதலை இயக்கம் மரபுவழிப் போர் புரியும் தளங்களையும் வைத்திருக்கும். அதேவேளை கெரில்லாப் பாணியில் தாக்குதல்களை நடத்துகின்ற தளங்களையும் வைத்திருக்கும்.

இப்படியாக பல்வேறு விதமான இராணுவ பரிமாணங்களுடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தும் இயக்கத்தின் தாயக நிலப்பகுதி விளங்கும்.

இதனை தமிழீழத்திற்கும் ஒப்பிட்டு பார்க்கலாம். தமிழீழத்திலும் ஒரு மரபு வழிச் சமர் நடைபெறுகின்ற தளப் பிராந்தியமும் இருக்கின்றது. கெரில்லாப் போர் நடவடிக்கைகள் நடைபெறுகின்ற தளப் பிராந்தியமும் இருக்கின்றது. வன்னி மாநிலம் என்பது எங்களின் முழுமையான கட்டுப்பாட்டை உள்ளடக்கி ஒரு மரபுவழிச் சமர் அரங்காக காட்சியளிக்கிறது.

ஒரு புறத்தில் வட போர் அரங்கு என்ற பெயரில் நாகர்கோவில், கிளாலி, முகமாலை என்கிற சமர் அரங்கைக் கொண்டிருக்க இன்னொரு புறத்தில் மன்னார், வவுனியா, மணலாறு என்கிற சமர் அரங்குகளைக் கொண்டதாக நீண்ட பெரும் சமர் அரங்கொன்று இங்கே காணப்படுகின்றது.

ஒட்டு மொத்தத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பில் எங்களின் இயக்கம் மரபுவழிச் சமரைத்தான் இன்றுவரை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், கிழக்கையும், யாழ்ப்பாணத்தையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னர் அது கெரில்லாப் போர் வடிவத்தில் நடைபெறுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.

கிழக்கு மாகாணத்தில் எங்களின் கட்டுப்பாட்டிற்குள் சில பகுதிகள் இருந்த போதிலும் எங்களின் சில இராணுவ இயலுமைகள் அல்லது எங்களின் இராணுவ யதார்த்தம் என்பது பின்தளம்.

உதாரணத்திற்கு மரபுப் போர்ப் படையொன்று ஒரு பிரதேசத்தில் நிலைகொண்டிருக்க வேண்டுமானால் நிச்சயமாக அதற்கு பலமான பின்தளமொன்று இருக்க வேண்டும். அந்தப் பின்தளத்தினுடைய இருப்புத்தான் ஓர் மரபு போர் சமர் அரங்கை நீட்டி நிலங்களை மீட்கவோ அல்லது நிலங்களை விடுவிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தும்.

ஆனால், தற்போதைய நிலையின்படி கிழக்கு மாகாணத்தில் சில கட்டுப்பாட்டுப் பகுதிகளை நாங்கள் வைத்திருந்தாலும், அங்கே நாங்கள் ஒரு அளவிற்கான வரையறுக்கப்பட்ட மரபுவழிச் சமரையே நடத்த முடியும். அதேவேளை கெரில்லாப் போரை ஒட்டு-மொத்தமாக எல்லா இடங்களிலும் நடத்த முடியும்.

இத்தகைய ஒரு இராணுவப் பின்புலத்தில் அல்லது இராணுவ உண்மை நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது தமிழீழத்தின் இராணுவ யதார்த்தத்தை பார்க்கலாம். அதேவேளை சிங்கள அரசு அல்லது சிங்களத் தளபதிகள் வெளியிடுகின்ற ஒட்டுமொத்த வெற்றிச் செய்திகளின் இராணுவ உண்மைத் தன்மைகளைப் பற்றியும் நாங்கள் ஆய்வு செய்ய முடியும்.

சிங்களத் தளபதிகளும் சரி, சிங்கள அரசும் சரி ஒட்டுமொத்த மரபுவழிப்படை அல்லது மரபுவழி முறையிலே சமர் நடைபெறுகின்றது என்ற ஒரு கண்ணோட்டத்திலேயே அவர்கள் தமது கருத்துக்களைக் கூறுகின்றனர்.

அதேவேளை, இங்கே நடக்கின்ற சண்டைகளில் புலிகள் இயக்கத்தை வெல்ல முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு பேச்சுவார்த்தைக் கட்டங்களின் போதும் ஒவ்வொரு அரச தலைவர்களும் தளபதிகளும் இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு இராணுவத்தளபதியும் பதவியிலிருந்து ஒய்வு பெற்றுச் சென்ற பின்னர் இவ்விதமான கருத்துக்களைத்தான் அதாவது புலிகளை இராணுவ ரீதியில் ஒடுக்க முடியாது என்ற உண்மையைத்தான் அவர்கள் சொல்லிவிட்டுச் செல்கின்றனர்.

பதவியிலிருக்கும்போது அரசியல் காரணங்களுக்காக அல்லது பதவி நிலைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இவ்விதமாகப் பொய் கூறுவது வழமைதான். அதேபோன்றுதான் நாங்கள் இப்போதும் பார்க்க முடியும்.

கிழக்கு மாகாணத்தை அவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர். அது உண்மை தான்.

யாழ். குடாநாடு நீண்டகாலமாக அவர்களின் கட்டுப்பாட்டிலிருக்கின்றது என்பதும் உண்மைதான்.

இன்று வன்னிப் போர் அரங்கில் மிகப்பெரிய மரபுவழிச் சமர் அரங்கொன்று திறக்கப்பட்டிருக்கிறது. இந்த சமர் அரங்கில் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்து போர் தொடங்கி ஒரு வருட காலத்திற்கும் மேலாகி விட்டது. ஆனால், சிங்களப் படைகளினால் வன்னிப் பெருநிலப்பரப்பில் இன்னமும் நில அபகரிப்பை செய்ய முடியாத நிலைதான் இருக்கின்றது.

தொடர்ச்சியான எத்தனையோ வலிந்த தாக்குதல்களை மேற்குறிப்பிட்ட மாதிரி வன்னியின் சகல முனைகளிலும் செய்து பார்த்துத் தான் இருக்கின்றனர். அனைத்து நடவடிக்கைகளிலும் அவர்கள் படுதோல்வியைத்தான் கண்டிருக்கின்றனர்.

இனிமேலும் தொடர இருக்கின்ற வன்னிப் பெருஞ்சமர் என்பது சிங்களம் எதிர்வு கூறுவது போல் அல்லது சிங்களத் தலைவர்கள் கர்ச்சிப்பது போல எதிர்வரும் ஆண்டு என்பது போர் ஆண்டாகத் தான் இருக்கப் போகின்றது.

அந்தப் போர் ஆண்டில் அவர்கள் மிகப்பெரிய வலிந்த தாக்குதல்களை வன்னிப்பெரு நிலப்பரபின் மீது தொடுக்கலாம். அது எல்லோருக்கும் தெரிந்த ஊகம் தான்.

அவ்விதமாக அவர்கள் பெரிய சமரைத் தொடுக்கும் போதுதான் வன்னிக் களத்தின் உண்மை நிலையை அவர்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். ஏற்கனவே பாரிய சமரொன்றை வன்னிப் பெருநிலப்பரபில் நடத்தி படுதோல்வி கண்டிருக்கின்றனர். அது அவர்களுக்கே தெரியும்.

வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட அந்த "ஜெயசிக்குறு" சண்டை தொடங்கும் போதும் இதே மாதிரியான கர்ச்சிப்புகளைத்தான் முன்னாள் இராணுவ அமைச்சராக இருந்த அனுருத்த ரத்வத்தையும் வெளியிட்டிருந்தார்.

வவுனியாவிலிருந்து நகர்ந்த "ஜெயசிக்குறு" படையணிகள் எங்கள் வன்னி பெரு நிலப்பரப்பின் மையம் என்று சொல்லப்படுகின்ற மாங்குளம் வரை கூட வந்திருந்தன என்பது உண்மைதான்.

பெருமெடுப்பில் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு, சிங்களப் படைகள் அகலக்கால் வைக்கும் போது அத்தகைய இராணுவ புறச்சூழலை எங்களது இயக்கம் மிகத்திறமையாகக் கையாண்டிருக்கின்றது. அதனை எங்களின் மாவீரர் நாள் அறிக்கையிலும் தலைவர் அவர்கள் வெகு சிறப்பாக குறிப்பிட்டிருந்தார்.

சிங்களம் தன்னுடைய படை நடவடிக்கை மூலமாக அகலக் கால் வைக்கும் போது அது பேரழிவுகளைச் சந்தித்திருக்கின்றது என்பதுதான் உண்மை. "ஜெயசிக்குறு" படை நடவடிக்கை ஒன்றரை வருடங்களாக மிகத் தீவிரமாக நடந்த ஒரு நடவடிக்கை.

இறுதியில் "ஜெயசிக்குறு" சண்டைகள் மூலமாக விழுங்கிய அந்த நிலங்களை மூன்று நாள் சமரில் எங்களின் இயக்கம் கைப்பற்றியிருந்ததுடன் ஒரு இராணுவ நிலையிலும் சிங்களப் படைகளை விட மேல்நிலைக்கு எங்களின் இயக்கம் வந்தது என்பது வரலாற்று உண்மை.

அந்த வரலாற்று வெற்றியின் விளைவாக எங்களுக்கு முன்னால் உள்ள ஆவணமாக சிங்களப்படைகள், சிங்கள அரசுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளது.

"ஜெயசிக்குறு" இராணுவக் களத்தில் நாங்கள் பெற்ற அபரிதமான வெற்றியின் ஒரு அரசியல் வடிவமாகத்தான் அந்த போர்நிறுத்த ஒப்பந்தம் இருக்கின்றது.

சிங்களத்தின் மிரட்டல் அல்லது அவர்களின் ஆசை வன்னிப் பெருநிலப்பரப்பைக் கைப்பற்றி, புலிகள் இயக்கத்தை ஒட்டு மொத்தமாக ஒழித்து, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி, இலங்கைத் தீவு முழுவதுமே சிங்களப் பௌத்த பூமியாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும். அதற்கான பேரினவாதக் கனவின் வெளிப்பாடாகத்தான் அவர்கள் அந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே அல்லாமல் உண்மை, யதார்த்தம் என்பது இங்கே வேறாகத்தான் இருக்கின்றது.

நாங்கள் ஒரு விடுதலை இயக்கம். இற்றைக்கு 25-30 வருடங்களாக எங்களின் இயக்கத்தை இராணுவ ரீதியில் தலைவர் அவர்கள் மிகத் திறமையான முறையில் கட்டி அமைத்துக்கொண்டு வருகிறார். நாங்கள் நிலங்களை மீட்டு வைத்திருந்த நேரத்திலும் சரி அல்லது நாங்கள் வைத்திருந்த நிலங்கள் சிலவற்றை இழந்த போதும் சரி எங்களுடைய பலம் எங்கள் படைக் கட்டமைப்பினுடைய அந்த வலு அன்றிலிருந்து இன்றுவரை வளர்ந்து செல்கிறது என்றுதான் கூறவேண்டும்.

நாங்கள் யாழ். குடாநாட்டிலிருந்து வெளியேறி வன்னிப் பெருநிலப்பரப்பை எங்களின் பிரதான தளமாகக் கொண்ட பின்னர்தான் எங்களின் இயக்கத்தில் எத்தனையோ புதிய படையணிகள் தோற்றம் பெற்றன. அதில் குறிப்பாக வான் படையைச் சொல்லலாம். இந்த புதிய படையணிகள் வன்னிக் களத்தில் ஆற்றிய பல்வேறு இராணுவச் சாதனைகள் சிங்களப் படைகளுக்கு, சிங்கள அரசிற்கு பெரிய நெருக்கடிகளைக் கொடுத்தன என்பது தெரியும்.

புலிகள் இயக்கத்தின் இராணுவ ஆற்றலை சர்வதேச வல்லுநர்களே புகழ்ந்து போற்றுமளவிற்கு வன்னியில் அனைத்துமே சிறப்பாக இடம்பெற்றன.

எனவே நிலங்களை இழப்பது என்பது எங்களின் இயக்கத்தைப் பொறுத்தளவில் போராட்டத்தின் தோல்வியாக அல்லது சிங்களப் படைகள் சொல்வது போல ஒரு போராட்டத்தின் தோல்வியாக புலிகளின் அழிவாகக் கொள்ள முடியாது. எங்களின் விடுதலை இயக்கம் இப்போதும் இராணுவ ரீதியில் பலம்பெற்ற நிலையில்தான் இருக்கின்றது. எங்களின் பேராட்டம் உண்மையில் இன்று ஒரு உயர்நிலைக்குச் சென்று விட்டது.

எனவே இனி வருங்காலத்தில் நடக்கவிருக்கின்ற தனித்த ஒரு சமரே திடீரென மிகப்பெரிய வெற்றியை அதுவும் இராணுவ வரலாற்றைப் பொறுத்தவரை மிகப்பெரிய இராணுவப் பிரளயத்தையே ஏற்படுத்தக்கூடிய அளவிற்குத் தான் வெற்றிகள் அமையும். அந்தளவிற்குத்தான் இப்பொழுது இராணுவப் பரிமாணம் இருக்கின்றது.

உண்மையில் உலக விடுதலைப் போராட்டங்களின் இறுதி வெற்றி என்பது இவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது என்பது உலக விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். விடுதலைப் போராட்டத்தில் மெது மெதுவாக அப்படியே படிப்படியாக முன்னேறிச் சென்று விடுதலையைப் பெற்ற நாடுகள் என்பது குறைவாகத்தான் இருக்கும். அந்த விடுதலைப் பேராட்டங்கள் அழிந்து கொண்டிருக்கின்றது அல்லது செயலிழந்து கொண்டிருக்கின்றது அல்லது செல்லாக்காசாகிக் கொண்டிருக்கின்றது என்ற வர்ணனைகள் உலகில் வந்து கொண்டிருக்கின்ற நேரங்களில்தான் பல விடுதலைப் போராட்டங்கள் அதன் முழுமையான பிரதான வெற்றியை அடைந்த வரலாற்றை நாங்கள் பார்க்கலாம்.

இதற்கு வியட்நாமை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். அல்லது கடைசியாக விடுதலையடைந்த எரித்திரிய விடுதலைப் போராட்டத்தைச் சொல்லலாம்.

எரித்திரிய விடுதலைப் போராட்டத்திலும் அவ்வாறுதான் தலைநகர் அஸ்மரா உட்பட எரித்திரிய பிரதேசங்கள் எத்தியோப்பியப் படைகளால் விழுங்கப்பட்டுக் கொண்டிருந்தன. எரித்திரிய விடுதலைப் போராட்டத்தின் சாவு என்பது எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற நேரத்தில் உலக ஊடகங்கள் கூட எரித்திரிய விடுதலைப் போராட்டத்தின் வெற்றி பற்றிய நம்பிக்கையெல்லாம் இழந்து அது பற்றிய செய்திகளைக்கூட ஒலி- ஒளி பரப்பாத சூழ்நிலையில், திடீரென ஒரு நாள் அங்கே பெரும் சமர் ஒன்று வெடித்து மிகக்குறுகிய காலத்தில் எரித்திரிய சேனை தங்களது தாயகத்தை மீட்டெடுத்து ஒரு தனிநாடு அமைத்தது என்பது ஒரு வரலாற்று உண்மை.

இது உண்மையில் விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றிற்கும் பொருந்தும். அது எங்களின் இயக்கத்திற்கும் பொருந்தும். சிங்கள அரசு அல்லது சிங்கள இராணுவத் தளபதிகள் கூறுவது போல் உண்மையில் அவ்வாறான இராணுவ நிலவரம் இங்கு இல்லை.

புத்தாண்டில் சிங்கள அரசு தொடுக்க இருக்கும் பெரும் போரின் முடிவு என்பது உண்மையில் சிங்களத்திற்கு அதன் இராணுவ பலம் என்ன அல்லது புலிகளைத் தாங்கள் ஒழிக்கலாமா என்கின்ற செய்தியை நிச்சயமாக வன்னிக் களத்தில் வைத்துச் சொல்வதாகவே இருக்கும்.

கேள்வி: மன்னார், வவுனியாப் பகுதிகளில் ஒரு பாரிய களமுனைகளை திறக்க இராணுவத்தினர் முயற்சி மேற்கொள்கின்றனர். அதேவேளை மணலாறு மற்றும் முகமாலையிலும் பாரிய வலிந்த தாக்குதல்களை இராணுவத்தினர் நடத்தி வருகின்றனர். நீங்கள் கூறியதன் அடிப்படையில் இவற்றை ஒரு பாரிய தாக்குதல் முன்னெடுப்பாகக் கருத முடியாதா?

பதில்: இந்த சமரின் இராணுவ பரிமாணத்தைப் பார்க்கும் இடத்து இதனைப் மிகப்பெரிய சமர் எனக்கொள்ள முடியாது. ஆனால் மிகப்பெரிய சமர் ஒன்றுக்கு முன்னரான ஒரு ஒத்திகைத் தாக்குதல்களாகவே இவை உள்ளன. ஆனால் இந்த தாக்குதல்களும் ஒரு வலிந்த தாக்குதல்கள்தான். சரதாரணமாக அல்லாது டாங்கிகளின் உதவியுடனும், வானூர்திகளின் உதவியுடனும், மோட்டார் பலங்களையும் பயன்படுத்தி, கனரக ஆயுதங்களின் துணையுடன் இந்த ஒத்திகைத் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

ஒரு பெரும் சமர் நடக்காமல் சாதாரணமான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று நாங்கள் சொல்வதில் ஒரு ஒப்பீடு ஒன்று உள்ளது.

அதாவது மன்னார் சமர்முனையிலோ அல்லது வடபோர் அரங்கிலோ சிங்களம் நடத்துகின்ற வலிந்த தாக்குதல் என்பது உண்மையில் பிரமாண்டமானதுதான். அது சாதாரணமானது அல்ல.

ஆனால், நாங்கள் எதிர்பார்க்கின்ற அல்லது உலகம் எதிர்பார்க்கின்ற "ஜெயசிக்குறு" போன்ற ஒரு மாபெரும் பரிமாணத்துடன் , மிகப் பெருமெடுப்பில் சிங்களத்தின் ஒட்டுமொத்தப் படைகளும் ஒன்றுதிரண்டு நடத்துகின்ற பெரும் சமருடன் ஒப்பிடுகின்ற போதுதான் இதனை சாதாரண மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்று நாங்கள் கூறுகின்றோம்.

உண்மையில் இராணுவப் பரிமாணத்தில் தற்போது நடப்பவை கணிசமான அளவிற்கு, ஒரு எல்லைக்கு மேற்பட்ட பெரிய வலிந்த தாக்குதல்களாகத்தான் இருக்கின்றன. அந்த தாக்குதல்களில் எதிரி பயன்படுத்தும் இராணுவ உபகரணங்கள் மற்றும் தாக்குதலின் விளைவாக எதிரிக்கு நேரும் சேதங்கள் சாவோ அல்லது எதிரியின் காயப்படுத்தல் தன்மைகளோ கணிசமான அளவு வலிந்த தாக்குதலைத் தான் சொல்கின்றது.

ஆனால் ஒட்டுமொத்தமாக பாரிய வலிந்த தாக்குதல்களை இந்த ஒரு வருடத்தில் சிங்கள அரசு நடத்தவில்லை என்றுதான் கூறலாம். இனி வரும் காலத்தில் அத்தகைய ஒரு சமரை நடத்துவதற்கான ஒரு ஒத்திகைத் தாக்குதல்களைத்தான் தற்போது அனைத்து முனைகளிலும் அவர்கள் நடத்தி வருகின்றனர். அது தான் உண்மை.

2008 ஆம் ஆண்டைத்தான் சிங்கள தேசம் பாரிய போராண்டாக பிரகடனப்படுத்துகின்றது. 2008 ஆம் ஆண்டில்தான் அவர்கள் ஒரு காலக்கெடுவை விதித்து சிங்கள மக்களுக்கு ஒரு ஆசையை ஊட்டியிருக்கின்றனர். 2008 ஆம் ஆண்டை மனதில் வைத்தே வன்னிப் பெருநிலப்பரப்பை பிடித்து புலிகள் இயக்கத்திற்கு இறுதியாகச் சமாதி கட்டுவதாக அவர்கள் வாய்ச்சவாடல்களை விடுத்துள்ளனர்.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை நீண்ட மௌனத்தை காத்து வந்தனர். தாமாக தாக்குதல்களை மேற்கொள்ளாமல் இராணுவத்தினர் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் பட்சத்தில் வலிந்த தாக்குதல்களுக்கு ஒரு பதிலடியை மட்டுமே கொடுத்து வந்தார்கள். எனினும் அனுராதபுரத்தில் நடைபெற்ற தாக்குதல் மூலம் பாரிய அடி ஒன்றை இராணுவத்தினருக்கு புலிகள் கொடுத்திருந்தனர். இந்த நிலையிலும் புலிகள் தொடர்ந்தும் மௌனம் காத்து வருவது ஏன் என்ற ஒரு கேள்வி எழுகின்றது. போராட்டத்தின் ஒரு வடிவமாக இதனைப் பார்த்தாலும் இந்தளவு நீண்ட மௌனம் தேவைதானா என்ற ஒரு கேள்வி எழுகிறது அல்லவா?

பதில்: எங்கள் தலைவரின் இராணுவ தந்திரோபாயங்களில், இராணுவ வியூகங்களில் இருக்கின்ற ஒரு அம்சமாகவே இந்த மௌனத்தை பார்க்க வேண்டியிருக்கின்றது.

இந்த மௌனம் எதிர்காலத்தில் ஒரு இராணுவ ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு, புலிகள் இயக்கத்தின் ஆற்றலை அளவிடும் கருவியாக அல்லது போரில் ஒரு விடுதலை இயக்கம் தன்னுடைய இறுதியான பெரிய ஒரு மரபுவழிச் சமர்களில் காட்டுகின்ற புதுமையான இராணுவ வடிவங்களை சிலவேளைகளில் இந்த மௌனம் தொட்டுச் செல்லலாம்.

உண்மையில் எங்களின் இயக்கம் மிகப்பெரிய சமரை எதிர்பார்த்தபடியே இருக்கின்றது. அதேநேரம் சிங்கள அரசு நடத்துகின்ற வலிந்த தாக்குதல்கள் அனைத்தையும் முறியடித்தபடி இன்று நாங்கள் ஒரு முன்னிலையில்தான் இருக்கின்றோம்.

அநுராதபுரம் போன்று இலக்குகள் சில கணிக்கப்பட்டு அதன் மீது ஒரு மாபெரும் அதிரடித் தாக்குதல்களை நிகழ்த்தி பெரிய இராணுவ வெற்றிகளை நாங்கள் பெற்று வருகிறோம். அதன் வாயிலாக சிங்கள இராணுவத்தினுடைய உளவுரன்கள் சிதைக்கப்படுவதுடன் எங்களின் மக்களுக்கும், போராளிகளுக்கும் உளவுரன்கள் அதிகரிக்கின்ற செயற்பாடு என்று ஒரு படிமுறையான திட்டமிட்ட இராணுவத் திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கைகள் அமைகின்றன.

அது நீண்ட மௌனமாக இருந்தால் என்ன அல்லது எங்களது எல்லை கடந்து நடக்கின்ற தாக்குதல்களாக இருந்தால் என்ன ஒரு நீண்ட இராணுவத் திட்டமிட்ட அம்சங்களாகவே அது நகர்ந்து கொண்டிருக்கின்றன.

நாங்கள், எங்களின் விடுதலைப் போரை ஆயுதப்போராக முன்னெடுத்துக் கொண்டிருந்தாலும், நாங்கள் அரசியல் காரணிகளையும் கவனத்தில் எடுக்கத்தான் வேண்டும்.

குறிப்பாக சர்வதேச அரசியல் சூழல்கள், சர்வதேச அரசியல் காரணிகள் என்பனவற்றையும் நாங்கள் கவனத்தில் எடுக்கத்தான் வேண்டும். ஏனெனில் கடந்த நான்கு ஐந்து வருடங்களாக நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்துடன் எங்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசமயமாகி விட்டது.

எனவே சர்வதேசமயப்பட்ட அந்த சூழலுக்கேற்பு உடையதாகவே எங்களின் சில நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். நாங்கள் அடுத்த கட்டத்தை தாண்டி தனியரசை அமைக்கின்ற போது எங்களின் இயக்கத்திற்கு அல்லது அமையவிருக்கும் எங்களின் அரசிற்கு சர்வதேச உறவுகள் எங்களுக்குத் தேவை.

இன்றைய உலக ஒழுங்கில் உலக அரசுகளுக்கிடையிலான உறவுகள் எங்களுக்குத் தேவை என்ற அந்த அடிப்படையில்தான் எங்களின் ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையையும் தலைவர் அவர்கள் திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்தும் போது, அது வெறுமனே இராணுவ அம்சங்களுடன் மட்டும் நின்றுவிடாமல் அது அரசியல், இராணுவ அம்சங்கள் கலந்த ஒரு படை நடவடிக்கையாகத்தான் இதுவரை காலமும் நடைபெற்று வந்திருக்கின்றது.

அதனால்தான் இன்று இவ்வளவு தூரத்திற்கு, அதுவும் இன்றைய உலக ஒழுங்கில் இவ்வளவு தூரத்திற்கு, புலிகள் இயக்கம் வளர்ச்சி பெற்றிருக்கிறது. அது இராணுவ ரீதியாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அரசியல் ரீதியாக சர்வதேசத்தின் குறிப்பிட்ட சில நாடுகள் எங்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முலாம் பூசி கொச்சைப்படுத்த முற்பட்டாலும், எங்களின் விடுதலைப் போராட்டத்துடன் காலத்திற்கு காலம் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம், அரசியல் உறவுகளை எங்களின் விடுதலை இயக்கத்துடன் வைத்துக்கொள்வதில் அவர்கள் பின்நிற்பதில்லை.

மேற்குலகில் சில இயக்கங்களுக்கு பயங்கரவாதப் பட்டம் சூட்டப்பட்டது போல் அல்லது அந்த பயங்கரவாதப் பட்டம் சூட்டப்பட்ட பின்னர் அவர்களை நடாத்துவது போல் மேலைத்தேய நாடுகள் எங்களின் விடுதலை இயக்கத்தை நடத்தவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றும் எங்களுக்கும் தெரியும். அது உண்மையில் அரசுகளுக்கு இடையிலான நலன்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக இருக்கின்றது.

அந்த விடயங்களையும் கருத்தில் எடுத்துத்தான் எங்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் அரசியல், இராணுவக் காய் நகர்த்தல்களை தலைவர் அவர்கள் வெகு திறமையாக செய்து வருகிறார்.

கடந்த ஒரு வருட காலமாக இங்கு ஒரு பெரிய போர் நடக்கின்றது என்பது உண்மைதான். அந்தப் போரில் எங்களின் மக்கள் படுகின்ற சொல்லெணாத் துயரங்கள் என்பதும் உலகறிந்த உண்மைதான். அதேவேளை சிங்களம் ஆக்கிரமித்த மண்ணிலும் சரி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பில் வான் வழியாக வந்தோ அல்லது வேறு விதமாகவோ எங்களின் மக்களுக்கு ஏற்படுத்தும் மாபெரும் அழிப்புக்கள், மனித உரிமை மீறல்கள் என்ற பல்வேறு விடயங்களில் சிங்கள அரசிற்கு எதிரான சர்வதேச மனித உரிமை அமைப்புகளினுடைய குற்றச்சாட்டு என்பதும் உண்மையில் மறுதலிக்க முடியாத ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது.

உண்மை என்னவெனில், ஒரு புறத்தில் உலக அரசுகள் சிங்கள அரசுடன் கூடிக்குழாவி அவர்களுக்கு அரசியல் ரீதியாகவோ இராணுவ ரீதியாகவோ முண்டு கொடுத்தபடி நிற்க,

மறுபுறத்தில் மனித தர்மங்களை மதிக்கின்ற அல்லது மானிட நேயங்களை காக்க முயல்கின்ற உலக அமைப்புக்கள் அதாவது அரசு சாராத உலக அமைப்புக்களினுடைய கருத்துக்கள் இன்று உலக அரசுகளினுடைய கருத்துகளுடன் உடன்படுகின்ற வகையில் இல்லை.

அதனைப் பல்லேறு இடங்களில் நாங்கள் வெளிக்காணரக் கூடியதாகத்தான் இருக்கின்றது.

அத்தகைய அரசு சாராத அமைப்புக்கள் இன்றும் இந்த மண்ணில்தான் வேலை செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் இங்கே நடக்கின்ற அன்றாட நடப்புக்களைப் பார்த்தபடிதான் இருக்கின்றனர். எங்களின் விடுதலை இயக்கத்தினுடனும் அவர்கள் தொடர்புகள் வைத்திருகின்றனர்.

சிங்கள அரசுடனும் அவர்களுக்கு வேலை ரீதியான தொடர்புகள் இருக்கின்றன.

இந்தத் தொடர்புகளை வைத்துக்கொண்டு அவர்கள் சிங்கள அரசினுடைய நிர்வாக அணுகுமுறை, மனிதாபிமான நடவடிக்கைகள் என்பனவற்றை எங்களின் விடுதலை இயக்கத்துடன் இணைத்துப் பார்த்து எங்களின் இயக்கத்தை சிங்கள அரசை விட எவ்வளவோ சிறப்பாக மனித தர்மங்களை மதித்து அல்லது உலக மனிதர்களினுடைய மன ஓட்டங்களுக்கு ஏற்றவாறு செயற்படும் இயக்கமாக புகழாரம் சூட்டியபடிதான் இருக்கின்றனர்.

எனினும் சிங்கள அரசிற்கு மேலைத்தேய அரசுகள் இராணுவப் பொருண்மிய உதவிகளை நல்கி அதனுடைய சிங்களப் போர் இயந்திரத்தை வலுவூட்டி வருவது என்பது ஒரு கசப்பான உண்மையாகும். அது தமிழ் மக்களையும் கவலை கொள்ளச் செய்கின்ற விடயம்தான். இந்த விடயம் தொடர்பாக தலைவர் அவர்களும் மாவீரர் நாள் உரையில் பகிரங்கமாகவே சிங்களத்திற்கு முண்டு கொடுக்கும் சர்வதேச அரசுகளை குற்றம் சாட்டியிருந்தார்.

தலைவருடைய அறிக்கைக்குப் பின்னர் சர்வதேச அரசுகள் என்ன செய்கின்றன என்பதனை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், எங்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை அவர்கள் இந்த சமாதான காலகட்டத்தில்தான் உணர்ந்து கொண்டு அதன் வழியாக குறிப்பிட்ட சில அறிக்கைகளை விட்டது உண்மையான நிகழ்வு.

இன்று குறிப்பிட்ட அந்த அரசுகள் ஒருபுறத்தில் மௌனம் காத்துக்கொண்டு மறுபுறத்தில் சிங்களத்திற்கு இராணுவப் பொருண்மிய உதவிகளை நல்குவது என்பது உண்மையில் ஒரு வேதனையான விடயம்தான்.

கேள்வி: ஒரு இனம் ஒடுக்கப்படுகின்றது. அந்த இனத்தின் விடிவு தொடர்பாக ஓரு விடுதலைப் போராட்டம் நடைபெறுகின்ற போது அது நீதியான, நேர்மையான விடுதலைப் போராட்டமா என்பதனைப் பார்க்காமல் சர்வதேச நாடுகள் தங்களின் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார, இராணுவக் கொள்கைகளைத்தான் கவனத்தில் எடுத்து ஒரு விடுதலை அமைப்பிற்கு ஆதரவு கொடுப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கின்றனர். அப்படியிருக்கும்போது தமிழ் மக்களின் இந்த விடுதலைப் போராட்டம் நியாயமாகவே நடைபெறுகின்றது என்பதனை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி சர்வதேச நாடுகளை நாங்கள் தொடர்ச்சியாக நம்பியிருப்பது ஒரு சரியான முடிவா?

பதில்: எங்களின் விடுதலைப் போராட்டம் யாரையும் சாராமல், யாரையும் நம்பாமல் அன்றிலிருந்து இன்றுவரை நடந்து வருகின்றது என்பதுதான் உண்மை. அதேவேளை எங்களின் விடுதலைப் பேராட்டம் மிக உச்சநிலையை அடைந்து அது ஒரு தனியரசை அமைத்து, இந்த பூமிப் பந்தில் ஒரு புதிய நாடாக உருவாகின்ற அந்த சூழலில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டிய ஒரு கடப்பாடு ஒன்றும் உள்ளது. எந்த நாடாயினும் அத்தகைய கடப்பாட்டைக் கொண்டு இருக்கும்.

எந்தவொரு சர்வதேச அரசுகளையோ அல்லது மாற்றாரையோ நம்பி அவர்களின் தயவில் இந்த விடுதலைப் பேராட்டத்தை நடத்தாமல் ஒரு மிகப்பெரிய வெற்றியை நோக்கி எங்களின் விடுதலைப்பேராட்டத்தை தலைவர் அவர்கள் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கின்றார்.

ஆனாலும் விடுதலைப் போராட்டத்தின் ஒரு உச்சநிலையில், சர்வதேசத்தின் பெரும்பாலான அரசுகள் சிங்கள அரசிற்கு முண்டு கொடுக்கின்ற நிலையில், எங்களுடைய கருத்துக்களையும் சர்வதேச அரசுகளுக்குக் கூறி சர்வதேச மக்களினது நல் அபிப்பிராயத்தை திரட்ட வேண்டிய ஒரு தேவை எங்கள் முன் உள்ளது.

அதனடிப்படையில்தான் காலத்திற்கு காலம் குறிப்பிட்ட அரசுகளுக்கு எங்களின் கருத்துக்களை, எங்கள் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மைகளை நாங்கள் தெரிவித்து வருகின்றோம்.

இந்த முறை தலைவர் வெளியிட்ட மாவீரர் நாள் அறிக்கையில் கிட்டத்தட்ட புலிகள் இயக்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை என்று சொல்லக்கூடிய ஒரளவு வரையறுக்கப்பட்ட கட்டம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டிருகின்றது என்றுதான் நான் கருதுகின்றேன்.

அது என்னவெனில், ஏற்கனவே சிங்கள அரசு, இலங்கைத் தீவு அமைந்திருக்கின்ற இந்த பிராந்தியத்தின் நலன்கள் சிலவற்றை ஒரு தூண்டிலாகப் பயன்படுத்தி, சர்வதேச பெருவல்லரசுகளுக்கு தூண்டில் போட்டு, அவர்களின் பொருண்மிய இராணுவ உதவிகளைப் பெற்று, எங்களின் விடுதலைப் போராட்ட இயக்கத்தை அழிப்பதற்கு ஒரு சதித்திட்டமொன்றைத் தீட்டி வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்தப் பிராந்தியத்தில் இருக்கின்ற பெருவல்லரசுகளின் நலன்களுக்கு விடுதலைப் புலிகள் எதிரானவர்கள் என்கின்ற ஒரு கருத்தைப் பரப்பி அதன் வாயிலாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற ஒரு கருத்தை வெற்றிகரமாகப் புகுத்தி, அதன் அடிப்படையில்தான் சிங்கள அரசு தனக்கு தேவையான பொருண்மிய, இராணுவ உதவிகளைப் பெற்று வருகின்றது.

இந்த முறை தலைவர் அவர்கள் பெருவல்லரசுகள், எங்களின் பிராந்தியத்தில் வைத்திருக்கின்ற நலன் பற்றி மேலோட்டமாக அதில் கூறியிருக்கிறார். அதன் அர்த்தம் என்னவெனில், பெருவல்லரசுகள் நினைப்பதுபோல், அதாவது சிங்களம் கூறியபடி, எங்களின் தமிழீழ விடுதலை என்பது அல்லது தமிழீழத் தனியரசு என்பது அந்த பெருவல்லரசுகளின் பிராந்திய நலனுக்கு ஏதாவது குந்தகம் விளைவிக்கும் என்றோ அல்லது பிராந்தியத்தின் உறுதித்தன்மையை, அரசியல் உறுதிப்பாட்டுத் தன்மையை சீர்குலைக்கும் என்றோ நம்புவது பொய் என்பதனையே தலைவரின் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எங்களின் பிராந்தியத்தின் நலன் என்பதற்கு அப்பால் எங்கள் மக்களின் விடுதலை அதாவது, தமிழீழ மக்களின் தேசிய நலன் என்பது எங்களுக்கு முதன்மையானது. அந்த தேசிய நலனுக்கு அனுசரணையாகச் செயற்படுகின்ற அந்த நாடுகள் தொடர்பாக எங்களின் விடுதலை இயக்கத்திற்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. எனவேதான் இந்த பிராந்தியத்தின் நலனைப் பேண விரும்புகின்றவர்கள் அல்லது இந்தப் பிராந்தியத்தில் உறுதித்தன்மை ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக தங்களின் நலன்களை அடைந்து கொள்ள விரும்புகின்ற அந்தப் பெரு வல்லரசுகள் எங்களின் விடுதலைப் போராட்டத்தை தங்களின் தடைக்கல்லாக எடுக்கக்கூடாது என்கிற செய்திதான் எங்களின் தலைவரின் மாவீரர் நாள் அறிக்கையில் வெளிவந்திருந்தது.

அந்த அறிக்கை நிச்சயமாக சர்வதேச நாடுகளை அல்லது குறிப்பிட்ட வல்லரசு நாடுகளை சிந்திக்க வைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

சிங்களத்தின் ஒரு சதி நடவடிக்கைக்கு அதாவது சிங்கள அரசியல்வாதிகள் வெகு கெட்டித்தனமாக சர்வதேச அரசுகளை தம்வசப்படுத்தி, அவர்களின் உதவிகளைப் பெற்று, ஒரு இரவல் பொருளாதாரத்தில் தங்களின் போர் இயந்திரங்களைக் கட்டியெழுப்பி, அந்தப் பாரிய போரில் இயந்திரங்களை எங்கள் மக்கள் மீது ஏவிவிட்டு, ஒரு பெரிய இன அழிப்பைச் செய்து, ஒரு மனிதத்துயரை இந்த மண்ணில் விதைத்து, அவர்கள் தங்களின் மிக மோசமான குறுகிய தேசிய நலனை அடைவதற்காக எடுக்கின்ற முயற்சிக்கு சர்வதேச நாடுகள் உதவுகின்றன.

என்றோ ஒரு நாள் சர்வதேச நாடுகள் இதை உணர்ந்து கொள்ளத்தான் போகின்றன. அல்லது எதிர்கால தமிழ்ச் சந்ததியின் சுட்டுவிரல் நீட்டுக் குற்றச்சாட்டுக்கு முன்பாக குறித்த சர்வதேச நாடுகள் உட்படத்தான் போகின்றன. அத்தகைய ஒரு அரசியல் சூழலுக்குள் அவர்கள் சிக்காமல் இப்போது நடக்கின்ற விடுதலைப் போராட்டத்தின் தன்மையை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். எங்களின் விடுதலை இயக்கத்தின் தலைமைத்துவப் பாத்திரம் அது ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பெரிய விடுதலைப் போர் என்பவற்றை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எங்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அவர்கள் ஆதரவு தர வேண்டும் என்பதுதான் எங்களின் இயக்கத்தினது ஒரு எதிர்பார்ப்பு.

ஆகக் குறைந்தது அந்த ஆதரவு என்ற நிலை இல்லாவிட்டாலும் கூட சிங்களத்தின் போர் இயந்திரத்திற்கு முண்டு கொடுக்கின்ற இந்த மிக மோசமான நடவடிக்கையை குறித்த சர்வதேச நாடுகள் கைவிடுவது என்பதே எங்கள் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான விடயமாக இருக்கும்.

கேள்வி: சர்வதேச விடுதலை அமைப்புக்களின் வரலாற்றுடன் ஒப்பிடுமிடத்து அடக்கி ஒடுக்கப்படும் ஒரு இனம், சுதந்திரத்திற்காகப் போராடும் ஒரு அமைப்பு எந்தச் சந்தர்ப்பத்தில், எந்தக் கட்டத்தில் ஒரு தனியரசுப் பிரகடனத்தை வெளியிட முடியும்?

பதில்: உலக விடுதலை அமைப்புக்கள் சில தங்களின் மண்ணை முழுமையாக மீட்டெடுத்து, அங்கே தங்களின் அரசாங்கத்தை அமைக்க முன்னர் தங்களின் விடுதலைப் பிரகடனங்களை செய்திருக்கின்றன என்பது உண்மை.

விடுதலைப் போராட்டம் நடக்கின்ற தங்களின் தாயக மண்ணில் ஒரு அங்குல நிலத்தையேனும் தங்களின் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காமல் வெளிநாடுகளில் தங்களின் தலைமையங்களை நிறுவிக் கொண்டிருந்த படி தங்களுக்கு என ஒரு நாட்டைப் பிரகடனப்படுத்தியதையும் பார்த்திருக்கிறோம்.

எனவே இத்தகைய சுதந்திரப் பிரகடனங்கள் விடுப்பு தொடர்பாக எங்களிடம் கருத்து இல்லை. அவர்களின் விடுதலைப் போராட்டங்கள் அல்லது அந்தந்த விடுதலைப் போராட்டங்களை நடத்துகின்ற தலைமைகளின் விருப்பு-வெறுப்புக்கு உட்பட்டது அந்த விடயம்.

எங்களின் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் அந்த சுதந்திரப் பிரகடனம் என்பது அது சில பேர் குறிப்பிடுவது போல ஏன் அந்த பிரகடனம் இன்னமும் வரவில்லை?

அல்லது

எப்போது அந்தப் பிரகடனம் வரும் என்ற கேள்விகள் எழுந்தபடிதான் இருக்கின்றன.

வெறும் பிரகடனம் என்பது பெருமெடுப்பில் எங்களுக்கு நன்மைகளைப் பெற்றுத்தரும் என நாங்கள் நினைக்கவில்லை.

எந்தக் கட்டத்தில் எங்களின் புதிய சுதந்திர தேசம் பற்றிய பிரகடனத்தை விடுவது என்பது எங்களின் தேசியத் தலைவரினது முடிவு.

புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது தாயகத்து உறவுகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு விடுதலைப் போராட்டம் இவ்விதமான சுதந்திர பிரகடனத்தை விடுத்தது என்றால் அதேவழியில்தான் எங்களின் பிரகடனத்தையும் எங்களது இயக்கம் விடுக்க வேண்டும், அதனடிப்படையில்தான் எங்களின் வெற்றின் படியை மெது மெதுவாக நகர்ந்து தொடலாம் என்பது போன்ற கருத்து உண்மையில் யதார்த்த பூர்வமான கருத்தல்ல.

இலங்கைத் தீவில் சிங்கள அரசுடனான அரசியல், இராணுவப்புறச் சூழல்களை வைத்துப் பார்த்தால்

எங்களின் விடுதலை என்பது தமிழ் மக்களினுடைய பலம் அதிகரிப்பின் பின்னரே குறிப்பாக ஒட்டுமொத்த பலம் அதிகரிப்பின் வெளிப்பாடாகத்தான் எமது விடுதலை நடைபெறுவது சாத்தியம்.

எனவே எங்களின் மண்ணை மீட்டெடுப்பதுதான் எங்கள் இயக்கத்தின் முதல் வேலையாக இருக்கும்.

அவ்விதமாக மீட்டெடுத்தபடி நடக்கின்ற உண்மையான பிரகடனம் என்பது நில மீட்பின் இறுதிக்கட்டத்தில் நடைபெறக்கூடிய ஒரு விடயமாகத்தான் உள்ளது.

எனவே, ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புக்களுடன் இணைத்து அல்லது ஒப்பிட்டு எங்கள் விடுதலையின் பிரகடனம் பற்றி எதிர்பார்ப்பது அரசியல் ரீதியில் விவேகமான ஒரு எதிர்பார்ப்பாக இருப்பது போல் தெரியவில்லை.

கேள்வி: வன்னிப்பெருநிலப்பரப்பின் மீதான வான்குண்டு வீச்சுகள் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுகின்றன. இத்தகைய தாக்குதல் ஒன்றில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனைக்கூட இழந்துள்ளோம். தொடர்ச்சியாக சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் மேற்கொள்ளவில்லை என்கிற ஒரு ஆதங்கம் மக்களிடையே எழுந்துள்ளமை குறித்து?

பதில்: ஒரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் எங்களின் போராட்டம் போன்ற ஒரு மிகத்தீவிரமான அதுவும் எந்தவிதமான அரசியல் முன்னெடுப்புகளுக்கும் இடமளிக்காத கடும்போக்கு அரசுடன், இன அழிப்பையே நோக்காகக்கொண்ட ஒரு ஆக்கிரமிப்பு அரசுடன் தீவிரமான போர் ஒன்றில் நாங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.

சர்வதேச நாடுகள் சிலவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளும் நவீன ரக ஆயுதங்களின் துணையுடன்தான் இவ்விதமான பெரும் போரை எங்களின் விடுதலை இயக்கம் மீதும் எங்கள் மக்கள் மீதும் சிங்களப் படைகள் நடத்தி வருகின்றன.

இந்த நேரத்தில் எங்களின் விடுதலைப் போராளிகளின் இழப்புக்கள் என்பது அதாவது தளபதிகளினதோ அல்லது போராளிகளினதோ இழப்புக்கள் என்பது தவிர்க்கமுடியாத இராணுவ யதார்த்தமாகத்தான் இருக்கின்றது.

புலம்பெயர்ந்து வாழும் எங்களின் மக்கள் ஒருவிடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

எங்கள் போராளிகளினது பாதுகாப்புத் தொடர்பாக எங்கள் இயக்கம் மிகவும் அக்கறையாக, அதற்கான முன்னேற்பாடுகள், தயார்படுத்தல்கள் போன்றவற்றை செய்தபடிதான் இதுவரை காலமும் செயற்படுகிறது.

எங்கள் வாழ்வின் அங்கமாகவே அது மாறிவிட்டது. ஆனாலும் இந்தப் பெரும் போரில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழல் ஒன்று இருப்பதனை எவரும் நிராகரிக்க முடியாது.

தமிழ்ச்செல்வனின் அந்த வீரச்சாவும் அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் நடந்தது. சிங்களத்தின் மிக நவீனமான வான்கலங்களின் உதவியுடன் நடத்தப்பட்டது அந்தத் தாக்குதல். அந்த நவீன வான்கலங்களால் எங்கள் மக்கள் இன்று சொல்லெணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்பது உண்மைதான்.

ஆனால் ஒவ்வொரு ஆயுதத்திற்கும் பதில் ஆயுதம் ஒன்று இருக்கின்றது. அல்லது ஒவ்வொரு ஆயுதப் பயன்பாட்டிற்கும் எதிரான தந்திரோபாயமான செயற்பாடுகள் என்பன இருக்கின்றன என்பது எல்லோருக்குமே தெரியும்

அத்தகைய ஒரு கட்டத்தில் சிங்களத்தின் அதி நவீன ஆயுதங்களை மீறியபடி எங்களின் விடுதலையை முன்னெடுக்கின்ற அந்த நிகழ்வை எல்லோரும் பார்க்கத்தான் போகின்றனர்.

தற்போது மட்டும்தான் சிங்கள அரசு அதிநவீன இராணுவ உபகரணங்களுடன் எங்களுடன் போர் புரிகின்றது என்று இல்லை.

காலத்திற்கு காலம் அதாவது ஒவ்வொரு பாரிய படுதோல்விகளைச் சந்தித்த பிறகும் ஒரு மிகப்பெரிய இராணுவ வளர்ச்சியுடன் வந்தபடிதான் எங்களுடனான போரை நடத்துகின்றது. நாங்கள் அடிக்கடி குற்றம்சாட்டுவது போல அந்த அமைதிக் காலத்தை அரசு தன்னுடைய இராணுவத்தை நவீனமயப்படுத்தி தயார்படுத்தும். அத்தகைய கைங்கரியங்களில் ஈடுபட்டு தன்னுடைய இராணுவத் தயார்படுத்தல்களை முடித்த பின்னர் ஏதோ ஒரு சாட்டுகளைக் கூறிக்கொண்டு போரைத் தொடர்வதும் நீண்ட வரலாற்றைக் கொண்ட விடயமாகத்தான் இருக்கின்றது.

தற்போதும் அப்படித்தான் நடக்கின்றது.

கடந்த ஐந்து ஆண்டு அமைதிக்காலத்தில், கால அவகாசத்தில், அது தன்னுடைய படையை நவீனமயப்படுத்தியது.

மேலைத்தேய அரசுகள் மனிதாபிமானத்தை, தர்மத்தை மதிப்பதாக எங்கள் மக்கள் நம்புகின்றனர்.

ஆனால் அந்த மேலைத்தேய அரசுகள் ஒரு ஆக்கிரமிப்பு அரசுக்கு தங்களின் நவீன ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கின்றன.

அத்தகைய ஆயுதங்களை வாங்குவதற்கான பொருண்மிய உதவிகளைச் செய்கின்றன. அந்த அழிவு ஆயுதங்களைக் கொண்டு எங்கள் மக்கள் கொலை செய்யப்படும்போது அது ஏதோ ஒரு இராணுவ நடவடிக்கை போல வாளாவிருப்பது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

சிங்களத்தின் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் அதனுடைய பாரிய படைக்கல சக்திகள் என்பவற்றையெல்லாம் மீறியபடி எங்களின் விடுதலைப் போராட்டத்தை எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் முன்னெடுத்துச் சென்றபடிதான் இருக்கின்றார்.

இப்போதும் இராணுவ ரீதியிலும் சரி, அரசியல் ரீதியிலும் சரி அடுத்த கட்டத்தில் பாரிய வளர்ச்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய இராணுவ வலிமையுடன்தான் எங்கள் விடுதலை இயக்கத்தை தலைவர் வைத்திருக்கின்றார்.

கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழர்கள் மத்தியிலிருக்கும் ஊடகங்களுக்கு நீங்கள் என்ன விடயத்தைக் கூற விரும்புகிறீர்கள் ?

பதில்: ஒரு விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் வாழ் சமூகத்தின் பங்களிப்பு என்பது உண்மையில் பிரமாண்டமானது. எங்களின் விடுதலைப் போராட்டத்தை மட்டும் நான் சொல்லவில்லை. உதாரணத்திற்கு எரித்திரிய விடுதலைப் போராட்டத்திற்கு புலம்பெயர்ந்த எரித்திரிய சமூகம் ஆற்றிய பங்கு குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம்.

புலம்பெயர்ந்து வாழ்ந்த எரித்திரிய புத்திஜீவிகளும் சரி அல்லது அந்த மண்ணின் மைந்தர்களும் சரி ஒன்றுதிரண்டு தங்களின் ஒரு பிரதான கடமையாக அந்த விடுதலைப் போரை வெல்வதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்தார்கள்.

தங்களின் வளங்களைக் கொடுப்பதில் இருந்து தங்களின் உழைப்பை நல்குவதிலிருந்து எதனைச் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் ஒன்றுதிரண்டு செய்து எரித்திரிய விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கு பாரிய வலுச்சேர்த்து அந்தப் போராட்டத்தை வெற்றியில் முடிக்க உதவினார்கள்;.

அதேபோல புலம்பெயர்ந்து வாழ்கின்ற எங்கள் ஈழத்தமிழர்களும் ஒரு பிரமாண்டமான சக்தி என்பதில் எள்ளளவும் எங்களுக்கு சந்தேகம் இல்லை. இதனை நாங்கள் எங்கள் வார்த்தைகளில் சொல்வதனைவிட சிங்களத்தின் முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் வார்த்தையில் சொல்ல வேண்டும்.

"தனக்கு தன்னுடைய பலம் தெரியாது, மற்றவனுக்குத்தான் இன்னொருவனுடைய பலம் தெரியும்" என்பது பொதுவான மனித சுபாவம். புலம்பெயர்ந்து ஏராளமான நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்களைப் பார்த்து சுமார் இருபது வருடங்களுக்கு முன்னரே ஜே.ஆர்.ஜயவர்த்தன ஒரு விடயத்தை கூறியிருந்தார்.

"இது ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச சிறுபான்மை இனம்" என்ற வார்த்தைப் பிரயோகத்தை அன்று அவர் கூறியிருந்தார்.

அந்த வார்த்தைப் பிரயோகத்தை அவர் யூத மக்களுடன் ஒப்பிட்டே அன்று கூறியிருந்தார்.

உண்மையில் அந்த ஒப்பீட்டை அன்று அவர் கூறும்போது அதனுடைய சரியான பரிமாணத்தை எங்கள் மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று கூறமுடியாது.

ஆனால் அது இன்று மிகப்பெரிய உண்மையாக மாறியிருக்கிறது.

எங்களின் புலம்பெயர்ந்த தமிழர்கள் அத்தகைய பலம் வாய்ந்த ஒரு சக்தியாக உலக நாடுகளில் பரவி வாழ்கின்றனர்.

அவர்களின் பலம்தான், தாங்களாகவே வழங்குகின்ற பலத்தின் அடிப்படைதான், எமது விடுதலைப் போராட்டத்தின் மிகப் பெரிய வளர்ச்சிக்கு காரணியாக அமைந்திருக்கின்றது.

இன்று நவீன போர் ஆயுதங்களுடன் எதிரி எங்கள் மண்ணை ஆக்கிரமித்து, எங்கள் இனத்தை அழித்தொழிக்க முயல்கின்ற இந்த நேரத்தில் அந்த நவீன ஆயுதங்களுக்கு எதிராக எங்களின் எதிர்ச்சமர் என்பதும் நவீனமயப்படுத்தப்பட்ட, முன்னேறிய தொழில்நுட்பத்துடன் கூடிய, ஒரு போர் முறையாகத்தான் அமைய வேண்டும்.

என்னதான் சொன்னாலும் சிங்களப்படையின் தனி ஆள்திறன் அல்லது அவர்களின் வீரம் அல்லது அந்த படை நடவடிக்கையில் அவர்கள் செய்கின்ற தியாகம், அர்ப்பண உணர்வு எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்தால் சிங்களப் படையை விட எத்தனையோ மடங்கான வீரத்தை, தியாகத்தை, அர்ப்பண உணர்வை, உழைப்பை , எங்கள் போராளிகள் நல்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

மனிதனின் ஆற்றல் என்பதை அளவிட முடியாது.

எல்லைகள் அற்றது என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அந்த மனிதனைச் செயற்படுத்துகின்ற மனிதனில் இருக்கின்ற திறமைகள் அதாவது எங்கள் தலைமைப்பீடம் அல்லது தலைமைப்பீட ஆளுமையின் சிறப்பால் ஒரு மனிதனுடைய செயல்வீச்சு எங்கேயோ எல்லை கடந்து விரிந்து செல்கின்றது.

தமிழீழத் தேசியத் தலைவரின் தலைமைத்துவ ஆளுமையினால் எங்கள் போராளிகள் அளப்பரிய வீரத்தை களமுனையில் காட்டி, அந்த வீரத்தால், தியாகத்தால் ஒரு உயரிய இராணுவச் சாதனையை படைத்து, இந்த ஆட்பலத்தை அதிகரித்து, இந்த ஆட்பலத்திலும், அதிநவீன உபகரணங்களிலும் முன்னணி வகிக்கும் சிங்களப்படையை விட இந்தப் போரில் பெரிய திருப்பு முனைகளையும், முன்னேற்றங்களையும் காட்டியபடி இருக்கின்றனர்.

இத்தகைய மனித வலுவுடன், மனித ஆற்றலுடன் கருவிகளும் இணையும் போதுதான் எங்களின் போர் என்பது இறுதி வெற்றியைக் காணமுடியம். அந்த கருவிகளினுடைய வளர்ச்சி என்பது வளத்துடனும் பொருண்மியத்துடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

அத்தகைய வளத்தை எங்கள் விடுதலை இயக்கத்திற்கு நல்கக்கூடிய நிலையில் தாயகத்தில் வாழும் மக்கள் இல்லை. கொடிய போருக்குள் சிக்கிக்கொண்டு அவர்கள் நீண்டகாலமாகவே இந்த மண்ணிலேயே வாழ்கின்றனர்.

இந்த போராட்டத்திற்கு நேரடியாக முகம்கொடுத்து எத்தனையோ அர்ப்பண உணர்வுகளைச் செய்து மிகவும் சகிப்புத்தன்மையுடன் அவர்கள் உள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வரும் பத்திரிகையாளர்கள் வியக்கும் அளவுக்குக்கூட, இவ்வளவுக்கு நின்று பிடித்து, தமது சகிப்புத் தன்மையை வெளிப்படுத்தி, எங்கள் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

சர்வதேச பத்திரிகையாளர்கள் பாராட்டும் அளவுக்கு தாயக மக்களின் நேரடிப் பங்களிப்பு இருக்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழ்மக்களும் அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி எங்கள் விடுதலை இயக்கத்திற்கு மிகப்பெரிய பலத்தைச் சேர்க்க வேண்டும்.

தலைவர் அவர்கள் மாவீரர்தின உரையில் கூறியிருந்தது போல், புலம்பெயர்ந்த மக்களிடம் மற்றைய ஒட்டுமொத்த மக்களையும் எங்களின் போராட்டத்தின்பால் திருப்பிவிடக்கூடிய சக்தி இருக்கின்றது.

புலம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த நாடுகளில் உள்ள மனித நேயம் மிக்கவர்கள், உண்மையான விடுதலைப் பற்றாளர்கள் என்பவர்களிடம் எங்களின் விடுதலைப் போராட்டத் தியாகங்களைக் எடுத்துரைக்கின்ற அளவுக்கு எங்கள் மொழி சார்ந்த திறமையுடன் அங்கு இன்று எமது இரண்டாவது, மூன்றாவது சந்ததி உருவாகியிருக்கிறது.

அந்த நாட்டு மொழிகளில் அவர்களுடன் உரையாடி சிங்களத்தினுடைய பொய்ப்பிரசாரத்தை முறியடிக்க, எங்கள் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை சொல்லிலும் செயலிலும் எழுத்திலும் அவர்களுக்கு எங்கள் புலம்பெயர் தமிழர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

எங்களின் போராட்டத்திற்கு ஒரு சர்வதேச ஆதரவு , அது தார்மீக ஆதரவு என்று சொன்னாலும்கூட, அத்தகைய ஆதரவுத்தளம் ஒன்று உருவாகும்போது அந்த குறித்த அரசுகள் அதாவது சிங்கள அரசிற்கு இன்று முண்டு கொடுத்துக்கொண்டிருக்கின்ற அரசுகள், தங்கள் மக்களிடம் இருந்து எழுகின்ற கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய ஒர் நிர்ப்பந்தத்திற்குள் உள்ளாகும்.

சில வேளைகளில் சிங்களத்திற்கு பொருண்மிய, இராணுவ உதவிகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றலும் வளரலாம்.

அப்படியெல்லாம் வளரும்போது இராணுவ ரீதியாக எங்கள் விடுதலைப் போராட்டதிற்கு ஒரு சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

எனவே புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் வளம் சார்ந்த நேரடிப் பங்களிப்பை எங்கள் விடுதலைப் போராட்டம் கோருவதுடன் அந்தந்த நாட்டு ஊடகங்கள் அல்லது கருத்து தெரிவிப்போருடன் நல்லுறவை வளர்த்து, அவர்களுக்கு ஊடாக எங்களின் நியாயப்பாடுகளை வெளிப்படுத்தி, எங்கள் விடுதலை இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுக் கடமை புலம்பெயர்ந்துள்ள எங்கள் மக்களுக்கு இருக்கின்றது.

அந்த வரலாற்றுக் கடமையை எங்கள் மக்கள் நெஞ்சிலிருத்தி அதனை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

எங்கள் தாயகத்தில் நாங்கள் வசித்துக் கொண்டிருந்தாலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் அளித்து வருகின்ற போராட்டப் பங்களிப்பு குறித்து தாயகத்தில் வசிக்கும் மக்களுக்கும் கூட்டங்கள் வாயிலாக அல்லது எங்கள் பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம்.

இன்று நடைபெறும் எங்களின் போராட்ட அல்லது இயக்க நிகழ்வுகள் தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற நிகழ்ச்சிகள், அவை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் எங்களின் மக்களுக்கும் தெரியப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம்.

அந்த வகையில் புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகள் முழுநேர ஈடுபாட்டுடன் எங்கள் விடுதலை இயக்கத்திற்கு ஒரு பின்புலம் சேர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடுதான் தாயக மக்களிடம் இருக்கின்றது. எங்கள் இயக்கத்தின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கின்றது.

அத்தகைய வேலைகளை எங்கள் புலம்பெயர் மக்கள் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள்.

அதேவேளையில் இறுதிக்கட்ட அல்லது மிகவும் ஒரு தீவிரமான போருக்கு நாங்கள் முகம்கொடுத்து ஒரு வெற்றியை பெற்றுக்கொள்கின்ற காலம்தான் இனிவரும் காலம். அந்தக் காலத்தில் எங்களின் விடுதலை இயக்கம் பலம்பெற்ற சக்தியாக இருந்து புதிய திருப்பு முனைகளை ஏற்படுத்துவதற்கு புலம்பெயர்ந்த மக்களும் தங்களின் பங்களிப்புக்களை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

Monday, January 7, 2008

உலகின் கவனத்தைக் கவரும் ஹிலாரி - ஒபாமா போட்டி





அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதில் உலகின் கவனத்தை இப்போது வெகுவாக ஈர்த்திருப்பது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும் நியூயோர்க் மாநில செனட்டருமான ஹிலாரி கிளின்டனுக்கும் கறுப்பினத்தவரான இலினோயிஸ் மாநில செனட்டர் பராக் ஒபாமாவுக்கும் இடையே மூண்டிருக்கும் போட்டியாகும். இந்த இருவரில் எவருக்கென்றாலும் ஜனநாயகக் கட்சியின் நியமனம் கிடைத்து எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் அவர் குடியரசுக்கட்சியின் வேட்பாளரைத் தோற்கடிக்கும் பட்சத்தில் அந்நிகழ்வு அமெரிக்க அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமையும் என்பது நிச்சயம்.

வெள்ளை மாளிகையில் ஏற்கெனவே 8 வருடகாலம் கணவருடன் வாழ்ந்த ஹிலாரி தேர்தலில் வெற்றிபெற்று உலகில் அதிவல்லமை கொண்ட நாட்டின் ஜனாதிபதியாக அதே மாளிகைக்குள் பிரவேசிப்பாரேயானால், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற சாதனையைத் தனதாக்கிக் கொள்வார். கட்சியின் வேட்பாளர் நியமனம் கிடைத்தால் அதிலும் கூட, 60 வயதான ஹிலாரிக்கு ஒரு முதல் அந்தஸ்து இருக்கவே செய்யும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதலாவது முன்னாள் முதல் பெண்மணி என்பதே அந்த அந்தஸ்தாகும். சட்டத்துறைப் பேராசிரியரான ஒபாமா (வயது 46) ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனம் கிடைத்து தேர்தலில் வெற்றிபெறுவாரேயானால், அவர் அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி என்று வரலாறுபடைப்பார்.

ஜனாதிபதி தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு போட்டியிடுகின்றவர்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவைக் கண்டறியும் பணிகள் இப்போது ஆரம்பமாகியிருக்கின்றன. வேட்பாளராகுவதற்கான போட்டியில் குதித்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தளவு ஆதரவு இருக்கிறது என்பதைப் பொறுத்தே ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை கட்சிகள் தெரிவு செய்யும். இந்த பூர்வாங்கப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பிரசாரங்களை, தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் குடியரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களையும் விட வெகுமுன்னதாகவே ஹிலாரியும் ஒபாமாவும் ஆரம்பித்திருந்தனர். இருதடவைகள் நியூயோர்க் மாநில செனட்டராக தெரிவான ஹிலாரி அரசியலில் அனுபவம் கொண்ட கணவரின் ஆலோசனைகளுடன் செல்வாக்குமிக்கதொரு நிலையில் தனது பிரசாரங்களை கடந்தவருட ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்துவந்தார். அதேவேளை, பில் கிளின்டனுக்குப் பிறகு ஜன நாயகக் கட்சிக்குள் இருக்கக்கூடிய வல்லமைமிக்க பேச்சாளர் என்று அவதானிகளினால் வர்ணிக்கப்படுகின்ற ஒரேயொரு கறுப்பின செனட்டரான ஒபாமா வின் பிரசாரங்கள் ஆரம்பத்தில் சோர்வான நிலையில் காணப்பட்ட போதிலும், நாளடைவில் சுறுசுறுப்படைந்துவந்ததைக்காணக்கூடியதாக இருந்தது.

வேட்பாளர் நியமனத்தைப் பெற விரும்புபவர்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவைக் கண்டறியும் முதல் போட்டி அயோவா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஒபாமாவுக்கு 37.6 சதவீத ஆதரவும் (2004 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் உப ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட) ஜோன் எட்வேர்ட்ஸுக்கு 29.8 சதவீத ஆதரவும் கிடைத்திருக்கிறது. 29.5 சதவீத ஆதரவைப் பெற்று ஹிலாரி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். குடியரசுக்கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் (மதப்பிரசாரகராக இருந்து அரசியலுக்கு வந்தவரான) மைக் ஹக்கபீக்கு 34.4 சதவீத ஆதரவும் மிட் றோம்னிக்கு 25.4 சதவீத ஆதரவும் கிடைத்தது. அமெரிக்காவின் சிறிய மாநிலங்களில் ஒன்றான அயோவாவின் ஜனத்தொகையில் 95 சதவீதமானவர்கள் வெள்ளை இனத்தவர்கள். அடுத்த போட்டி நாளை செவ்வாய்க்கிழமை நியூஹம்ஷயர் மாநிலத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தின் ஜனத்தொகையில் 96 சதவீதமானவர்கள் வெள்ளை இனத்தவர்கள். அயோவாவில் செனட்டர் ஒபாமா பெற்ற வெற்றி சர்வதேச அரசியல் அவதானிகளின் மத்தியில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அயோவா முடிவுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஒபாமாவும் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக ஹக்கபீயும் நியமனத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் பெருமளவில் இருக்கிறது என்ற தீர்மானத்துக்கு வரமுடியாது என்ற போதிலும், ஹிலாரி தனது கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதைத் தடுப்பது சாத்தியமானதல்ல என்று பொதுவில் காணப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பது நிச்சயமானதாகும்.

நியூஹம்ஷயர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் போட்டியை பலத்த நம்பிக்கையுடன் ஒபாமா எதிர்கொள்ளக் கூடிய சூழ்நிலை தோன்றியிருக்கிறது. முன்னாள் முதல் பெண்மணி என்ற செல்வாக்குமிக்க பெயர் அங்கீகாரத்துடனும் பெரும்பண பலத்துடன் கூடிய சக்தி மிக்க பிரசாரக் கட்டமைப்புகளுடனும் இருக்கும் ஹிலாரி தனக்கு முதற் சுற்றில் ஏற்பட்ட தோல்வியை அடுத்த சுற்றில் மாற்றியமைக்க முடியுமா ? கறுப்பினத்தவர் ஒருவர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகுவதற்கு போட்டியிடக் கூடியதாக இருக்கின்ற நிலைமை 1950 களில் காணப்பட்ட இனஒதுக்கல் சர்ச்சைகளுக்குப் பிறகு அமெரிக்க அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற முன்னேற்றத்தை பிரகாசமாகப் பிரதிபலிக்கின்ற போதிலும், கறுப்பர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமா என்ற கேள்வி இயல்பாகவே கிளம்பியிருந்தது. ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யக் கூடிய அளவுக்கு அமெரிக்க வெள்ளையர்கள் மத்தியில் ஜனநாயக தாராளவாதம் செழித்து நிற்கிறதா? வெள்ளை மாளிகைக்கு தெரிவு செய்யப்படும் முதல் கறுப்பினத்தவர் என்று வரலாறு படைக்க வாய்ப்புத்தருமாறு அமெரிக்கர்களிடம் ஒபாமா வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்கவில்லை. ஆனால், 95 சதவீதமான வெள்ளையினத்தவர்களைக் கொண்ட அயோவா மாநிலத்தில் கடந்தவாரம் ஒபாமா கண்ட வெற்றியை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் கறுப்பின வேட்பாளர் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க வெள்ளையர்கள் தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தப்படுத்த முடியுமா?

Thursday, January 3, 2008

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு

யுத்த நிறுத்தத்திலிருந்து விலகுகிறது அரசாங்கம்
[03 - January - 2008] [Font Size - A - A - A]

-டிட்டோகுகன்- Thinakural

விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையானது செல்லுபடியற்றதென உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்துவதென அரசாங்கம் நேற்றுப் புதன்கிழமை முடிவுசெய்துள்ளது.

இதனைப் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெலவும் தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நோர்வேயின் அனுசரணையுடன் 22 பெப்ரவரி 2002 இல் அச்சமயம் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இந்தப் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இந்த உடன்படிக்கை வலுவிழந்து விட்டதால் விடுதலைப் புலிகளுடன் மேலுமொரு உடன்படிக்கையொன்றை மேற்கொள்வதில்லையென அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்திருப்பதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும் ஆதலால் பயங்கரவாத அமைப்புடன் இணக்கப்பாட்டிற்கு வருவதில் எந்தவித அர்த்தமும் இல்லையென அரசாங்கம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யுத்த நிறுத்தத்திலிருந்து வாபஸ் பெறுவதென அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல ராய்ட்டருக்கு தெரிவித்திருக்கிறார்.

`இன்று (நேற்று) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவது தொடர்பாக மற்றைய தரப்பிற்கு அரசாங்கம் அறிவித்தல் கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 14 நாட்களுக்கு முன்னர் நாங்கள் இது தொடர்பாக அறிவித்தல் கொடுக்க வேண்டுமென்ற சரத்து ஒப்பந்தத்தில் உள்ளது.'என்றும் ஹுலுகல்ல கூறியிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்‌ஷவும் போர் நிறுத்த உடன்படிக்கை ரத்துச்செய்யப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

போர் நிறுத்த உடன்படிக்கை முடிவிற்கு வருவதாயின் அந்த உடன்படிக்கையில் 4.4 ஆம் சரத்தின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் அல்லது விடுதலைப் புலிகள் அனுசரணையாளரான நோர்வே அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டும். முடிவடையும் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னராக இந்த அறிவித்தலை வழங்க வேண்டும்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக கொள்கையளவில் முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் இனிமேல் வெளிவிவகார அமைச்சும் அரச சமாதான செயலகமும் கலந்தாராய்ந்து உரிய நடைமுறைகளின் பிரகாரம் செயற்படவுள்ளதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறினார்.

இதேவேளை, யுத்த நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ரத்துச்செய்வதற்கான யோசனையை நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சமர்ப்பித்ததாகவும் அதற்கு ஏகமனதாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அநுரபிரியதர்சன யாப்பா ஏபி செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாதெனவும் இது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் நோர்வேயும் சர்வதேச போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவும் தெரிவித்தன.

BBC.

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.

போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.

அத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - கண்டனம்

இரா.சம்பந்தர்
அரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

இராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


PUTHINAM
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் ஆறு வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை கைவிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற சிறிலங்காவின் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பிலான சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியடப்படும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முடிவு போர் தீவிரமடையப்போவதற்கான முன்னறிவித்தலாகவே இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க இது தொடர்பலான யோசனை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றினார். அவருடைய யோசனையை அமைச்சரவை அங்கீகரித்ததாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரச தலைவரும், முப்படைகளின் தளபதியுமான மகிந்த ராஜபக்சவும் இதற்கான அங்கீகாரத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பிலான நடைமுறைகளைக் கவனிப்பதற்கான அமைச்சரவையின் உப குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது.

போர் நிறுத்தத்திலிருந்து விலகிக்கொள்வது என்ற அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் தொடர்பாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அனுசரணை வகித்த நோர்வேக்கு இன்று சிறிலங்கா அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும் எனவும் அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும் விளக்கமளிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரான கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்படி, அதிலிருந்து விலகிக்கொள்வதாக இருந்தால் 14 நாட்களுக்கு முன்னர் அது தொடர்பாக நோர்வே அரசாங்கத்துக்கு முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும்.

அதன்படி இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இன்று தமது முடிவை நோர்வேக்குத் தெரிவிக்கவிருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த முடிவு விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களுக்கான சாத்தியக்கூறுகள் இனிமேல் இல்லை என்பதைத்தான் உணர்த்துவதாக இருக்கின்றது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கள நிலைமைகளின் அடிப்படையிலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த கேகலிய ரம்புக்வெல, தற்போதைய நிலைமையில் போர் நிறுத்த உடன்படிக்கை எழுத்தில் மட்டுமே இருக்கின்றது எனவும், அதன் மூலமாக எந்தவிதமான பலனும் இல்லை எனவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் நிறுத்த மீறல்களைக் கவனத்திற் கொண்டும், தேசத்தின் பாதுகாப்பைக் கருதியுமே இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் கிழித்தெறிய வேண்டும் என சிங்களப் பேரினவாத அமைப்புக்களான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய என்பன நீண்ட காலமாகவே அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்திருக்கின்றன.

மகிந்த ராஜபக்சவும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் போது தான் பதவிக்கு வந்தால் போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறியப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அரசாங்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ச போர் நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அரசாங்கத்தைக் கைப்பற்றி பிரதமர் பொறுப்பை ஏற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க, 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 இல் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

பலத்த சவால்களுக்கு மத்தியில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், 2005 இல் மகிந்த ராஜபக்ச அரச தலைவராகத் தெரிவான பின்னர் போர் தீவிரமடைந்த நிலையில் போர் நிறுத்த உடன்படிக்கை கைவிடப்பட்ட நிலையே காணப்பட்டது.

இந்த நிலையிலிலேயே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து முழுமையாக விலகிக்கொள்வதென்ற நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் இப்போது எடுத்திருக்கின்றது.