Sunday, September 9, 2007

பல தடவை தவறாக உரையாற்றி பரபரப்பை ஏற்படுத்திய புஷ

பல தடவை தவறாக உரையாற்றி பரபரப்பை ஏற்படுத்திய புஷ்
[09 - September - 2007] [Font Size - A - A - A]
ஆசிய பசிபிக் பொருளாதார மாநாட்டில் (ஏ.பி.இ.சி.) பங்கேற்க சிட்னி வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி புஷ், ஒரு கூட்டத்தில் பங்கேற்ற போது பல முறை தவறுதலாக பேசினார். இது கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிட்னியில் நடந்த தொழிலதிபர்கள் கூட்டத்தில் புஷ் பேசுகையில்; `என்னை அறிமுகப்படுத்திய அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவர்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல ஓ.பி.இ.சி. மாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.

புஷ் ஏ.பி.இ.சி. மாநாடு என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால், தவறுதலாக, மசகு எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓ.பி.இ.சி. மாநாடு என்று கூறிவிட்டார். இதைக்கேட்டதும் கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிந்து விட்டனர். உடனே சுதாரித்துக் கொண்ட புஷ், `அடுத்த ஆண்டு நடக்கும் ஓ.பி.சி. மாநாட்டில் பங்கேற்கும்படி எனக்கு அவுஸ்திரேலியா பிரதமர் அழைப்பு விடுத்தார்' என்று சமாளித்தார். ஆனால், ஓ.பி.இ.சி. அமைப்பில் அவுஸ்திரேலியா உறுப்பினராக இல்லை என்பதையும் அவர் மறந்துவிட்டார். தொடர்ந்து பேசிய புஷ், `ஈராக்கில் உள்ள ஆஸ்திரிய நாட்டு இராணுவ வீரர்களை சந்திக்க அவுஸ்திரேலிய பிரதமர் சென்றார். என்று குறிப்பிட்டார். ஈராக்கில் ஆஸ்திரிய நாட்டு இராணுவ வீரர்கள் இல்லை அவுஸ்திரேலிய இராணுவ வீரர்கள் ஆயிரத்து 500 பேர் உள்ளனர். அவுஸ்திரேலியா என்று கூறுவதற்கு பதிலாக ஆஸ்திரியா என்று கூறி மீண்டும் புஷ் தவறு செய்தார். இதனாலும் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. புஷ் இப்படி தப்பு தப்பாக பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த மே மாதம் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வரவேற்பு நிகழ்ச்சியில் ராணியை 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: