Thursday, December 27, 2007

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அமைச்சர் மேர்வின் சில்வா அட்டகாசம்



ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அமைச்சர் மேர்வின் சில்வா அட்டகாசம்
[வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2007, 04:23 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபன செய்திப்பிரிவு அலுவலகத்திற்குள் இன்று வியாழக்கிழமை காலை அத்துமீறிப் பிரவேசித்த அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது குழுவினரும் அங்கிருந்த செய்திப் பணிப்பாளரை கடுமையாகத் தாக்கியதையடுத்து அங்கே பெரும் களேபரம் வெடித்தது.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற அமைச்சர் மேர்வின் சில்வா பங்கேற்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியவாறு ரூபவாஹினி கூட்டுத்தாபன நிறுவனத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்த மேர்வின் சில்வாவும், அவரது குழுவினரும் அங்கிருந்த செய்திப் பணிப்பாளரான ரி.எம்.ஜி.சந்திரசேனவை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அது மட்டுமன்றி மேர்வின் சில்வாவின் குழுவினர் செய்திப் பணிப்பாளரான ரி.எம்.ஜி.சந்திரசேனவை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரின் கட்டுப்பாட்டு அறையை நோக்கி இழுத்துச் சென்றனர். எனினும் சுதாகரித்துக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்த ரி.எம்.ஜி சந்திரசேனவை மீண்டும் கடுமையாகத் தாக்கி ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரின் கட்டுப்பாட்டு அறையை நோக்கி இழுத்துச் சென்றனர்.

இதனைக் கண்ட ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர்கள் கொதித்தெழுந்து மேர்வின் சில்வாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அது மட்டுமின்றி ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரின் கட்டுப்பாட்டு அறைக்குள்ளேயே மேர்வின் சில்வாவையும் அவரது குழுவினரையும் வைத்து முடக்கினர். அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாதபடி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரின் கட்டுப்பாட்டு அறையை சூழ்ந்து கொண்டனர்.

இதனையடுத்து மேர்வின் சில்வாவின் குழுவினருக்கும் ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர்களுக்கும் இடையே கடும் முறுகல் ஏற்பட்டது. வன்முறை வெடிக்கும் சூழ்நிலை அங்கு உருவாகியது.

இதனால் பதற்றமடைந்த மேர்வின் சில்வா, தனது ஆதரவாளர்களுக்கு தொலைபேசியில் அவசரத் தகவலை அனுப்பினார். அங்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். ஆனால் ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர்களின் எதிர்ப்பைக்கண்டு வந்த வேகத்திலேயே அவர்கள் திரும்பிவிட, காவல்துறையினர் அவசர அவசரமாக அங்கு கொண்டுவந்து குவிக்கப்பட்டு மேர்வின் சில்வாவின் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

மேர்வின் சில்வாவுடன் சேர்த்து குடு குழுவைச் சேர்ந்த பலரும் அங்கு முடக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகியும் இருந்தனர்.

மேர்வின் சில்வாவின் பகிரங்க மன்னிப்பு கேட்காத பட்சத்தில் அவரை விடுவிக்கப் போவதில்லை என்று பணியாளர்கள் உறுதியாக நின்றதால் அங்கே பதற்றமும் இழுபறியும் அதிகரித்தது.

சுமார் மூன்று மணி நேரமாக அங்கு பெரும் களேபர நிலை இருந்ததால் அங்கு சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மேர்வினை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயற்சித்த போதும் பணியாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

அங்கே அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தனவும் வந்திருந்தார். அவர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கையைக் கண்டித்ததோடு அவரை காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

எனினும் பணியாளர்கள் அதற்கு சம்மதிக்காது போகவே அங்கே ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

எனினும் மேர்வின் சில்வாவை விடுவிக்க பணியாளர்கள் முன்வராததாலும் அவரைத் தாக்குவதற்கு தயாரான நிலையில் கொதித்தெழுந்து நின்றதாலும் அங்கே பெரும் வன்முறை வெடிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மேர்வின் சில்வா பகிரங்க மன்னிப்பு கேட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் சிலர் கூறினர். ஆனால் இதனை ஏற்காத பணியாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மேர்வின் சில்வாவை பலவந்தமாக பணியாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் காவல்துறையினர் அவரது வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயற்சித்தனர்.

அப்போது மேர்வின் சில்வா மீதும் அவரது குழுவினர் மீதும் அங்கிருந்த பணியாளர்கள் கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில் மேர்வின் சில்வா தலையில் காயமடைந்தார். அவர் மீது சிவப்பு நிறத் திரவத்தாலும் பணியாளர்கள் வீசினர். அவரது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. காவல்துறையினர் அங்கிருந்த மேர்வின் சில்வாவை அழைத்துச் சென்ற பிறகே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட களேபரம் முடிவுக்கு வந்தது.

இச்சம்பவத்தில் காயமடைந்த மேர்வின் சில்வா கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் ஊடக நிறுவனங்களும் மேர்வினின் இந்நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் அவருக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றன.

அரசாங்கம் மேர்வின் சில்வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

மேர்வின் சில்வா இதற்கு முதல் மேலும் பல ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தியிருப்பதாக சுதந்திர தேசிய ஊடக பணிப்பாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Wednesday, December 26, 2007

பிரபாகரனுக்கு பின்னால் ்புலிகள் அமைப்பு என்ன ஆகும்? (உளவியல் போர்)

கடந்த பல வருடங்களாக இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள், தமிழ் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவர்களை புலிகள் கொன்று குவித்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் புலிகளின் கை தான் ஓங்கி வந்தது. படு பயங்கர சர்வாதிகார அமைப்பாக மாறியுள்ள புலிகள் அமைப்பை எதிர்த்து குரல் கொடுக்க யாருமே இல்லை. புலிகளை ஒடுக்க போராடி வந்த இலங்கை ராணுவமும் பலத்த பின்னடைவை சந்தித்து வந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வீரர்கள், முக்கிய பொறுப்பில் உள்ள பலர், இலங்கை ராணுவத்தினரால் தொடர்ச்சியாக கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். வேட்டையாடி வந்த புலிகள் இப்போது பதுங்கு குழியில் பதுங்க ஆரம்பித்து விட்டனர். பாலசிங்கம், தமிழ் செல்வன் ஆகியோர் மறைந்து விட்டனர். முக்கிய தளபதிகள் பலர் காணாமல் போய் விட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபாகரன் உயிருக்கு இலங்கை ராணுவம் குறி வைத்து விட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டால் புலிகளின் அடுத்த தலைவர் யார்? புலிகளின் எதிர்காலம் என்ன?

இலங்கை மட்டுமின்றி இந்தியா குறிப்பாக தமிழக அரசியலிலும் விளைவுகளை ஏற்படுத்தி வரும் புலிகள் அமைப்பை ஒடுக்க இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் உட்பட பல நாடுகளில் இருந்து வாங்கி குவித்துள்ள அதிநவீன உளவுக்கருவிகள், வேவு விமானங்கள், ரேடார்கள், துல்லியமாக குண்டு வீசும் விமானங்கள்மூலம் புலிகளின் பதுங்கு குழிகளை இலங்கை ராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். இப்படிப்பட்ட தாக்குதல் ஒன்றின் மூலம்தான் தமிழ் செல்வனை இலங்கை விமானப்படை தாக்கி அழித்தது.

பிரபாகரன் தங்கியிருக்கும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு, அவரை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நவ., 2ம் திகதி இலங்கையின் கிளிநொச்சியில் உள்ள திருவையாற்றில் ராணுவம் நடத்திய தாக்குதலில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் கொல்லப்பட்டார். இது புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. புலிகளின் கோட்டையாக கருதப்பட்ட வன்னிப் பகுதியில் புலிகளின் ஆதிக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த நவ., 28ம் திகதி இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெயந்தி நகர் என்ற இடத்தில் வான்படை தாக்குதலில் புலிகள் தலைவர் பிரபாகரன் காயமடைந்ததாக செய்திகள் வெளியாயின. இதற்கு இரண்டு நாட்கள் முன்னர் தான், ஜெயந்தி நகரில் உள்ள புலிகள் பதுங்கு குழிகள் மீது ராணுவத்தினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து புலிகள் இணையதளம் "தமிழ்நெட்' கூறுகையில், ""இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை'' என்று தெரிவித்துள்ளது.

கொழும்பில் வெளிவரும் ஆங்கில வார இதழ் "நேஷனல்' கடந்த டிச., 16ம் திகதி வெளியிட்டுள்ள செய்தியில், "கடந்த நவ., 28ம் திகதி ஜெயந்தி நகரில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் புலிகளின் பதுங்கு குழிகள் நோக்கி குண்டுகள் வீசப்பட்டன. இதில் புலிகள் தலைவன் பிரபாகரனின் தோள் பட்டை மற்றும் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்' என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை பிரதமர் ராஜபக்ஸ தெரிவிக்கையில், "புலிகளின் மறைவிடத்தில் இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை தான். ஆனால், அதில் பிரபாகரன் காயமடைந்தார் என்ற செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை' என்றார்.

கடந்த 19ம் திகதி ராணுவ அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது. கடந்த நவ., 28ம் திகதி ஜெயந்தி நகரில் நடந்த தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்துள்ளார். இவர் நவ., 26ம் திகதியே வான்படை தாக்குதலில் காயமடைந்துள்ளார். எனினும், இதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை. தற்போது தான் இது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

வழக்கம் போல் புலிகள் அமைப்பு இந்த செய்தியையும் மறுத்துள்ளது. புலிகள் செய்தி தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், ""பிரபாகரன் காயமடைந்துள்ளார் என்று இலங்கை அரசு வேண்டுமென்றே பொய்யான செய்தியை வெளியிட்டது. புலிகள் அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தலைவரின் பாதுகாவலர்கள் 116 பேர் இறந்து விட்டதாகவும், பிரபாகரன் சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்பட்டதாகவும், பல வதந்திகளை பரப்பி வருகிறது. எல்லாமே தவறானவை'' என்று கூறியுள்ளார். பிரபாகரன் பற்றி வெளியாகும் தகவல்கள் நம்ப முடியாததாக இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். இலங்கை ராணுவத்தின் குறிப்பாக விமானப்படையின் கை ஓங்கி வருவது கண்கூடாக தெரிகிறது. புலிகள் பின்வாங்கி ஓடுவதும் உறுதியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டால் அடுத்து அந்த இயக்கத்தின் தலைவராக யார் வருவார் என்பதுதான் அது?

இலங்கைப் பிரதமர் ராஜபக்ஸவின் சகோதரரும், ராணுவ அமைச்சருமான கோதபாயா ராஜபக்ஸ கூறுகையில், "நாங்கள் புலிகள் தலைவர் பிரபாகரனை குறிவைத்து விட்டோம். விரைவில் வீழ்ச்சி உறுதி'.

கட்டுக்கோப்பான இயக்கமாக இருந்த புலிகள் அமைப்பில் இப்போது அதிருப்தி தலை தூக்க துவங்கியுள்ளது. புலிகள் மீது அதிருப்தி அடைந்துள்ள உள்ளூர் மக்கள், புலிகளின் நடமாட்டம் குறித்து உளவுப்படையினருக்கு தகவல்களை கொடுத்து வருகின்றனர். வலுக்கட்டாயமாக புலிகள் அமைப்பில் இளைஞர்களை அதிக அளவு சேர்த்து வருவதால் புலிகள் அமைப்பு மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது, பிரபாகரன் காயமடைந்தது ஆகியவைகளை வைத்து பார்க்கும் போது, புலிகள் அமைப்புக்கு அடுத்த கட்டத் தலைவரை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவாகி வருவது தெளிவாகிறது.

பிரபாகரனுக்கு அடுத்தபடியாக உள்ள புலிகளின் மூத்த தலைவர் "பேபி' சுப்ரமணியன். இவர் தற்போது, புலிகளின் கல்வித் துறை தலைவராக செயல்பட்டு வருகிறார். இவரது உண்மையான பெயர் இளங்குமரன். இவரைப் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் புலிகளின் ஆரம்ப கட்ட தலைவர்களில் ஒருவர். காங்கேசன் துறை பகுதியைச் சேர்ந்தவர். இவர் தான் பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். உறுதியாக நம்பும் ஒரே தலைவர். இவர் மூத்த தலைவராக இருந்தபோதிலும், போர்க்களத்தில் இறங்கி போரிட்டவர் அல்ல. இவர் கடந்த 1991ம் ஆண்டு வரை இந்தியாவில் தான் இருந்தார். இவர் புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களை இழுத்தார். புலிகளுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர்., செயல்பட மிகவும் முக்கிய பங்காற்றினார். மூத்த தலைவர்கள் அடிப்படையில் இவர் தான் புலிகளின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க வாய்ப்பு உண்டு.

மிதவாத தலைவரான பேபி சுப்ரமணியத்தால் சர்வாதிகார அமைப்பான புலிகள் இயக்கத்தை கட்டி காப்பாற்ற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே அவர் தலைமை பொறுப்பை ஏற்றாலும் விரைவில் மற்ற தலைவர்களால் அவர் பொம்மை தலைவராக மாறி விடுவார். மிகவும் ஆக்ரோஷமான புலிகள் அமைப்பை மிதவாத தலைவரால் கட்டி காப்பாற்ற முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அடுத்தபடியாக புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் முன்னிலையில் உள்ளார். மிகவும் கடுமையானவர். இவரைத்தொடர்ந்து உள்ள சூசை, பானு, சொர்ணம், ஜெயம், தீபன், பால்ராஜ், மற்றும் நடேசன் ஆகியோர் கடந்த 1983ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் தான் புலிகள் அமைப்பில் சேர்ந்தனர். பொட்டு அம்மன் புலிகளின் உளவுப் பிரிவில் இருப்பதால், புலிகள் அமைப்பில் செல்வாக்கானவர். பிரபாகரனுக்கு அடுத்த படியாக அதிக அதிகாரம் இவரிடம் தான் குவிந்து உள்ளது. புலிகளிடம் இவரின் ஆதரவாளர்களே அதிகம். அதனால் தலைமை பொறுப்புக்கு வர இவருக்கே அதிக வாய்ப்பு உள்ளது. இப்போதே இவர் துணைத்தலைவர் போல் தான் செயல்பட்டு வருகிறார்.

இவருக்கு போட்டியாக களத்தில் இருந்தவர் அம்பாறை, மட்டக்களப்பு முன்னாள் தலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா. கருணாவை ஏற்கனவே துரோகி பட்டம் கொடுத்து ஓரம் கட்டி விட்டார் பொட்டு அம்மன்.

இந்தியா போன்ற தெற்கு ஆசிய நாடுகளில் இப்போதெல்லாம் அரசியல்வாதிகளின் வாரிசுகள் தான் பதவிக்கு வருகின்றனர். இலங்கையும் இதில் விதிவிலக்கல்ல. புலிகள் அமைப்பிலும் வாரிசுகள் பொறுப்புக்கு வரவும் வாய்ப்பு உள்ளது.

புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனிக்கு புலிகள் மத்தியில் மதிப்பு உள்ளது. சமீபகாலமாக இவர் புலிகள் இயக்க நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். அவரது புகைப்படங்களை புலிகள் அமைப்பே வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட முதியவர்களுக்கான இல்லத்தை துவக்கி வைத்தார். இவருக்கு வெளிநாடுகளில் உள்ள புலிகள் அமைப்பு இடையேயும் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பிரபாகரனின் தீவிர ஆதரவாளர்கள் இவரது பெயரையும் குறிப்பிட வாய்ப்பு உள்ளது.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோனி. இவரும் அடுத்த தலைமை பொறுப்புக்கு வர வாய்ப்பு உள்ளது. புலிகள் போர் நடவடிக்கையில் இவர் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். விமான ஓட்டிக்கான முறையான பைலட் லைசென்ஸ் பெற்றுள்ளார். புலிகளின் வான்படை தாக்குதலில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கிறார். தலைமை பொறுப்புக்கு பிரபாகரன் குடும்பத்தில் இருந்து போட்டி வரும் சூழ்நிலையில் பொட்டு அம்மன் போட்டியில் இருந்து விலகிக் கொள்வார். ஆனால், பின்னணியில் பொட்டு அம்மனுக்கு பெரும் பங்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரபாகரன் குடும்பத்தினர் மற்றும் புலிகளின் முக்கிய புள்ளிகள் அடங்கிய கூட்டு தலைமை பொறுப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதை தவிர வேறு இரண்டு வாய்ப்புகளும் உள்ளது. இளங்குமரன் தலைமையில் தலைமைக்குழு செயல்படும் என்றும் அல்லது பொட்டு அம்மனும், இளங்குமரனும் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது.

பிரபாகரனைப்போலவே பொட்டு அம்மனும் ராஜிவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. பிரபாகரனுக்குப் பின்னால் பொட்டு அம்மன் பொறுப்புக்கு வந்தாலும் புலிகள் அமைப்பு குறித்த கருத்துக்களில் இந்திய அரசில் எந்த மாற்றமும் இருக்காது.

பிரபாகரனுக்குப் பின்னால் யார் தலைமைப் பொறுப்புக்கு வந்தாலும் புலிகள் அமைப்பு பழையபடியே கொடூரமான, சர்வாதிகார அமைப்பாக செயல்பட முடியுமா என்பது கேள்விக்குறிதான். பிரபாகரன் இல்லாவிடில் புலிகள் அமைப்பு உடனடியாக முடங்கி விடாது. ஆனால் அதன் வீழ்ச்சி ஆரம்பமாகிவிடும் என்பது உண்மை. அதற்கு காரணமும் பிரபாகரனாகத்தான் இருப்பார். அந்த அளவுக்கு தன்னைச் சுற்றி மட்டுமே இயக்கத்தை கட்டி வளர்த்துள்ளார். தனி நபர் துதி பாடும் வகையில் உருவாகியுள்ள இந்த அமைப்பு தனி நபர் தலைவருக்குப் பின் நீடிப்பது சந்தேகம் தான். உலக அரசியல் வரலாறு இதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்களின் ஒரே ஒப்பற்ற தலைவர் தான் மட்டுமே என்ற மாயையை பிரபாகரன் ஏற்படுத்தி வைத்துள்ளார். மாற்று ஏற்பாடு எதையும் செய்யாததால் அவருக்கு பின்னால் புலிகள் அமைப்பில் பிரச்சினை ஏற்படுவது உறுதி.

பிரபாகரன் இல்லையென்று ஆகிவிட்டால், தமிழர்கள் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று அர்த்தம் இல்லை. புலிகள் அமைப்பு வேண்டுமானால் சிதையலாம். இலங்கை அரசு சுலபத்தில் தமிழர் பிரச்சினையில் இருந்து விடுபட்டு விடமுடியாது. நீதி, சமத்துவம் அடிப்படையில் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ஒன்று பட்ட இலங்கை அமைப்பிற்குள் தமிழர்களின் உண்மையான பிரச்னைக்கும், அபிலாஷைகளுக்கும் தீர்வு காணப்படும் வரை இலங்கையில் தமிழர் பிரச்னை நீடிப்பது மட்டும் உறுதி.

Sunday, December 23, 2007

தீவிர வன்முறையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ள அரசியல்

-கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்-
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசியலில் காணப்பட்டிருந்த பிரதானமான பிரச்சினைகளில் ஒன்று அதன் "நிச்சயமற்ற தன்மை" ஆகும். நாட்டின் பொதுவான போக்கு கீழ்நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பது தெளிவானதாக இருந்தபோதும் குறிப்பாக இன மோதல் மட்டத்தில் அதிலும் குறிப்பாக யுத்தகள நிலைமைகள் தெளிவற்றதாகவே காணப்பட்டிருந்தன. துரதிஷ்டவசமாக இவ்விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுபோல் தோன்றுகின்றது. கடந்த சில வாரங்களில் பல அபிவிருத்திகள் மிக விரைவாகவே நடந்தேறத் தொடங்கிவிட்டன. இவை காணப்பட்டிருந்த தெளிவின்மையை இல்லாமற் செய்துவிட்டுள்ளது.

அவ்வகையில் மூன்று பிரதானமான அபிவிருத்திகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
1. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை
2. புலிகளின் தலைவரின் மாவீரர் தின உரை
3. தொடரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள். இக்கட்டுரை தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் பற்றி ஆய்வு செய்கின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் கடுமையான போக்கு ஒன்றைக் கையாண்டிருந்த அதேசமயம் பயங்கரவாதத்தை முழுமையாக அழித்துவிடப் போகின்றோம் என்று கூறிவந்த போதிலும் இச் "சிந்தனை" முழுமையானதாகவும் அதேசமயம் தெளிவானதாகவும் இருந்தது எனக் கூறமுடியாது. ஏனெனில் அவ்வப்போது அதேசமயம் தொடர்ச்சியான வகையில் "நாம் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகவே இருக்கின்றோம்" என்று கூறப்பட்டது. அதேசமயம் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சர்வகட்சி செயன்முறையையும் இடை இடையே கையிலெடுத்து வந்துள்ளது. இப்போக்கிற்கு சர்வதேச சமூகத்தைக் கையாள்வதற்கான தந்திரோபாய ரீதியான காரணம் ஒன்று இருந்தபோதும் தேவை ஏற்படுகின்ற போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இவ்வரசாங்கம் தயங்கப்போவதில்லை என்ற ஒரு அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

உண்மையில் ஆளும்கட்சி மட்டத்தில் இவ்வகையான மெல்லியதான ஒரு விருப்பம் காணப்பட்டிருந்திருக்கலாம். உதாரணமாக ஜே.வி.பி. போன்ற கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும் அரசாங்கம் இன்றும் புலிகளை சட்ட ரீதியாகத் தடை செய்ய முன்வந்திருக்கவில்லை. காரணம் அவர்கள் கருதுவது போன்று தற்செயலாக பயங்கரவாதத்தை முழுமையாக அழிக்கும் தந்திரோபாயம் வெற்றியளிக்காவிடின் கடைசியில் தஞ்சம் புகுவதற்கான ஒரே ஒரு புகலிடமாக சமாதானப் பேச்சுவார்த்தை என்பது அமைந்துவிடக்கூடும். எனினும் கடந்த கால அனுபவம் கற்றுத்தந்த பாடம் என்னவெனில் தடை செய்யப்பட்ட நிலையில் புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவது இல்லை என்பதாகும். எனவே ஒரு தற்பாதுகாப்பு காரணியாக அரசாங்கம் தடை என்கின்ற ஆயுதத்தை இன்றும் கையிலெடுக்கவில்லை. இருப்பினும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற கடும்போக்கு வாக்கு வேட்டைக்கு போதுமானதல்ல என்ற நிலை ஏற்படுகின்றபோது இந்நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படமாட்டாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பது வேறு விடயம்.

எவ்வாறாயினும் இக்கட்டான ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையை ஒரு தற்பாதுகாப்புக் காரணியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு அபிப்பிராயம் மெல்லிய ஒரு மட்டத்திலாயினும் இருந்திருக்குமாயின்இ தமிழ்ச்செல்வனின் கொலையுடன் அது இல்லாமற் செய்யப்பட்டது என்றே கூற வேண்டும். அவ்வகையில் பேச்சுவார்த்தை என்பதற்கான சாத்தியம் அண்மைய எதிர்காலத்தில் முழுமையாக இல்லாமற் செய்யப்பட்டுள்ளது என்று கருதப்பட வேண்டும். இதற்குப் பல காரணங்கள் காணப்படுகின்றன. தமிழ்ச்செல்வன் இராணுவ மற்றும் அரசியல் ரீதியான பின்னணியில் இருந்து தோற்றம் பெற்றிருந்த போதும் அண்மைய கடந்த காலத்தில் அவரது அரசியற் செயற்பாடுகளே பிரதானமானவையாக அமைந்திருந்தன. அவர் கடைசிக் காலத்திலும் கூட இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்று கூறப்பட்டிருந்தபோதும்இ புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் என்பதே முக்கியமானதாய் அமைந்திருந்தது.

இதன் காரணமாகவே அவரது பாதுகாப்பு பலவீனமாக இருந்துள்ளது. இது இரண்டு முக்கியமான விடயங்களைச் சுட்டிக்காட்டுகின்றது. ஒன்று அவரது பாதுகாப்பு பற்றி (தவறான) உயர் நம்பிக்கை காணப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவது தெற்கின் இராணுவஃ அரசியல் சிந்தனைப் போக்குப் பற்றிய சரியான புரிந்துணர்வு காணப்படாதிருந்திருக்கலாம். அதாவது அரசியல் மட்டத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று கருதப்பட்டிருக்கலாம்.

அதேசமயம் அரசாங்கமும் கூட தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் அதிஷ்டவசமாக இடம்பெற்றது ஒன்று அல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று தெளிவாகக் கூறியுள்ளது. எனவே இத்தாக்குதலின் பாரதூரமான தன்மையினையோ அல்லது நோக்கத்தையோ மூடிமறைக்க அரசாங்கம் முயலவில்லை. எவ்வாறாயினும் புலிகளின் இரண்டாவது உயர்மட்டத் தலைவர் என்று கருதப்பட்ட தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடத்துவதற்கான இரண்டு முக்கியமான தேவைகள் காணப்பட்டிருந்திருக்கலாம். ஒன்று அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இராணுவ ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் கூட அரசாங்கத்திற்குப் பாரிய ஒரு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இப்பின்னடைவை சமன் செய்து கொள்வதற்கு அல்லது அதில் இருந்து பொது அபிப்பிராயத்தைத் திசை திருப்புவதற்கு தமிழ்ச்செல்வன் போன்றதொரு பாரிய இலக்கு அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டிருந்தது. எனவேதான் தமிழ்ச்செல்வனின் கொலை ஒரு "பொது உறவு சதிப்புரட்சி" என்று ஆங்கில செய்திகளில் வர்ணிக்கப்பட்டிருந்தது.

உண்மையில் இத்தாக்குதலுக்கு பெரிதும் கவனிக்கப்படாத அரசியல் ரீதியான காரணி ஒன்றும்கூட இருந்திருக்கலாம். புலிகளுக்கு எதிரான செயற்திட்டத்தில் அவர்களை பயங்கரவாதிகள் என்ற கட்டமைப்பினுள் சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்துவது முக்கியமானதொரு நோக்கமாக இருந்தது என்பது வெளிப்படையானது. இந்நோக்கத்திற்குத் தமிழ்ச்செல்வன் பாரிய ஒரு தடையாக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு வெளி உலகுடன் அதிலும் குறிப்பாக மேற்குலக இராஜதந்திரிகளுடன் இருந்த தொடர்புகள் குறைத்து மதிப்பிடக்கூடியவை அல்ல. அத்துடன் புலிகளின் அரசியல் துறைக்கு சர்வதேச ரீதியான ஒரு முக்கியத்துவத்தை அவரது இருப்பு ஏற்படுத்தியிருந்தது. இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது யாதெனில் இரு தரப்புகளுக்கும் இடையிலான வன்முறையும் நெருக்குதல்களும் தீவிரமடைந்ததன் பின்னரும் அண்மையில் மேற்குலக இராஜதந்திரிகள் அவரைச் சந்தித்தமை ஆகும். அதேசமயம் பயங்கரவாதிகள் எனக் கருதப்படும் குழுக்களுடன் எத்தகைய தொடர்பையும் வைத்திருக்க விரும்பாத நிலையிலும் கூட பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அவரை அழைப்பது தொடர்பிலான ஒரு வாதப்பிரதிவாதமும் கூட காணப்பட்டிருந்தது. இவை காணப்படுகின்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட புலிகளின் அரசியல் ரீதியான முக்கியத்துவத்தின் சான்றுகளாகவே அமைந்திருந்தன. எனவே புலிகளை பயங்கரவாதிகள் எனத் தனிமைப்படுத்துவதில் அவரது இருப்பு ஒரு பிரச்சினையாகவே காணப்பட்டிருந்தது. அவ்வகையில் இப்பிரச்சினையை நீக்கியதன் மூலம் புலிகளை சர்வதேச ரீதியாகத் தனிமைப்படுத்துவதில் அரசாங்கம் ஒருபடி முன்னேறியுள்ளது என்று கூற வேண்டும்.

எனினும் அரசியல் போக்கு தொடர்பில் முக்கியமானது தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டதன் விளைவுகளே ஆகும். ஒன்று தற்போது புலிகளின் அரசியற்துறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களது அரசியல் ரீதியான சிந்தனை செயற்பாடுகள் முன்னைய அளவிற்கு கூர்மையாக இருக்குமா என்பது சந்தேகத்திற்கிடமானதே. புதிய அரசியற் துறைப் பொறுப்பாளர் நடேசன் அடிப்படையில் இராணுவ ரீதியான (பொலிஸ்) பின்னணியில் இருந்து தோற்றம் பெற்றவர் என்பதனால் இராணுவ ரீதியான சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிர்காலத்தில் முக்கியத்துவமளிக்கப்படலாம். புலிகள் ஒரு அரசியல் ரீதியான இயக்கமாக மாற வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை சர்வதேச ரீதியாகவும் தென்னிலங்கையிலும் பலமாக இருக்கின்ற நிலையில் இது ஒரு பின்னடைவாகவே கருதப்பட வேண்டும்.

அதேசமயம் அன்ரன் பாலசிங்கம் இல்லாதிருக்கின்ற நிலையில் தமிழ்ச்செல்வனின் மறைவு எதிர்காலத்தில் ஒரு பேச்சுவார்த்தை ஏற்படுமாக இருப்பின் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியிருக்கும். அப்படியான ஒரு நிலை ஏற்படுகின்ற பட்சத்தில் தென்னிலங்கை பேச்சுவார்த்தை மேசையில்கூட இராணுவ ரீதியான தலைவர்களுக்கும் கடும்போக்காளர்களுக்கும் முகம் கெடுக்க வேண்டி ஏற்படலாம். இது பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வது என்ற எதிர்பார்ப்பிற்கு உற்சாகமளிக்கக் கூடியது அல்ல. எனவே தமிழ்ச்செல்வனின் இழப்பு குறுகிய காலத்திற்குரியது அல்ல. மாறாக நீண்ட காலத்திலானது.

அதேசமயம் முக்கியமான பரிமாணம் உளவியல் ரீதியானது. தமிழ்ச்செல்வன் மறைவு தென்னிலங்கையில் பாரிய ஒரு உற்சாகத்தையும் மனத்திடத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இராணுவ மட்டத்தில் முக்கியமானதொரு இலக்கு அழிக்கப்பட்டமையினால் இம்மனநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்ந்து யுத்தம் செய்வதற்கான மனோநிலையை தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருந்தது. அதேசமயம் சமூக மட்டத்திலும் கூட ஒரு ஆரவாரம் ஏற்பட்டிருந்தது. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து கொழும்பு பங்குச் சந்தையில் உயர்வு ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இது தவறான புரிந்துணர்வினால் ஏற்பட்டிருக்கலாம். இது புலிகளைப் பலவீனப்படுத்தியிருப்பதாக தென்னிலங்கையில் கருதப்பட்டது. ஆனால் பலவீனப்படுத்தப்பட்டது அரசியல் பரிமாணம் மட்டுமே என்பதுடன் கொலையைத் தொடர்ந்து தீவிர யுத்தத்திற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது என்பதும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை.

அதேசமயம் சுட்டிக்காட்டப்பட வேண்டிய இன்னுமொரு பரிமாணம் யாதெனில் தென்னிலங்கையின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் பொதுவாக வடக்கிலும் குறிப்பாக புலிகள் அமைப்பினுள்ளும் தொடர்ந்து யுத்தம் செய்வதற்கான உளவியலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச்செல்வன் கொலைக்கான பதிலடி என்ன என்று பொதுவாகக் கேட்கப்பட்ட நிலையில் புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைவதற்கான சாத்தியங்களே அதிகம் காணப்படுகின்றன. ஆகக் குறைந்தது இந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாயினும் அது கடினமாகியுள்ளது. அதேசமயம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீதான தாக்குதல்களையும் அது நியாயப்படுத்திவிடக் கூடும். எனவே துரதிஷ்டவசமாகஇ நாம் மேலதிக வன்முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம் என்பது தெளிவானது.

இந்திய பிரதமரின் வருகையுடன் இனநெருக்கடிக்கான தீர்வுப்பொதியை தொடர்புபடுத்துவது எதற்காக?

[23 - December - 2007] [Font Size - A - A - A]
*டக்ளஸிடம் ஸ்ரீகாந்தா கேள்வி

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை அரசால் முன்வைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் தீர்வுப் பொதியானது, ஏன் இந்தியப் பிரதமரின் அடுத்த வருட இலங்கை விஜயத்துடன் தொடர்புபட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.என். ஷ்ரீகாந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்;

"எதிர்வரும் மாசிமாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவதற்கு முன்னர் மாகாண மட்ட அதிகாரப் பரவலாக்கலை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டம் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டு விடும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கின்றார்.

இலங்கையின் அரசியல் சாசனத்தின் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை அதிகளவில் விரிபடுத்தும் விதத்தில் இந்தத் தீர்வுத் திட்டம் அமையும் என்ற செய்தியையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் வட,கிழக்கு மாகாணங்களுக்கான ஓர் இடைக்கால நிர்வாகத்திற்கு தலைமை தாங்கும் தனது ஆவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் முதலில் ஒரு விடயத்தை புரிந்து கொள்வதற்கு இனி மேலாவது முயற்சிக்க வேண்டும்.

இலங்கைத் தீவின் அதிகார மையம் என்பது முற்று முழுதாக இலங்கை அரசாங்கத்தின் கையில், கொழும்பில் வைத்திருக்கப்பட வழி வகுத்திருக்கும் இன்றைய ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அதிகாரப் பரவலாக்கலும் அர்த்தபுஷ்டி கொண்டதாகவும் முழுமையானதாகவும் ஒரு போதும் அமையவே முடியாது என்பது தான் அந்த விடயம்.

ஆணைப் பெண் ஆக்கவும் பெண்ணை ஆண் ஆக்கவும் தவிர, சகலதையும் சாதிக்கும் அதிகாரம் கொண்டது என வர்ணிக்கப்படும் நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் என்பது, தலைக்கு மேலே கூரிய கொடுவாள் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும் நிச்சயமற்ற நிலையின் மத்தியிலேயே நீடிக்கவும் வேண்டியிருக்கும்!

கொடூர யுத்தற்கு அடி கோலி கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நீதியானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வே இன்றைய அவசரத் தேவை.

கட்டம் கட்டமாக, `தங்கு மடங்கள்' கொண்ட, ஓர் அரசியல் யாத்திரையை `அரசியல் தீர்வு' விடயத்தில் அறிவு படைத்த மனிதர் எவரும் சிந்திக்க முடியாது.

அரசியல் தீர்வுக்கான முதற்படியாக, `ஒற்றையாட்சி' மீது சிங்கள அரசியல் அதிகார சக்திகள் அனைத்தும் கொண்டிருக்கும், `பிடிவாதம் நிறைந்த - அதீத அபிமானத்தை', அவை கைவிட வேண்டும்.

இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் `வரலாற்று ரீதியான வாழ்விடம்' வட கிழக்கு மாகாணங்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, இலங்கையின் அரசியல் சாசனத்தின் `ஒற்றையாட்சி' தன்மையையும், பௌத்த மதத்திற்கு முதலிடமும் முன்னுரிமையும் வழங்கும் மதச்சார்புத் தன்மையையும் நீக்கி, `நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி' முறையை அகற்றி, பூரணமானதோர், சுயாட்சியை தமிழ் பேசும் மக்களின் தாயகத்திற்கு உறுதிப்படுத்தும் ஓர் தீர்வுத் திட்டத்தையே தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும்.

இத்தகைய தீர்வே போருக்கு முடிவு கட்டி நிரந்தர அமைதிக்கு வழி வகுக்கும்.

இந்த யதார்த்த பூர்வமான நிலைமையினை அமைச்சர் டக்ளஸும் அவரைப் போன்றவர்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைவிடுத்து என்றைக்கோ தோல்வி கண்டு விட்ட மாகாண சபைகள் திட்டத்திற்கு வெள்ளையடித்து, அலங்கரித்து, அழகு பார்ப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் எவரும் ஓரடி கூட முன்னேற முடியாது.

மேலும் `இடைக்கால நிர்வாகம்' என்ற பெயரில் வட- கிழக்கில் ஓர் `பொம்மை' ஆட்சிக்கு தலைமை தாங்குவதன் மூலம் இப்பொழுது யாழ்ப்பாணக் குடாநாட்டில் அரங்கேற்றிக் கொண்டிரக்கும் படுகொலைக் கலாச்சாரத்திற்கு சட்டபூர்வ அந்தஸ்த்தை பெற்றுக் கொள்ள முடியுமேயன்றி வேறு எதையும் சாதிக்க முடியாது.

இறுதியாக ஒரு சந்தேகம்! அமைச்சர் டக்ளஸ் `இதோ வருகிறது' என அறிவிப்பு வெளியிட்டிருக்கம் `தீர்வுப் பொதி' இந்தியப் பிரதமரின் உத்தேச இலங்கை விஜயத்துடன் இணைத்துப் பிரஸ்தாபிக்கப்படுகின்றதே...! என்ன காரணம்?" என்றும் கேள்வி யெழுப்பியுள்ளார்.

பட்ஜெட்டை ஜே.வி.பி.எதிர்த்திருந்தால் விமல் வீரவன்ஸ 8 உறுப்பினர்களுடன் அரசு பக்கம் சென்றிருப்பார்'

[23 - December - 2007] [Font Size - A - A - A]
அரசின் வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்தை ஜே.வி.பி. எதிர்த்தால் 8 உறுப்பினர்களுடன் அரச பக்கம் தாவி விட அக்கட்சியின் விமல்வீரவன்ஸ தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக `இருதின' சிங்கள வார இதழில் தெரிவிக்கப்பட்ள்ளதாவது;

`வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக பாராளுமன்றக் கட்டிடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்‌ஷவிற்கும் விமல்வீரவன்ஸவிற்கும் இடையே இரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என்று ஜே.வி.பி.முன்னர் எடுத்திருந்த தீர்மானம் இறுதி நேரத்தில் மாறியுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் மகிந்த ராஜபக்‌ஷவின் செயலகத்துக்குள் இச்சந்திப்பு நடைபெற்றது. அடுத்த ஒரு மணித்தியாலயத்தில் நிச்சயமாக அரசாங்கத்திலிருந்து சுமார் 16 பேர் எதிர்க்கட்சிக்குச் செல்ல தீர்மானித்திருந்தனர்.

அதனால், அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் ஜே.வி.பி. குறைந்த பட்சம் வாக்களிப்பிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்று விமல் வீரவன்ஸவிடம் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார். அந்த தீர்மானத்திற்கு கட்சியினரை இணங்கச் செய்யுமாறும் விமல் வீரவன்ஸவை பசில் கேட்டுள்ளார். இதற்கமைய எவ்வித கோரிக்கையோ நிபந்தனையோ இன்றி ஆதரவுத் தீர்மானத்தை மேற்கொள்வோம் என்று பசில் ராஜபக்‌ஷவிடம் வீரவன்ஸ கூறியுள்ளார்.

அதேநேரத்தில், வாக்களிப்பிலிருந்து விலகியிருந்து அரசாங்கத்தை பாதுகாக்க கட்சியை சேர்ந்தவர்கள் விரும்பாவிடில் தான் ஏழு அல்லது எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரச பக்கம் வருவேன் என்று பசில் ராஜபக்ஷவிற்கு விமல் வீரவன்ஸ உறுதியளித்தார்.

மேலும், பசில் ராஜபக்‌ஷவின் வேண்டுகோளை ஏற்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானைச் சந்தித்த விமல் வீரவன்ஸ, தமது கட்சி வரவு- செலவுத் திட்ட வாக்களிப்பிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதால் எதிர்க்கட்சிக்குச் சென்று அமைச்சுப் பதவிகளை இழக்க வேண்டாமென்று தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்‌ஷவின் மற்றுமொரு வேண்டுகோளுக்கமைய அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் ஆளும் கட்சியினர் இருந்த இடத்திற்கு அருகே சென்ற விமல் வீரவன்ஸ, ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குச் செல்வர்கள் எனச் சந்தேகிக்கும் உறுப்பினர்களுக்கு அருகே சென்று தமது கட்சியின் தீர்மானம் குறித்து அவர்களுக்குக் கேட்கக்கூடியவாறு சத்தமாகக் கூறி அவர்களின் கட்சித் தாவலையும் தடுத்துள்ளார்.

Tamilchelvan

Tuesday, December 18, 2007

ஊடகவியலாளர்கள் அதிகமாக படுகொலை செய்யப்படும் நாடுகளில் சிறிலங்காவுக்கு 3 ஆவது இடம்

அனைத்துலக அளவில் ஊடகவியலாளர்கள் அதிகமாக படுகொலை செய்யப்படும் பட்டியலில் சிறிலங்கா 3 ஆவது நாடாக உள்ளது என்று அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் Press Emblem Campaign (PEC) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரே ஆண்டில் பல ஊடகவியலாளர்கள் முன்னெப்போதும் கொல்லப்பட்டதில்லை. 2005 ஆம் ஆண்டில் உலகம் முழுமையும் 68 ஊடகவியலாளர்களும் 2006 ஆம் ஆண்டில் உலகம் முழுமையும் 96 ஊடகவியலாளர்களும் 2007 ஆம் ஆண்டு 110 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே ஆண்டில் ஈராக்கில் மட்டும் 50 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்காவில் 7 ஊடகவியலாலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஈராக்கிய தலையீட்டுக்குப் பின்னர் அதாவது மார்ச் 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 250 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 27 நாடுகளில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 14 விழுக்காடு அதிகமாகும்.

சோமாலியாவில் இந்த ஆண்டில் 8 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் 5- ஆப்கன், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் 4 ஊடகவியலாள்ர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கெய்ட்டி கொலம்பியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் 6,7,8 ஆம் இடங்களை வகிக்கின்றன.

நேபாளம், காங்கோ குடியரசு, எரித்திரியா, இந்தியா, கௌதமாலா ஆகிய நாடுகளில் தலா 2 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹோண்டுராஸ், உஸ்பெஸ்கிஸ்தான், சல்வடோர், மியான்மர், அமெரிக்கா, பராகுவே, காசா, ஜிம்பாப்வே ரஸ்யா, பெரு, பிரேசில், கானா மற்றும் துருக்கியில் தலா 1 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil History

Friday, December 14, 2007

மகிந்த ராஜபகச அரசாங்கம் வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளது.

மகிந்த ராஜபகச அரசாங்கம் வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளது.

ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காத காரணத்தால் மகிந்த ராஜபக்ச வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்றம் கூடியபோது கட்சிகள் நிலவரம்:

அரசாங்கத் தரப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சி - 56

எம்.ஈ.பி. - 02

எல்.எஸ்.எஸ்.பி. - 01

சி.பி. - 02

நுவ - 02

இ.தொ.கா. - 07

என்.எம்.சி. - 01

ஐ.தே.க. (அதிருப்தி) - 24

முஸ்லிம் காங்கிரஸ் - 02

ஏ.சி.எம்.சி. - 04

ஈ.பி.டி.பி. - 01

யு.சி.பி.எஃப். - 02

ஜாதிக ஹெல உறுமய - 08

ஜே.வி.பி.(அதிருப்தி) - 01

மொத்தம் - 113

எதிர்க்கட்சிகள்:

ஐ.தே.க. - 42

ஜே.வி.பி. - 37

மேலக மக்கள் முன்னணி - 01

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 22

சுதந்திரக் கட்சி (அதிருப்தி) - 02

முஸ்லிம் காங்கிரஸ் - 04

எந்தத் தரப்பும் சாராதோர்

ஜாதிக ஹெல உறுமய - 01

இ.தொ.கா. - 01

சு.க. - 01

சபாநாயகர் - 01

மொத்தம் - 04

என்ற நிலை இருந்தது.

நாடாளுமன்றம் தொடங்கியதும் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க, எதிர்க்கட்சி வரிசையில் சென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அருகே அமர்ந்தார்.

இருப்பினும் அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார்.

வாக்கெடுப்பில் ஜே.வி.பி. கலந்து கொள்ளாமல் வெளியேறியது.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் தமது உறவினர்கள் கடத்தப்பட்டமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெயானந்தமூர்த்தி, தங்கேஸ்வரி, பி.அரியநேந்திரன் ஆகியோர் நாடாளுமன்றுக்கு வரவில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அவரது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

உடுவே தம்மாலோக்க தேரர் மற்றும் நந்தன குணதிலக்க ஆகியோர் மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் மகிந்தவுக்கு ஆதரவாக 114 வாக்குகள் கிடைத்தன. எதிராக 67 வாக்குகளும் வாக்களிக்கப்பட்டன. 47 வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.

Wednesday, December 12, 2007

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தல்


தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்
இலங்கை வரவு செலவுத்திட்டம் குறித்த இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடக்கவிருக்கின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரது உறவினர்கள் நேற்று ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் மருமகனான தபால் ஊழியர் 28 வயதுடைய அருணாசலம் சிவபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமரின் செயலாளரான 70 வயதுடைய அன்புமணி ஆர்.நாகலிங்கம் ஆகியோர் நேற்றிரவு அவர்களது வீடுகளிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரனின் சகோதரனான 54 வயதுடைய கிராம சேவை அலுவலகர் எஸ். ஸ்ரீகாந்தசெய அவர்கள் அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் நேற்று மாலை வீதியில் வைத்தும் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி நோர்வேயிலும் பீ.அரியநேந்திரன் நெதர்லாந்திலும் தற்போது தங்கியிருக்கின்றார்கள்

நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடை பெறவிக்கும் இவ் வேளையில் இடம் பெற்றுள்ள இக் கடத்தல் சம்பவமானது தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தடுக்கும் செயல் என்று குற்றஞ்சாட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனை மீறி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆயுததாரிகளினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதே பாணியில் ஏற்கனவே கடந்த 19 ம் திகதி வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதல் நாள் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரி.கனகசபையின் மருமகன் கடத்தப்பட்டு வாக்கெடுப்பு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டு, கனகசபை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததையடுத்து அன்று இரவு அவர் விடுவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தல்


தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்
இலங்கை வரவு செலவுத்திட்டம் குறித்த இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடக்கவிருக்கின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரது உறவினர்கள் நேற்று ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் மருமகனான தபால் ஊழியர் 28 வயதுடைய அருணாசலம் சிவபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமரின் செயலாளரான 70 வயதுடைய அன்புமணி ஆர்.நாகலிங்கம் ஆகியோர் நேற்றிரவு அவர்களது வீடுகளிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரனின் சகோதரனான 54 வயதுடைய கிராம சேவை அலுவலகர் எஸ். ஸ்ரீகாந்தசெய அவர்கள் அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் நேற்று மாலை வீதியில் வைத்தும் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி நோர்வேயிலும் பீ.அரியநேந்திரன் நெதர்லாந்திலும் தற்போது தங்கியிருக்கின்றார்கள்

நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடை பெறவிக்கும் இவ் வேளையில் இடம் பெற்றுள்ள இக் கடத்தல் சம்பவமானது தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தடுக்கும் செயல் என்று குற்றஞ்சாட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனை மீறி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆயுததாரிகளினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதே பாணியில் ஏற்கனவே கடந்த 19 ம் திகதி வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதல் நாள் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரி.கனகசபையின் மருமகன் கடத்தப்பட்டு வாக்கெடுப்பு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டு, கனகசபை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததையடுத்து அன்று இரவு அவர் விடுவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசுக்கான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் விலக்கிக்கொண்டது

இலங்கை அரசுக்கான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் விலக்கிக்கொண்டது

இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணிக்கு இதுவரை தான் வழங்கிவந்த ஆதரவினை விலக்கிக் கொண்டிருப்பதோடு, இன்று நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் வரிசையிலும் சென்று அமர்ந்துகொண்டிருக்கிறது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பைசர் காசிம் ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பிற்பகல் சபை அமர்வின்போது, அரசில் இதுவரை தாம் வகித்துவந்த அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் அனைத்தையும் இராஜினாமாச் செய்துவிட்டு திடீரென எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

ஆனாலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏனைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய பிரதி அமைச்சர்கள் பாயிஸ் மற்றும் நிஜாமுதீன் ஆகியோர் கட்சியின் இந்த முடிவில் பங்குகொண்டிருக்கவில்லை என்பதும், கால்நடைகள் பிரதி அமைச்சர் பாயிஸ் கட்சித் தலைமையின் ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசினால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவரும் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதின் மூன்றாவதும் இறுதியுமான வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினமான வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இந்த வேளையில் இந்தக்கட்சித் தாவல் இடம்பெற்றிருப்பது அரசின் வரவு செலவுத்திட்டத்தினைத் தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வலுவூட்டியிருப்பதாகவே அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

கடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது 225 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், அதற்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்தன. அன்றையதினம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்கவில்லை. மேலும் இருவர் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருந்த போதிலும் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Sunday, December 9, 2007

புலிப்பயங்கரவாதிகளுக்கு படகுகள் வாங்க வந்த பயங்கரவாதிகள் 2 பேர் சென்னையில் கைது



10 December 2007

* கட்டுரைகள்

Jejakumar.jpgகடற்புலிகளின் சூசைக்கு அடுத்த இரண்டாவது நிலைப் பயங்கரவாதியான கெளரி சங்கர் என்று அழைக்கப்படும் ஜெயக்குமார்் சென்னையில் கைது. பயங்கரவாத அமைப்பான புலிகளுக்கு இயந்திர படகுகள் கடத்த முயன்ற புலிகள் இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவிய சென்னை பிரமுகரும் கைது செய்யப்பட்டார்.தமிழகத்தில் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் இயக்கங்களை கியூ' பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டதை அடுத்து புலிகளுக்கு தமிழகத்தில் இருந்து பொருட்கள் வாங்கி வினியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான புலிகளுக்கு உதவும் இந்த செயலில் ஈடுபட்ட ஜேம்ஸ், ஜெயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இவர்களுக்கு உதவி புரிந்த சூளைமேட்டைச் சேர்ந்த ரவிகுமாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கியூ' பிரிவு போலீசாரிடம் ஜேம்ஸ் அளித்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு: இலங்கையில் வியாபாரியாக இருந்த நான் புலிகளுக்கு உதவி செய்தேன். அவர்கள் இயக்கத்தில் என்னையும் இணைத்துக் கொண்டேன். சென்னைக்கு அக்டோபர் மாதம் வந்த நான், புலிகளுக்கு வேண்டிய பொருட்களை பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் பீடி பண்டல்களுடன் சேர்த்து இலங்கைக்கு அனுப்பினேன்.இலங்கையில் புலிகள் கடல் பகுதியில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயர் அலி என்பவன் மூலம், நான் அனுப்பிய பொருட்கள் புலிகள் இயக்கத்திற்கு சென்றடைந்துள்ளது. இவனது கூட்டாளி தான் ராமேஸ்வரத்தில் உள்ள புஷ்பதன்ராஜ். இலங்கை யாழ்ப்பாணம் வல் வட்டித்துறையை சேர்ந்தவர் ஜெயக்குமார் என்ற கவுரிசங்கர்(34). கடல் புலிகள் இயக்கத்தில் 95ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பணியாற்றியவர். கடல் புலிகள் தலைவர் சூசை என்பவரது உத்தரவின் பேரில் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார் இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தஞ்சாவூர் வந்து தங்கினார். லண்டனில் உள்ள புலி உறுப்பினர் கருப்பையா என்ற கடால்பி என்பவர், தஞ்சாவூரில் உள்ள ஜெயக்குமாருக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தை அனுப்பினார். அப்பணத்தில் புதிய படகு ஒன்றை விலைக்கு வாங்கினார் ஜெயக்குமார். புதிய படகை அபிராமபட்டினம் வரை ஓட்டிச் சென்றதால் படகில் தண்ணீர் புகுந்தது.படகை விற்றவரிடம் சென்ற ஜெயக்குமார், கூடுதலாக பணம் கொடுத்து படகை பழுது பார்த்து தருமாறு கூறினார்.

படகை பழுது பார்ப்பதற்கு ஆறு மாதம் தாமதம் ஆகியுள்ளது. அப்படகினை தஞ்சாவூர் அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் ஜேம்ஸ் நிறுத்தி வைத்துள்ளார். அந்த படகை என்னிடம் ஒப்படைக்கும் படி புலிகளின் தலைமை அவருக்கு உத்தரவிட்டுள்ளது. இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையேயான போர் உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. ராணுவத்தினரின் ராக்கெட் தாக்குதலில் புலிகளின் கடல் பிரிவு பலத்த சேதமடைந்துள்ளது. தாக்குதலினால் பல படகுகள் கடலில் மூழ்கி விட்டன. அதனால், புலிகள் கடல் பிரிவை பலப்படுத்த புதிய படகுகளை வாங்கி வருகின்றனர். இலங்கை ராணுவத்தினருக்கு தெரியாமல் கடலில் ஊடுருவி செல்ல, கடலில் நின்றவாறு நீந்திச் செல்ல பிளாஸ்டிக் கால் துடுப்புகளை புலிகள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு வாக்குமூலத்தில் ஜேம்ஸ் கூறியுள்ளார்.

கியூ பிரிவு எஸ்.பி., அசோக்குமார் தலைமையில், புலிகளுக்கு இரும்பு உருளைகள்(பால்ரஸ்), அலுமினியப் பொருட்கள் கடத்திய 81 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று கைதானவர்களுடன் சேர்த்து 84 பேர் இந்தாண்டில் கைது செய்யப்பட்டனர். இதில் 36 பேர் தேசிய பாதுகாப்பு (என்.எஸ்.ஏ) சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரூ.10 லட்சம் பறிமுதல் :தமிழக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., சேகர் உத்தரவின் பேரில் கியூ பிரிவு எஸ்.பி., அசோக்குமார், டி.எஸ்.பி., மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் கலியன் தலைமையிலான போலீசார் மல்லிப்பட்டினத்திற்கு சென்றனர். படகை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், ஜெயக்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ. நான்கு லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். புலிகளுக்கு உதவிய சென்னையைச் சேர்ந்த ரவிக்குமாரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் நேற்று மாலை ஆலந்துார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒன்பது லட்சத்து 48 ஆயிரத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.புலிகளுக்கு உதவிய வழக்கில் தப்பியோடிய ராமேஸ்வரத்தைச் சேர்ந்த புஷ்பதன்ராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புலிகள் கைதானது எப்படி: முழு விவரம் கடற்புலிகளுக்காக படகுகள் வாங்கி சென்னையில் முகாமிட்டிருந்த புலிகள் இருவர், சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் போலீசாரிடம் எப்படி சிக்கினார்கள் என்பது பற்றிய முழு விவரம் வருமாறு: இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் என்ற ராஜா(46). இவரது மகன் பியூஸ்லெஸ்' என்ற பெயரில் இலங்கையில் கடை ஒன்றை நடத்தி வந்தார். மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு வேண்டிய உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தார். அத்துடன், ஏழு படகுகளை வைத்து கடலில் மீன் பிடித்து, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து ஏற்றுமதி செய்து வந்தார்.இவரது படகில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்து வந்தனர். ஜேம்சிற்கு சொந்தமான படகுகளை சிறை பிடித்த கடற்புலிகள், அதிலிருந்த டீசலை திருடி வந்தனர். இப்பிரச்னையை கடல் புலிகள் தலைவர் தம்பி அண்ணா என்பவரின் கவனத்திற்கு ஜேம்ஸ் கொண்டு சென்றார். இதில் ஜேம்சிற்கும், கடல் புலி தலைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஜேம்ஸ் அவரது ஒரிஜினல் பாஸ் போர்ட்டில் அடிக்கடி சென்னைக்கு வந்து சென்றார். இதை பயன்படுத்திக் கொள்ள கடல் புலிகள் திட்டம் தீட்டினர். அதன்படி, அக்.10ல் ஜேம்ஸ் சென்னை வந்தார். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் ரவிக்குமார்(45). இவர், ரியல் எஸ்டேட் புரோக்கர். இவருக்கும், புலிகள் கடல் பிரிவு தலைவர் தம்பி அண்ணாவுக்கும் முன்னரே தொடர்பு இருந்தது.சென்னை வந்த ஜேம்சிற்கு, ரவிக்குமார் என்பவர் அரும்பாக்கத்தில் வாடகை வீடு பிடித்து தங்க வைத்தார்.

இலங்கையில் உள்ள புலிகளின் கடல் பிரிவு தலைவர் தம்பி அண்ணா, சென்னையில் இருந்த ஜேம்சிடம், படகின் பின்புறம் கட்டப்பட்டுள்ள கயிற்றை பிடித்துக் கொண்டு தண்ணீரில் வழுக்கிச் செல்லும் பிளாஸ்டிக் கால் பட்டைகள் வாங்க வேண்டும். அதி வேகமாக தண்ணீரில் நின்ற நிலையில் வழுக்கிச் செல்லும் போது முகத்தில் தண்ணீர் பட்டால், அதனை சமாளிக்க கண்ணாடியுடன் கூடிய தலைக் கவசம் வாங்க வேண்டும். பத்திற்கும் மேற்பட்ட கால் பட்டை மற்றும் தலைக்கவசத்தை சென்னையில் வாங்குங்கள்' என உத்தரவிட்டார். சென்னையில் நீச்சல் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்ற ஜேம்ஸ், புலிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கினார். நீங்கள் கூறிய பொருட்களையெல்லாம் வாங்கி விட்டேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்' என புலிகளின் கடல் பிரிவு தலைவரை தொடர்பு கொண்டு கேட்டார் ஜேம்ஸ். நீங்கள் வாங்கிய பொருட்களுடன் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்படுங்கள். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்குங்கள். உங்களை புலி உறுப்பினர் ஒருவர் வந்து சந்தித்து பேசுவார்' என தம்பி அண்ணா கூறினார். சென்னையில் இருந்து ஜேம்ஸ் மதுரை சென்றார். மருத்துவமனையில் தங்கியிருந்த அவரை புலி உறுப்பினர் ஒருவர் சந்தித்தார். அவர், கறுப்புப் பணம் மூலம் மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட லட்கணக்கான ரூபாய் பணத்தை ஜேம்சிடம் கொடுத்தார். பெயர் தெரியாத அந்த புலி உறுப்பினர் பின்னர் தலைமறைவானார்.மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய ஜேம்ஸ், மதுரையில் உள்ள வணிக வளாகங்களுக்கு சென்றார்.

புலிகள் கேட்ட ஜி.பி.எஸ்.,' என்ற கடலில் படகுகளுக்கு வழிகாட்டும் கருவிகளை வாங்கினார்.இந்த பொருட்களை மூடையாக கட்டிய ஜேம்ஸ், ராமேஸ்வரத்தை சேர்ந்த புஷ்பதன்ராஜ் என்பவரை சந்தித்தார். ராமேஸ்வரத்தில் இருந்து கடத்தல் பொருட்களை படகு மூலம் இலங்கைக்கு அனுப்பி வருபவர் தான் புஷ்பதன்ராஜ். புலிகளுக்கு அனுப்ப வேண்டிய மூடையின் மேல் பீடி பண்டல்' பார்சல் என புஷ்பதன்ராஜ் எழுதினார்.அவற்றை கள்ள படகு மூலம் இலங்கைக்கு அனுப்பினார். புலிகள் கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்த ஜேம்ஸ், மீண்டும் சென்னை வந்து தங்கினார். சென்னை விமான நிலையத்திற்கு சென்று, இலங்கைக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்தார்.கடல் புலிகள் தலைவர் தம்பி அண்ணா, ஜேம்சை தொடர்பு கொண்டு, நீங்கள் சென்னையில் இருந்து இலங்கைக்கு இப்போது வர வேண்டாம். எங்கள் இயக்கத்திற்கு புதிய படகு ஒன்று வாங்குவது தொடர்பாக உங்களை ராஜ் என்பவர் விமான நிலையத்தில் சந்திப்பார். அவரிடம் பணத்தை பெற்று புதிய படகு வாங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

அதனால், இலங்கைக்கு செல்ல எடுத்த விமான டிக்கெட்டை கேன்சல்' செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு விமான நிலையம் சென்றார் ஜேம்ஸ். ராஜ் என்பவருக்காக காத்திருந்தார். கியூ பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ், விமான நிலையத்தில் பழைய குற்றவாளிகளை தேடிச்சென்றார்.வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் நின்றிருந்த ஜேம்ஸ், போலீசாரிடம் சிக்கினார். புலிகளுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என்று கூறினார். போலீசாரின் புலன் விசாரணையில் புலிகளுக்கு உதவியதை ஜேம்ஸ் ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்த நான்கு லட்சத்து 78 ஆயிரம், நான்கு மொபைல் போன்கள், பாஸ் போர்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Saturday, December 8, 2007

இந்தியர்களின் தூண்டுதலே காரணம்: டத்தோ சாமிவேலு குற்றச்சாட்டு

மலேசியாவில் அண்மையில் ஏற்பட்ட பேரணி, வன்முறைச் சம்பவங்களுக்கு இந்தியாவில் உள்ள சில குழுக்களின் தூண்டுதலே காரணம் என்று பொதுப்பணித் துறை அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான டத்தோ சாமிவேலு குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் கூறியது: மலேசியாவில் பேரணி நடத்த அரசு தடை விதித்திருந்த போதிலும் கடந்த வாரம் இந்திய வம்சாவளியினர் நடத்திய பேரணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தடையை மீறி பேரணி நடத்தப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதன்மூலம் மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு 10 லட்சம் டாலர் கிடைக்கும் என்று உறுதி அளித்திருந்ததால் தடை விதிக்கப்பட்ட இந்தப் பேரணியில் பெருமளவில் மக்கள் பங்கேற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்து உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் 7 பேரும் வழக்கறிஞர்கள். அரசாங்கமே தங்கள் கையில் இருப்பதாக இவர்கள் நினைத்து செயல்பட்டுள்ளனர். இந்து உரிமைக் குழுவுக்கு மலேசியாவில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு உள்ளது. அதிலும் குறிப்பாக மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிமும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மற்றொரு எதிர்க்கட்சியும் பேரணியை ஆதரித்துள்ளது.

மலேசியா குறித்த அபிப்பிராயத்தை சர்வதேச அளவில் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்து உரிமை அமைப்பினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

மலேசியாவில் வேலை வாய்ப்பில் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படுவது தவறான தகவலாகும். மலேசியாவில் வேலையின்றி யாரேனும் இருக்கிறார்கள் என்றால், ஒன்று அவர்கள் குறிப்பிட்ட வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தோடு இருக்க வேண்டும் அல்லது சோம்பேறிகளாக இருக்க வேண்டும். மலேசியாவில் மட்டும் 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ. 38,101. ஆனால் மலேசியாவின் தேசிய சராசரி வருவாய் ரூ. 35,807 ஆகும். இந்துக் கோவில்கள் இடிக்கப்படுவதாகக் கூறப்படுவதும் தவறான தகவலாகவும். 1980-ம் ஆண்டு மலேசியாவில் மொத்தம் 17,760 கோவில்கள் இருந்தன. தற்போது 20 ஆயிரம் கோவில்கள் உள்ளன.

சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட 150 சிறிய கோவில்கள்தான் இடித்துத் தள்ளப்பட்டன. இவ்விதம் இடிக்கப்பட்ட கோவில்களை வேறு இடங்களில் கட்டுவதற்கு நிலமும் வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் இந்தியாவிலிருந்து குடியேறியவர்களாவர். மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியில் 6,40,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு மொத்தம் வாக்குரிமை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 8,20,000.

இந்த பேரணி சம்பவத்தால் தேர்தலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உண்மை என்னவென்று நாட்டு மக்களுக்கு நாங்கள் எடுத்துச் சொல்வோம்.

இங்குள்ள மக்களிடையே இன துவேஷம் கிடையாது. எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. ஒற்றுமையே எங்களது பலம் என்றார் சாமிவேலு.

தென்னிலங்கையில் அடித்தால்தான் போர் குறித்த கவலையும் அச்சமும் சிறிலங்காவுக்கு வருகிறது: "வெள்ளிநாதம்" வார ஏடு

வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2007, 08:11 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
அடியாத மாடு படியாது என்பது போல தென்னிலங்கையில் அடித்தால்தான் போர் குறித்த கவலையும் அச்சமும் சிறிலங்காவுக்கு வருகிறது என்று தாயகத்திலிருந்து வெளிவரும் "வெள்ளிநாதம்" வார ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த வெள்ளிநாதத்தின் ஆசிரியர் தலையங்கம்:

காய்ச்சலும், தலையிடியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பதைப்போலத்தான் தென்னிலங்கை அரசியல் சக்திகளின் போர் குறித்த சிந்தனையும் அதன் நிலைப்பாடும் காணப்படுகின்றது.

தமிழர் தாயகத்தில் எத்தனை தொன் குண்டு வெடித்தால் என்ன? தமிழ் மக்களின் வாழ்விடங்கள் வன்பறிப்புச் செய்யப்பட்டால் என்ன? எத்தனையாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டால் என்ன? இது குறித்த கவலையோ, கரிசனையோ தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்குக் கிடையாது. போரும் அதன் அழிவும் தமிழர்களுக்கானது என்பதே தென்னிலங்கை சக்திகளின் ஒருமித்த நிலைப்பாடாக இருந்து வருகிறது.

இந்தப்போரை அரச படைகள் எனும் பெரும் மனிதப்பட்டாளம் மற்றும் ஆயுத, அதிகார பலம் மூலம் தமிழர் தாயகத்திற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கலாம் என்ற தவறான கற்பிதம் தென்னிலங்கை சக்திகளிடையே காணப்படுகிறது.

ஆனால் இந்த எண்ணங்களுக்கு மாறாகப் போர் தமிழர் தாயகப் பிரதேசங்களைத் தாண்டித் தென்னிலங்கையின் எல்லைகளையும் அதன் மையங்களையும் தொடுகின்றபோது கொழும்பு கலங்கித்தான் போகிறது.

அப்போது மட்டும்தான் போர் குறித்த கவலையும் அச்சமும் கரிசனையும் தென்னிலங்கையில் ஏற்படுகிறது.

தென்னிலங்கை மக்களின் இயல்பு வாழ்வும் நாளாந்ந நடவடிக்கைகளும் பாதிப்புறுகின்றபோது ஏற்படுகின்ற உணர்வு ஏனோ தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்றபோது கொழும்புக்கு ஏற்படுவதில்லை.

இந்நிலையில் கிழக்கிலிருந்து புலிகளை அடியோடு துடைத்தழித்து விட்டோம் எனவும் கிழக்கிலிருந்த புலிகள் எல்லாம் வன்னிக்குத் தப்பியோடிவிட்டனர் எனவும் அரசு பிரச்சாரம் செய்து ஓய்வு கொள்வதற்கு முன்னரே புலிகள் அம்பாறையைத்தாண்டி அம்பாந்தோட்டையின் யால சரணாலயத்துள் மூட்டி வருகின்ற போர் நெருப்பு சிங்களவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளைவு கலங்கிப்போன தென்னிலங்கை சக்திகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தென்னிலங்கையின் அச்சத்தை பின்வருமாறு கூறுகிறார்.

அதாவது யால வனத்திற்குள் ஊடுருவிப் புலிகள் தாக்குதலை நடாத்துகின்றனர். எதிர்காலத்தில் சிங்கள மக்கள் பாதுகாப்புத்தேடி மேல்மாகாணத்திற்கு வரும் நிலை ஏற்படும் என எச்சரிக்கிறார்.

இப்போதும் சிங்களவர்களின் பாதுகாப்புக் குறித்த கரிசனைதான் அங்கு முதன்மை பெறுகின்றதே தவிர இந்தப் பாதுகாப்பற்ற நிலையின் உள்ளார்ந்தம் குறித்த சிந்தனையோ அக்கறையோ காணப்படவில்லை.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணாத வரை, தமிழர்களின் உரிமையை வழங்காதவரை இந்த இலங்கைத்தீவில் யாருக்குமே பாதுகாப்புக்கிடையாது என்பதையே போரின் விளைவுகள் அப்பட்டமாகச் சுட்டி நிற்கிறது.

ஆனால் இந்த உண்மையை சிறிலங்கா அரசு புரிந்து கொள்வதாக இல்லை. அத்தோடு இந்த உண்மையை சர்வதேசமும் சிறிலங்காவுக்கு உரிய வகையில் உணர்த்துவதாகவும் இல்லை.

இப்போது யால சரணாலயத்தினுள் புலிகள் ஊடுருவி விட்டனர் எனவும் கொழும்பிற்குள் புலிகள் ஊடுருவி விட்டனர் எனவும் கூக்குரலிடுவதனாலோ அப்பாவிப் பொதுமக்களை சிறைக்கூடங்களில் அடைப்பதாகக் கூறிக்கொண்டு வதைக்கூடங்களுக்கு அனுப்புவதாலோ தீர்வெதனையும் எட்டிவிட முடியாது.

முதலில் இந்த அச்சம் எங்கிருந்து எதன் விளைவாகத் தோன்று கின்றதென்ற தென்னிலங்கை சக்திகளுக்குத் தெரிந்த காரணத்திற்குத் தீர்வை எட்டமுடியாத விடத்து போர் அவர்களின் வாசலைத் தட்டுவதையும் அதன் விளைவாக அச்சம் ஏற்படுவதையும் தடுக்க முடியாது.

மாறாகப் போரும் அதன் விளைவுகளும் இந்த இலங்கைத்தீவில் எல்லாப்பாகத்திற்கும் பரவுவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.

எனவே இதனைத் தடுக்கக்கூடிய மனமாற்றமும் அறிவார்ந்த சிந்தனையும் தென்னிலங்கையில் ஏற்பட வேண்டும். ஆனால் அத்தகைய விஞ்ஞான பூர்வமான மாற்றம் சிறிலங்காவில் தோன்று வதாக இல்லை.

அப்படித் தோன்ற வேண்டுமானால் அடியாத மாடு படியாது என்பது போல தென்னிலங்கையில் அடித்தால் மட்டும் தான் தோன்றும் போலிருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, December 7, 2007

இரத்த வெறிகொண்ட கொலைவெறியன் பிரபாகரனின் மனிதவேட்டை

தனிநாட்டுக் கோஷங்களுடன் ஆரம்பித்த புலிப்பயங்கரவாதிகளின் போராட்டம் திசை மாறித் தடம் புரண்டு அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்யும் கையாலாகாத நிலையின் உச்சத்துக்குப் போயுள்ள நிலைகுறித்து கவலைப்படுகின்றனர் மனித நேயம் கொண்டவர்கள். இந்த கையாலாகாத் தனத்தின் அண்மைய நிகழ்வு கெப்பிற்றிக்கொல்லாவயில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற பொதுமக்கள் பஸ் மீதான தாக்குதலாகும்.

சொல்லப்போனால் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல பொதுமக்கள் மீதான புலிப்பயங்கரவாதிகளின் இந்த பயங்கரத் தாக்குதல். அந்த இயக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே சகோதரப் படுகொலைகள் துவங்கி விட்டன. தனது கருத்துகளுக்கு எதிர்க்கருத்தினைக் கொண்ட தனது இனத்தவர்களையே கொல்ல ஆரம்பித்த கொலைகாரன் தனது கொலைக் கலாசாரத்தினை திசைகளெங்கும் பரப்பினான்

காத்தான்குடி பள்ளிவாசலில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள், அருந்தலாவ பகுதியில் சிங்களவர்கள் மற்றும் தனது கருத்துகளுக்கு முரணாக செயற்பட்ட தமிழர்கள் என்று இன பேதம் பாராமல் குழந்தைகள், பெண்கள், கற்பிணிகள் மற்றும் வயதானவர்கள் என்று கொன்று குவித்த இரத்த வரலாறு காலங்களெங்கும் நீண்டு கிடக்கிறது.

பொதுமக்கள் மீதான இந்த தாக்குதல்கள் மூலம் புலிப்பயங்கரவாதிகள் எதைச் சாதிக்க நினைக்கின்றார்களோ தெரியவில்லை. ஆனால், அப்பாவி உயிர்களைக் கொல்வதன் மூலம் எதையுமே சாதிக்க முடியாது என்று கெப்பிற்றிக்கொல்லாவ சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார் இந்து மதகுரு ஒருவர்.

இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக கொலையைத்தான் குறிப்பிடுகின்றன. ஆனால், கொலை வெறி பிடித்தலையும் பிரபாகரனுக்கும் அவனால் உருவாக்கப்பட்ட மனநோயாளிகளுக்கும் இந்த அறிவுரையெல்லாம் எடுபடப்போவதேயில்லை. அவர்களின் தீராத ரத்த வெறிக்கு இன்னும் மனித உயிர்கள் பலியாகாமலிருக்க இறைவனைப் பிரார்த்திப்பதைவிட அவனைக் கொல்வதே முழுமையான தீர்விற்கும் வழியமைக்கும்.

தேசிய பாதுகாப்புக் கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் ஒரு சில நடவடிக்கைகளையே மனித உரிமை மீறலென்றும், மனதாபிமானமற்ற செயலென்றும் கூறி, கூக்குரலிடும் புலிப்பயங்கரவாதிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கொலைவெறியில் திருப்தியடையும் ஊடகங்களும் கெப்பிற்றிக்கொல்லாவ சம்பவத்தை வெறும் செய்தியாக மட்டுமே சொல்லியிருக்கின்றன. மனிதாபிமானம் பேசும் நிறுவனங்கள் கூட இவ்விடயத்தில் மௌனிகளாகி விட்டன.

புலிப்பயங்கரவாதிகள் ஆட்டம் காணும் போதெல்லாம் இவ்வாறு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழமையாகக் கொண்டுள்ளதை அதன் கடந்த கால வரலாறுகளை வைத்து நாம் கண்டு கொள்ளலாம். புலிகளின் மறைந்த அதிஉயர் பயங்கரவாதிகளில் ஒருவரான அரசியல் பொறுப்பாளர் எனக்கூறப்படும் சு.ப. தமிழ் செல்வன் அவர் கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்த செய்தியானது இங்கு குறிப்பிடத்த்தக்கது. அதாவது, வடக்கு நோக்கி படையினர் தமது தாக்குதல்களை முன்னெடுத்தால் தெற்கில் ரத்த ஆறு ஓடும் என்று அந்தப் பயங்கரவாதி சொல்லியிருந்தான். அந்த ரத்த ஆற்றைத்தான் இப்போது பொதுமக்கள் மீதான தாக்குதலின் மூலம் பயங்கரவாதிகள் ஓட வைக்க முயற்சிக்கின்றார்கள்.

ஆனாலும், அரசாங்கம் புலிகளின் அனைத்து வகையான தாக்குதல்களையும் முறியடிப்பதற்குத் தயாராகவே இருக்கிறது. இதற்கு பொதுமக்களும் முழு அளவில் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். தற்போது இடம்பெறுவது புலிப்பயங்கரவாதிகளுக்கும், படையினருக்குமிடையிலான மோதல்கள் அல்ல! பயங்கரவாதிகளுக்கும் நாட்டுக்குமிடையில் நடைபெறும் யுத்தமாகும். எனவே, நாட்டை வெற்றி பெற வைப்பதற்கும், அதனூடாக நாட்டின் பிரஜைகளாகிய நாம் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவதற்கும் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும்.

பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை படையினருக்கு அறியத்தருதல், அவர்களைக் காட்டிக்கொடுத்தல், பயங்கரவாதிகள் இவ்வாறு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது மனிதநேய அடிப்படையி;ல் நடந்து கொள்ளுதல் என்று இவ்வாறான நமது ஒவ்வொரு செயற்பாடு மூலமாகவும் நாம் நாட்டின் வெற்றிக்கு உதவ முடியும்.

பயங்கரவாதிகள் இன, மத, மொழி, உறவுகள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அவர்களின் இலக்கை அடைந்து கொள்வதற்காக தமது குடும்ப உறவுகளைத தவிர எதையும் பலியிட அவர்கள் தயாராகவே இருக்கின்றனர். எனவே, இவ்வாறான தாக்குதல்களைக் கண்டிப்பதன் மூலம் நாளை இடம்பெறவுள்ள அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான பங்களிப்பினை நாம் ஒவ்வொருவரும் வழங்க வேண்டும்.

கடந்த வருடமும் கெப்பிற்றிக்கொல்லாவையில் பொதுமக்கள் பஸ்மீது புலிப்பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவு மனித உயிர்கள் பலியாகியிருந்தன. கைக்குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் கொல்லப்பட்டோரில் அடங்குவர். இப்போது மீண்டும் ஒருமுறை புலிகள் தமது இரத்த வெறியை அப்பிரதேசத்தில் அரங்கேற்றியுள்ளனர்.

யால சரணாலயப் பகுதியிலும் அப்பாவிச் சிங்கள மக்களை அண்மைக் காலமாக புலிகள் கொடூரமான முறையில் கொன்று வருகின்றனர். மனித உறுப்புகளை துண்டம் துண்டமாக வெட்டியெறிந்து கொல்லும் புலிகளின் வெறித்தனத்தினூடாகவே அவர்களின் மனநோயினைப் புரிந்து கொள்ளலாம். ஆம், துப்பாக்கிச் சத்தங்களும், இரத்தமும், அழுகை ஒலிகளுமே பங்கருக்கள் இருக்கும் கொலைகாரனைச் சந்தோசப்படுத்தும். இந்த சந்தோசம் என்பது ஒரு வகையான மனநோய்தான். ஆக, இந்த நோயாளர்களின் ஆபத்திலிருந்து ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாப்பதற்கான உச்சக்கட்ட நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது.

குறிப்பாக சிங்கள மக்கள் மீது இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதன் மூலம், அந்த மக்களைக் கோபப்படுத்த பயங்கரவாதிகள் நினைக்கின்றனர். இந்த கோபம் தமிழ் மக்கள் மீது திரும்ப வேண்டும் என்றும், அதனூடாக இனக் கலவரமொன்று உருவாக வேண்டுமென்றும் பயங்கரவாதிகள் ஆசைப்படுகின்றனர். அவ்வாறானதொரு கலவரத்தினூடாக அனுதாபம் தேடுவதற்கு புலிகள் முயலுவார்கள். ஆனால், புலிகளின் இந்த தந்திரம் பற்றியெல்லாம் அனைத்துத் தரப்பினரும் அறிந்தே வைத்துள்ளதால், அவ்வாறு எதுவும் நேரப்போவதில்லை.

மேலும், பொதுமக்கள் மீது இவ்வாறு புலிகள் மோசமான தாக்குதல்களை நடத்தும் வேளைகளில் சகல இன மக்களும் நிதானத்துடனும், புத்திசாதுர்யத்துடனும் நடந்து கொள்ள வேண்டுமென மதத்தலைவர்களும், சமூகப் பெரியார்களும் வேண்டுகோள் விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகள் தோற்றுவருகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. கொலைகாரனான பிரபாகரன் பதுங்கு குழிக்குள் ஓடி ஒழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது அவருக்கான இறுதித்தருணம். மாவீரர் தினம் என்று அவர்களால் கூறப்படும் பிரபாகரனின் பிறந்த நாள் தினத்தன்று அவர் ஆற்றிய உரையைக் கவனித்தால் அவர்களின் தோல்வி பற்றிப் புரிந்து கொள்ளலாம். இது பற்றி பாதுகாப்பு பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறும் போது, பிச்சை கேட்கும் நிலைக்கு பிரபாகரன் தள்ளப்பட்டுள்ளதையே அவரின் அந்த உரை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக, அத்திவாரம் ஆட்டம் காணும் இந்த நிலையில், தாம் தப்பித்துக் கொள்வதற்காகவும் தங்களது கோபத்தினைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டும் புலிகள் நடத்தும் இவ்வாறான மிருகத்தனமான தாக்குதல்கள் அவர்களை இன்னும் அதல பாதாளத்தில் வீழ்த்துமே தவிர வேறெதையும் அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்காது!
vizhippu.net

Monday, December 3, 2007

ஒளியினை விஞ்சிய வேகம்.

இயற்பியலில் சில அடிப்படையான அனுமானங்கள் உண்டு. குவாண்டம் இயற்பியலில் ஆரம்ப காலத்திலேயே , பிளாங்க்ஸ் மாறிலியும், பின்னர் ஒளியின் வேகம் ஒரு மாறிலி என்றும் நிறுவப்பட்டன. இதன் பின்னணி குறித்து பல விளக்கங்கள் மிக எளிமையாகவும் காணக்கிடைக்கின்றன.

இடம் போலவே, காலமும் சார்பு கொண்டது என குவாண்டம் இயற்பியல் கருதுகிறது. காலம் சார்பு கொண்டது என்பதால் ஒளியின் வேகத்தில் ஒரு பொருள் செல்லுமானால், அதன் தளத்தில் காலம் நீள்கிறது, இடம் குறுகுகிறது என்றும் கூறப்படுகிறது. நீள்தல், குறுகுதல் என்பது ஒரு நிலையினைச் சார்ந்தது; அதனோடு ஒப்பிடுதலின் விளைவே என்பதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.

Theory of Relativity-யின் படி ஒளியின் வேகம் ஒரு மாறிலி. இரு வேறு வேறு தளங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகிச் செல்வதாக அனுமானிப்போம். ஒளியின் வேகம் ஒன்றிலிருந்து மற்றொன்றில் நோக்கும்போது, அதிகரிக்கவேண்டும் (பேருந்தில் போகும்போது, எதிரே வரும் வாகனம் படுவேகமாகப் போவது போலத் தோன்றுமே- அதாவது நமது வேகமும் அவ்வண்டியின் வேகமும் கூடிவருவதால்- அதுபோல). ஆனால் குவாண்டம் அளவில் இது ஒளியின் வேகத்திற்கு சாத்தியமில்லை. அது c என்னும் மாறிலியாகவே இருக்கவேண்டும் என்கிறது ரிலேட்டிவிடி கோட்பாடு. இதனை கடு கட்டியான கணக்கியல் சமன்பாடுகள் மூலம் , மூளையைக் கலக்கி நம்மை ஒத்துக்கொள்ள வைத்துவிடுவார்கள்.

அப்படியே ஒளியின் வேகம் மாறுகிறது என்றால், ஒரு செயலின் விளைவுகள், செயலை விட முன்னே நடக்கவேண்டும்... செயலும், அதன் விளைவும் அடுத்தடுத்தே நடக்குமென்பது Causality Principle என்கிறார்கள்.

ஒரு பொருள் ஒளியின் வேகத்திற்கு மேலாக பயணிக்க முடியாது என்பது குவாண்டம் இயற்பியலின் விதி. ஒளியினை மின்காந்த கதிரியக்கம் என 1800களின் இறுதியில் மாக்ஸ்வெல் சமன்பாடுகள் மூலம் நிரூபித்து, மின்சாரப் புலம், காந்தப் புலம், அணுக்கருவின் மெலிய, வலிய விசைகள் என்னும் அடிப்படை விசைகள், புலங்கள் இணைக்கப்பட்டன. விடுபட்டு இருப்பது பொருள்களின் ஈர்ப்பு விசை மட்டுமே. இதனை பிற விசைகளுடன் இணைத்து பெரும் விசை இணைப்புக் கோட்பாடு ஒன்று உருவாக்க பல முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

குவாண்டம் இயற்பியலின் ஒளியின் வேகம் ஒரு எல்லை என்னும் கோட்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிடவில்லை, இன்னும். இது தவறு என நிரூபிக்க பல முயற்சிகள் நடைபெற்றன. இன்னும் தொடர்கின்றன. இன்னும் சொல்லப் போனால், ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் துகள்கள்/அலைகள் பயணிக்க முடியும் என்று காட்டுவது ஒளியின் வேகம் ஒரு மாறிலியென்றும் அது ஒரு எல்லை என்பதையும் மறுதலிக்கும்.

இதுபோல மற்றொரு சவாலாக அமைந்தது- நுண்துகள்கள் ஒரு விசை அல்லது புலத் தடையைத் தாண்டி மறுபுறம் காணக்கிடைப்பது. எதிர் மின்புலம் கொண்ட ஒரு துகளை எடுத்துக் கொள்வோம். மற்றொரு எதிர் மின்புலம் அதற்குத் தடையாக அமையுமானாலும், அத்தடையை மீறி அத்துகள் காணக் கிடைக்கிறது. இதற்கு நியூட்டனின் இயற்பியல் விதிகள் பதில் அளிக்க முடிவதில்லை. குவாண்டம் இயற்பியல் இதனை துளைத்தல் (tunneling) என்கிறது. இரண்டிற்கும் முடிச்சுப்போட்டார் ஒரு ஜெர்மன் விஞ்ஞானி. நுண்ணலைகளை ஒரு அலை கடத்தி (wave guide) மூலம் செலுத்தினார். அக்கடத்தியின் விட்டம் நுண்ணலையின் அலைநீளத்திலும் குறைவாக வைத்தார். அதனால் அந்நுண்ணலை அதன்மூலம் செல்லத் தடையேற்பட்டது. இந்நுண்ணலை தடையில் சிக்கி மெதுமெதுவாக அழிந்து வர, இவ்வலைகள் மறுபுறம் வந்திருக்கக் கூடாது. ஆனால் அவை காணக் கிடைத்தன. குவாண்டம் துளைதல் என இக்கசிவினை முடிவு செய்தார்.

அக்கடத்தியின் மறுபுறம் மெதுவாக கசிந்து வரும் அலையின் வீச்சினைப் பெருக்கி அதன் அலைநீளத்தைக் கண்டறிந்தார். கசிந்த அலையின் முகடுகள் வரும் நேரத்தையும், தடைநீக்கியபின் வருகின்ற அனுப்பப்பட்ட நுண்ணலையின் முகடுகள் வரும் நேரத்தையும் ஆராய்ந்தார். கசிந்த அலைகளின் முகடுகள் நேரத்தில் முன்னரே வந்துவிடுவதால் அவ்வலை தடையினைக் குடைந்து ஒளியின் வேகத்தினும் மிஞ்சிய வேகத்தில் ஊடுபரவி வந்திருக்கிறது என நிரூபிக்கிறார்.

இது ஒரு பித்தலாட்டம் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். நுண்ணலைகள் மாக்ஸ்வெல் சமன்பாடுகளைப் பொருத்து அமைவதால், ஐன்ஸ்டீனின் செயலையும் விளைவையும் குறித்தான கோட்பாட்டை மீறவில்லை என்கின்றனர். இதனை ஒரு கிராஃபிகல் சிமுலேஷன் மூலம் நிரூபிக்க முயல்வதைத்தான் இச்சுட்டியின் வீடியோவில் காண்கிறீர்கள்.
http://atdotde.blogspot.com/2005/09/faster...ght-or-not.html

"சரி. இதனால் என்ன லாபம்?" என சாவகாசமாய் பல் குத்திக் கொண்டு கேட்பவர்களுக்கு- இதன் விளைவுகள் குவாண்டம் கோட்பாடு போலவே மற்றொரு புரட்சியாக அமையும்.

ஒளியின் வேகத்தைவிட வேகமாக ஒரு பொருள் பயணிக்க முடியுமானால், கால அச்சின் சீரான ஓட்டத்தை விட வேகமாகச் சென்று எதிர்காலத்தை எட்டிப் பார்த்துவிட முடியும். ஒரு செயலின் பின்னரே அதன் விளைவு அமையும் என்னும் யதார்த்தத்தினை உடைக்க முடியும். கிளி ஜோசியக்காரர்கள், "எதிர்காலம் பார்ப்பதுதான் நாங்க முன்னாடியே செய்யிறோமே சாமி!" என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். கால வளைவில் பயணம் என்னும் அறிவியல் புனைகதை ஜல்லிகள் நிஜமாகலாம்.

இன்னும் இது முழுதுமாக நிரூபிக்கப் படவில்லை. ஒரு சோதனை முயற்சி மூலம் மட்டும் நிரூபணம் வந்துவிட முடியாது என்றாலும், இந்தச் சோதனையை பலரும் படு சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சொந்த மண்ணில் முரளிதரன் உலக சாதனை!

கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களைப் பெற்றவர் என்ற
உலக சாதனையை இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா
முரளிதரன் இன்று நிலைநாட்டியுள்ளார். அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஷேன்
வோர்னின் உலக சாதனையை முறியடித்தே இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.

145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுக்களைப் பெற்ற
அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஷேன் வோர்னின் என்பவரின் சாதனையை முரளிதரன் நேற்று சமப்படுத்தினார். 116 போட்டிகளில் விளையாடி 710 விக்கெட்டுக்களை பெற்றதன் மூலம் இன்று அச்சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கட் டெஸ்ட் போட்டியின்
மூன்றாம் நாளான இன்று தமது சொந்த ஊரான கண்டி அஸ்கிரிய மைதானத்தில் வைத்தே இச்சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதேவேளை, டெஸ்ட் போட்டியில் முரளிதரன் உலக சாதனை நிகழ்த்தியதை முன்னிட்டு
இலங்கை தபால் திணைக்களம் முரளிதரனின் படத்தை தாங்கிய வட்ட வடிவிலான
முத்திரையொன்றை இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில்வட்ட வடிவிலான முத்திரையொன்று வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முரளிதரன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுமுன்னர் 1000
விக்கெட்டுக்களை வீழ்த்துவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை
வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள முரளிதரன், நான் இன்னும் 4அல்லது 5 வருடங்கள் விளையாடுவேன். எனவே அந்த 1000 விக்கெட் சாதனையை மிக இலகுவாக முறியடித்துவிடுவேன் என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நகரெங்கும் நேற்று 3000 இற்கும் மேல் தமிழர் கைது

[03 - December - 2007] [Font Size - A - A - A]
* நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைப்பு

கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு இவர்களில் பல நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களில் என்றுமில்லாதளவுக்கு கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை இந்தத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன் போது கொழும்பு மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளிலும் 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலி பூஸா முகாம் கடந்த இரு நாட்களில் தமிழர்களால் முற்றாக நிறைந்து விட்டதால் நேற்று முழுநாளும் கைது செய்யப்பட்டவர்களில் பெருமளவானோர் தெற்கில் களுத்துறைச் சிறைக்கும் கொழும்பிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்றுக்காலை வீதிகளில் இறங்கியவர்கள் அனைவரும் ஏதோவொரு பகுதியில் படையினரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களிலும் அதிகாலை முதல் பிற்பகல் வரை அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு அவற்றில் வந்தவர்கள் ஒருவர் விடாது பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதனால் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை கொழும்பு நகரில் நுழைவாயில் பகுதிகள் ஒவ்வொன்றிலும் பல மைல் தூரத்திற்கு வாகனங்கள் பல மணிநேரம் வரிசையாகக் காத்திருந்தன.

கொழும்பு நகருக்குள் பிரவேசித்த தமிழர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு, படையினர் அந்தந்தப் பகுதிகளில் நிறுத்திவைத்திருந்த பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது பெற்றோரும் உறவினர்களும் பொலிஸ் நிலையங்களுக்கு படையெடுத்ததால், நேற்று முழுவதும் கைது செய்யப்பட்டவர்கள் மறைவான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பலர் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

கொழும்பின் மேற்குப் பகுதியில் பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தைப் பகுதிகளில் வீடுகள், வீதிகளில் கைது செய்யப்பட்ட நானூறுக்கும் மேற்பட்டோர் ஐந்துக்கும் மேற்பட்ட பஸ்களில் ஏற்றப்பட்டு கொள்ளுப்பிட்டி சென்.மைக்கல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு நண்பகல் வரை விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பெரும்பாலானோர் சிறைச்சாலைகளுக்கும் தடுப்பு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர்.

ஆண், பெண் வேறுபாடின்றியும் வயது வேறுபாடின்றியும் தமிழர்கள் என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை வெள்ளவத்தை ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள சிங்களப் பாடசாலை ஒன்றுக்குள் 300 க்கும் மேற்பட்ட தமிழர்கள் மிக நீண்டநேரம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களை விடுவித்துச் செல்வதற்காக பெற்றோரும் உறவினர்களும் மணித்தியாலக் கணக்கில் காத்திருந்தனர்.

இதேநேரம், கொழும்பு பாலத்துறை (தொட்டலங்கா) பகுதியிலும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனை நிலையமூடாக கொழும்பு நகருக்குள் நுழைய ஆயிரக்கணக்கான வாகனங்கள் நேற்றுக் காலையிலிருந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தன.

இதனால், கொழும்பு - நீர்கொழும்பு வீதியல் பல மைல் தூரத்திற்கு வாகனநெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துத் தடையுமேற்பட்டது.

கொழும்பு நகருக்குள் வரும் நுழைவாயில்களிலெல்லாம் இவ்வாறு தீவிர சோதனைகளும் கைதுகளும் நடைபெற்றுக் கெண்டிருந்தபோது, கொழும்பு நகருக்குள் கொழும்பு-1 முதல் கொழும்பு-15 வரையான அனைத்துப் பகுதிகளிலும் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல்களையும் சோதனைகளையும் மேற்கொண்டனர். இதன் போதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

கொழும்பு நகருக்குள் இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நகருக்கு வெளியே வத்தளை, ஹெந்தளை, மாபொல, தெஹிவளை, கல்கிசை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றன.

காலை, மாலையெனப் பாராது மட்டக்குளி, முகத்துவாரம், அளுத்மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொஞ்சிக்கடை, கோட்டை, புறக்கோட்டை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் நடத்தப்பட்டன.

கோட்டை ரயில் நிலையம், புறக்கோட்டை பஸ்நிலையம், குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்திலும் முப்படையினரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அமைச்சின் விஷேட உத்தரவின் பேரிலேயே இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் கைதுகளும் இடம்பெறுவதாக படைத்தரப்பு தெரிவித்தது.

கிழமை நாட்களில் வெளியிடங்களிலிருந்து பெரும்பாலும் சிங்கள மக்களே கொழும்பு நகருக்குள் வருவர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு நகரில் பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களே இருப்பதால் நேற்று இந்தத் தேடுதல்களும் கைதுகளும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. பல்லாயிரக்கணக்கானோர் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இந்தத் தேடுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நீர்கொழும்பு நகரிலும் நேற்றுக் காலை தேடுதல்களும் சோதனைகளும் இடம்பெற்றன.

இங்கு மட்டும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு பல லொறிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்தத் தேடுதல்கள் மற்றும் கைதுகளுக்கு அஞ்சி நேற்று கொழும்பு நகரில் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. வந்தவர்கள் பல இடங்களில் மறிக்கப்பட்டு பலத்த விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களால் சிறைக் கூடங்கள் நிரம்பி வழிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Sunday, December 2, 2007

கிழக்கை கிழக்காக இருக்க விடுங்கள், வடக்கு கிழக்கு இணைப்பை நிராகரிக்கிறார் M.R ஸராலின் –த ஜெயபாலன

நீண்டகாலமாக மாற்று அரசியல் இலக்கியத் தளங்களில் செயற்பட்டுவரும் எம்.ஆர்.ஸ்ராலின் அவர்கள் «எக்ஸில்» சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர். முஸ்லிகள், மற்றும் தலித் அரசியல் குறித்து கூடிய கவனம் செலுத்தி வருபவர். தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் இயங்கு சக்திகளில் ஒருவராகவும் ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணியின் பிரதான செயற்பாட்டாளராகவும் இருந்துவருகிறார். அண்மையில் அவர்குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளை ஒட்டியும் கிழக்கு மாகாண அரசியல் தொடர்பாக அவர் முன்வைத்துவரும் கருத்துக்களை மேலும் புரிந்துகொள்ளும் நோக்கிலும் அவரை தேசம்நெற் சார்பாக அணுகி அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் அதற்கு அளித்த பதில்கள்

தேசம்நெற்: அண்மைக்காலமாக உங்களுடைய அரசியல் நிலைப்பாடு மிகவும் சர்ச்சைக்குரியதாக அமைந்து உள்ளது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

ஸ்ராலின்: ஒடுக்கப்படும் மக்கள் நலம் சார்ந்த அரசியல் என்பது எப்போதுமே சர்ச்சைக்குரியதாக இருந்து வருவதே வரலாறு. காரணம் மக்கள் நலம் சார்ந்த அரசியலானது எப்போதுமே அதிகார மையங்களுக்கு எதிரானதாகவும் அதிகார மையங்களை நோக்கி கலகம் செய்வதாகவும் அதிகார மையங்களின் நி~ஸ்டையை குலைப்பதற்கு முயற்சிப்பதாகவுமே காணப்படுகிறது. ஆகவே இதுபோன்ற செயற்பாடுகள் அதிகார மையங்களாலும் அதன் துதிபாடிகளாலும் இவர்களது பிரச்சார வழிமுறைகளினாலும் சர்ச்சைக்குரியதொன்றாகவே பார்க்கப்பட்டும். பரப்பப்பட்டும் வருகின்றது.

இதன் வழியில் நிலவுகின்ற எமது சமூகத்தின் அதிகார படிநிலையை அதனை கட்டிக்காக்கும் கருத்தியலை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றவன் நான் எனும் வகையில்தான் எனது அரசியல் பயணிக்கின்றது. இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால் தமிழ் பேசும் சமூகத்தின் ஆதிக்கக் கூறுகள் மதரீதியில் வேறுபட்ட முஸ்லிம்களை ஒடுக்குகின்றது. சாதிய ரீதியில் தாழ்த்தப்பட்ட மக்களை இரண்டாம் பட்சமாக்கியுள்ளது. பிரதேச ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளை பாதுகாக்கின்றது.

இவை அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருக்கின்ற கருத்தியல் என்னவெனக் கேட்டால் அதுதான் யாழ் - மையவாத - சைவவேளாள கருத்தியலாகும். இக்கருத்தியலில் வழிவந்த தலைமைகளே துரதிஸ்ட வசமாக இதுவரை காலமும் தமிழ் சூழலில் ஆதிக்க சக்திகளாக இருந்து வந்திருக்கிறார்கள் இன்றும் இருக்கிறார்கள். இது அரசியல் ரீதியில் தமிழர் மகாசபையில் தொடங்கி இன்றைய புலிகள் மற்றும் தமிழ் தேசியவாத இயக்கங்கள் வரையிலும் தொடர்கிறது.

இந்த நிலையில் சுமார் 100 வருடங்களாக ஒற்றைத் தடத்தில் சேடம் இழுத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியவாதம் எனும் போலி முகம் கொண்ட அந்த யாழ் அதிகார மையமானது முஸ்லிம்கள் மீதான எனது அக்கறையை தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்காக ஒலிக்கும் எனது குரலை கிழக்குமாகாண மக்களுக்கான எனது தனித்துவப் பார்வையை சர்ச்சைக்குரிய தொன்றாகவே வழிமொழியும், திரிபுபடுத்தும், சேறடிக்கும். இதன் வெளிப்பாடுதான் நீங்கள் கூறுகின்ற சர்ச்சை.

தேசம்நெற்: இலங்கை நடைமுறை அரசியலைப் பொறுத்தவரை உங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன ?

ஸ்ராலின்: முதலாவதாக இலங்கையின் அமைதியை குலைத்து வன்முறைகளுக்கு தூபமிட்டு பயங்காரவாதத்தை உருவாக்கியவர்கள் யார் எனும்போது நம் எல்லோர் பார்வையிலும் சிங்கள இனவாத தலைமைகளையே குற்றம் சுமத்துகின்றோம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இலங்கையில் இனவாதத்தை வளர்த்தெடுத்ததில் சரிசமபங்கு அல்லது அதற்கும் மேலாக கடந்த கால தமிழ் தலைமைகளுக்கே உண்டு என்றே கருதுகின்றேன். இதற்கு இத்தலைமைகளை வழிநடத்திய யாழ் மையவாத கருத்தியலே பெரும் பங்குவகித்தது.

சர்வசன வாக்குரிமை மசோதாவிலும் சுயபாசைகளுக்கான சட்டமூல விவாதங்களின் போதும் இலவசக் கல்வி வழங்க முன்வந்தபோதும் நெற்காணிச்சட்ட மசோதாவிலும் மற்றும் தேசியமயமாக்கல் போன்ற சட்டமூலங்கள் ஏற்படுத்தப்பட்ட வேளைகளிலும் நமது தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் எடுத்த நிலைப்பாடுகள் அப்பட்டமான மக்கள் விரோதிகளின் நிலைப்பாடுகளே. மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பிலும் கூட தமிழ் காங்கிரஸின் தலைமை எடுத்த முடிவுகள் படுகேவலமானவை.

இக்கடந்தகால தலைமைகளை வழிநடத்திய அதே கருத்தியலே இன்று புலிகளை பாஸிட்டுக்களாக்கி அவர்களையும் வழிநடத்துகின்றது. அதனால்தான் பொன். இராமநாதன் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீதான காழ்ப்பு இன்றுவரை தொடர்கின்றது. ஆறுமுகநாவலர் கொண்டிருந்த சாதிவெறி இன்றுவரை தொடர்கிறது.

இந்த நிலையில் இலங்கையில் புலிப்பாசிசம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது அரசியல் வேலைத்திட்டங்களில் முன்னுரிமைக்குரியது. இது வெறும் புலி எதிர்ப்புவாதம் அல்ல. யாழ் மையவாதம் ஆட்சிசெலுத்தும் நூற்றாண்டு காலத் தொடர்ச்சியின் இறுதி உதாரணம் புலிகளோடு முற்றுப்பெற வேண்டும் எனும் கருத்தியல் சார்ந்த நிலைப்பாடு. அதன் பின்னர்தான் வடமாகாணத்திலோ, கிழக்கு மாகாணத்திலோ, இலங்கையின் ஏனைய பிரதேசத்திலோ ஒரு ஜனநாயகச் சூழல் ஏற்பட முடியும்.

இலங்கை வாழ் மக்கள் அரசை நோக்கிய அதிகாரப் பகிர்வுகளையோ பரவலாக்கங்களையோ ஜனநாயக வழிகளில் போராடிப் பெற்றுக்கொள்ளவும் அதற்கு தலைமை ஏற்க ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர்களின் (பன்மைத்துவ) தலைமைகளை உருவாக்கிக் கொள்ளவும் ஏதுவான வழிகள் அப்போதுதான் சாத்தியமாகும். தென்னிலங்கையிலும் புலிகளைக் காட்டி இனவாத உணர்வைத் தக்க வைத்துக்கொண்டு சிங்கள மக்களை ஏமாற்றும் பிழைப்புவாத அரசியல்; தலைமைகளும் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல் குப்பைத் தொட்டிக்குள் சென்றடைய நேரிடும்.

தேசம்நெற்: நீங்கள் மனித உரிமைகள் ஜனநாயகம் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள் ஆனால் கருணா தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) கிழக்கு மாகாண மக்களின் நலன்களோடு ஒத்துப்போகின்ற புள்ளிகளில் கருணா அமைப்பை ஆதரிப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் ரிஎம்.வி.பி உடன் உங்களைத் தொடர்புபடுத்துவதை தவறு என்கிறீர்கள் ?

ஸ்ராலின்: முதலில் கருணாவின் வெளியேற்றத்தை வெறும் புலிக்குள் ஏற்பட்ட பிளவாக மட்டும் பார்க்கின்ற பார்வையானது ஒரு குறுகிய பார்வை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பின்னால் நீண்டகாலமாக தமிழ் சமூகத்தினுள் புரையோடிப்போயிருக்கின்ற யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு என்கின்ற பிரதேச ரீதியிலான வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றது. ஆனால் இந்தப் பிரதேச வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு யாழ் மேலாதிக்கம் பற்றிய கருத்துக்களை கருணா எப்போது தெரிவித்தார் எதற்காக அதனைப் பயன்படுத்தினார் என்பதிலெல்லாம் எனக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

ஆனால் பகிரங்கமாக கருணா புலிகளை நோக்கி எழுப்பிய கேள்விகள் கிழக்கு மக்களின் நலன்கள் சார்ந்தவை. 32 துறைச் செயலாளருக்குமான நியமனங்களை புலிகள் வட பகுதிக்குள்ளே சுருட்டிக்கொண்டதென்பது பொய்யானதொரு தகவல் அல்ல. புலிகளது அந்த நியமனங்களில் காலா காலமாக தொடர்ந்து வருகின்ற யாழ் மேலாதிக்கம் இன்னுமொருமுறை பட்டவர்த்தனமானது. அந்த மேலாதிக்கத்திற்கு எதிரான கேள்விகள் கிழக்கு மக்களுடைய ஆழ்மனங்களின் பிரதிபலிப்பாகும்.

அந்த வகையில் கருணாவின் பிளவுடன் வெளிக்கிளம்பிய ரி.எம்.வி.பி. என்பது ஒடுக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் குரல்களில் இருந்து எழும்பிய அரசியல் உருவாக்கமாகும். தனது பிளவின் போது வீரகேசரிக்கு பேட்டி அளித்த கருணா தமிழீழம் எனும் கோதாவில் யாழ்ப்பாணத்தின் 90 வீதமான நலன்களே மறைந்திருந்தன என்றார். இந்த கருத்தாக்கத்தைத்தான் நான் சுமார் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்தே அடையாளம் கண்டு பேசியும் எழுதியும் வருகின்றேன். நான் இதை எழுத்து, உரையாடல், விவாதம் என்று கருத்தியல் ரீதியில் முன்வைத்து வருபவன். தமிழ் சமூகத்தில் வெளிக்கிளம்புகின்ற அரசியல் போக்குகளை ஒரு சமூகவியல் பார்வையில் ஆராய்ந்து ஒரு கருத்தியல் தளத்தில் செயற்பட்டு வருபவன்.

ஆனால் கருணாவோ இதனை ரீ.எம்.வி.பி.யின் உருவாக்கத்தின் ஊடாக நடைமுறை வேலைத்திட்டம் சார்ந்த களத்தில் முன்னெடுத்தார். இந்த கோட்பாட்டு ரீதியான ஒத்திசைவு என்பது இயல்பானது. இதற்காக என்னை ரி.எம்.வி.பி. எனும் அமைப்புடன் சம்பந்தப்படுத்துவது பொருத்தமற்றது. ஏனென்றால் கிழக்கு மாகாண மக்கள் நலன்சார்ந்து செயற்படுவதற்குரிய உரிமை கருணாவுக்கு மட்டுமோ ரி.எம்.வி.பி. இற்கு மட்டுமோ தாரை வார்க்கப்பட்டு கொடுக்கப்பட்டதொன்றல்ல. அந்த உரிமை எல்லோருக்கும் உண்டு.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி என்பது 2002 இல் கிழக்கு மாகாணத்தில் புலிகளால் பிள்ளைபிடி நிகழ்தப்பட்டுக் கொண்டிருந்த வேளைகளில் எங்களால் அதற்கெதிராக உருவாக்கப்பட்ட ரகசிய பிரச்சார இயக்கமாகும். அப்போது கருணா புலிகளில் இருந்து வெளியேறி இருக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் எனது செயற்பாடுகள் எனது வழியில் அமைந்திருக்கின்றன.

நீங்கள் இப்படி கேட்கும் போது ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பை புலிகள் தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டுள்ளார்கள் என்கிறார்கள். அதேவேளை எல்லாவிதமான தமிழ் தேசியவாத இயக்கங்களும் இந்த இணைப்பு விடயத்தில் புலிகள் கொண்டுள்ள கொள்கையையே பிரகடனப்படுத்துகிறார்கள். அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கும் ஈ.பி.டி.பி. யினர் கூட என்றும் பிரியாத வடக்கு கிழக்கு என்று உறுதியாக இருக்கின்றார்கள். இந்த வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் புலிகளின் அரசியலுடன் எல்லா இயக்கங்களுக்கும் இருக்கின்ற ஒற்றுமையை பார்த்தீர்களா?

மேலும் எந்த வித இயக்கங்களையும் சாராது அமைப்புகளுக்கு வெளியே இருக்கக் கூடிய சுதந்திரமான ஊடகவியலாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் ஜனநாயக வாதிகள், அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் போன்ற எல்லோரும் இந்த இயக்கங்களுடன் தமிழ் மக்களின் உரிமை சார்ந்து ஒத்திசைவாகத்தானே செயற்படுகின்றார்கள். அதற்காக இவர்களை எல்லாம் எல்.ரி.ரி.ஈ என்றோ, ஈ.பி.டி.பி. என்றோ, புளொட் என்றோ கட்சி முத்திரை குத்த முடியுமா? அப்படி கட்சிமுத்திரை குத்துவது எவ்வளவு கேலிக்கூத்தானதாக இருக்க முடியும். புலிகளால் முன்வைக்கப்படும் அரசியல் கோரிக்கையுடன் (தமிழ்த்தேசியம்) இவர்களுக்கு எல்லாம் என்ன ஒத்திசைவு உண்டோ அந்த ஒத்திசைவுதான் கிழக்கு மாகாண மக்களின் நலன்களுடன் ரி.எம்.வி.பி. தன்னை அடையாளம் காட்டும் புள்ளிகளில் எனக்கும் உண்டு.

ஆகவேதான் கிழக்கு மக்களின் நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை ரி.எம்.வி.பி. சாயம் பூசிப்பார்ப்பது உங்கள் பார்வைக் கோளாறு என்கின்றேன். சமூகம் சார்ந்த அரசியல் என்பதை கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் மட்டுமே உரியதாக கருதுகின்ற வெகுளித்தனமான சமூகமாக தமிழ் சமூகம் இன்னும் இருப்பதும் சுதந்திரமான அரசியலாளர்களைக் கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க ஒரு சிவில் சமூகமான தமிழ் சமூகம் இன்னும் வளர்ச்சி அடையாதிருப்பதுமே இப்பார்வை கோளாறுக்கு காரணம் என்பேன். என்ன செய்வது இன்னுமொரு பகுத்தறிவு பெரியாருக்காக எல்லோரும் காத்திருப்போம்.

தேசம்நெற்: இலங்கை அரசின் உளவுத்துறையின் கீழ் இயங்கும் ரி.எம்.வி.பி கிழக்கு மாகாண மக்கள் மீது என்ன அக்கறை கொண்டுள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்கள் ?

ஸ்ராலின்: முதலில் ரி.எம்.வி.பி. இலங்கை அரசின் உளவுத்துறையின் கீழ் இயங்குகிறது எனும் தீர்க்கமான முடிவுகளை கைவசம் வைத்துக்கொண்டே இக்கேள்விகளைக் கேட்கின்றீர்கள். ஆனால் இக்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அல்லது குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய பல்வேறு அமைப்புகள் தமிழ் சூழலில் ஜனநாயக முகத்துடன் வலம் வருகின்றன. ஆனால் அவர்களை எல்லாம் நோக்கி நீங்கள் எப்போதும் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவதில்லை.

இலங்கை உளவுத்துறையுடன் மட்டுமல்ல இந்திய உளவுத்துறையுடன் கூட பல இயக்கங்கள் கொண்டுள்ள உறவுகள் அம்பலமானவை. ஏன் புலிகள் கூட தங்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள இத்தகைய அணுகுமுறைகளை கடந்து போனவர்கள் தான் என்பது வரலாறு.

இன்றைய ஜனநாயக வழிக்குத் திரும்பிய தமிழ் தலைவர்களும், அகிம்சாவாதத் தமிழ் தலைவர்களும் அடங்கலாக எல்லா தமிழ் தலைமைகளுக்கும் புலிகளிடம் இருந்து பாதுகாப்பு கொடுப்பது இலங்கை உளவுத்துறைதான். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இன்று நாலா புறமும் இருந்து ரி.எம்.வி.பி.யை மட்டுமே நோக்கி வருவது யாழ்ப்பாண ஆதிக்க மனோபாவத்துடனான அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை இவ்வேளையில் பகிரங்கப்படுத்த விரும்புகிறேன்.

இதற்கு அப்பால் ரி.எம்.வி.பி. இலங்கை அரசின் உளவுத்துறையின் கீழ் வேலைசெய்கின்றதா? ரி.பி.சி. இலங்கை உளவுத்துறையின் பண உதவியுடன் இயங்குகின்றதா? ஈ.என்.டி.எல்.எவ். இந்திய உளவுத்துறையின் கீழ் இயங்குகின்றதா? என்பது பற்றிய கேள்விகள் அந்தந்த அமைப்புகளின் நடைமுறை, கட்சி வேலைத்திட்டங்களை நோக்கி எழவேண்டியவை.

நான் தமிழ் சூழலில் கட்டுண்டு கிடக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அவற்றை ஆளும் ஆதிக்க கருத்தியல்கள் தமிழ் சமூகத்தின் அசைவியக்கமானது அக்கருத்தியலின் மீது ஏற்படுத்தி வரும் வெடிப்புகள் குறித்து கோட்பாட்டு ரீதியான ஆய்வு வேலைத்திட்டங்களைக் கொண்டவன். கட்சி வாதங்களுக்கும், இயக்க வாதங்களுக்கும் அப்பால் பட்டவன்.

அந்த வகையில் கருணாவினுடைய பிளவும் அதனூடாக உருவாகிய ரி.எம்.வி.பி. யினுடைய அரசியல் உருவாக்கமும் பல்லினச் சூழல் மிகுந்த கிழக்கு மாகாணத்தின் சமூக பொருளாதார அரசியல் காரணிகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக நான் கருதுகின்றேன்.

1) யாழ்ப்பாண ஆதிக்க சக்திகளின் நலன்களில் இருந்து உருவாகிய தமிழ் தேசியம் எனும் பெருங்கொடிய கதையாடலை கிழக்கு மாகாண மக்களிடம் அம்பலப்படுத்தி இருக்கின்றது. இந்த எழுச்சியானது கருத்தியல் ரீதியில் தமிழ் அரசியல் போக்கு அடைந்திருக்கும் வளர்ச்சிக்கட்டம் என நான் கருதுகின்றேன்.

2) ஆயிரமாண்டுகளுக்கு மேலாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பேணப்பட்டு வந்த சமூக நல்லிணக்கம் குலைக்கப்படுவதற்கு காரணமாய் இருந்தது கிழக்கில் காலடி எடுத்து வைத்த தமிழ் தேசியத்தின் வரவேயாகும். ஆனால் கருணா முன்மொழிந்த கிழக்குத் தேசியமானது இன ஐக்கியத்தையும், பரஸ்பர சகிப்புத் தன்மையையும் வளர்த்தெடுக்க வேண்டிய பல்லினச் சூழலில் யதார்த்த நிலையை புரிய வைக்கத் தொடங்கியுள்ளது.

3) கிழக்கு மாகாண மக்களின் அனுமதியின்றி ஜனநாயக விரோதமான முறையில் 20 வருட காலமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான இணைப்பு நீக்கப்பட்டு உள்ளது. இதனை கிழக்கு மாகாண மக்களின் பறிக்கப்பட்டு இருந்த இறைமையானது மீளக் கையளிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகவே நான் கருதுகின்றேன்.

4) இவை எல்லாவற்றுக்கும் மேலாக எந்தவொரு சக்தியாலும் அசைக்க முடியாத தலைமையெனும் பிரபாகரனின் கீழ் இயங்கிய பாசிசப்படைகள் இன்று கிழக்கு மாகாணத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது வெறும் கேணல் கருணா எனும் இராணுவ வித்தகனுடைய பலத்தினால் மட்டும் சாத்தியமானதல்ல. கருணா முன்வைத்த தமிழ் தேசிய நிராகரிப்பும் கிழக்கின் சுயநிர்ணயம் எனும் புதியதொரு கருத்தாக்கம் கிழக்கு மாகாண மக்களிடையே ஏற்படுத்திய அரசியல் எழுச்சியினாலுமே சாத்தியமானதொன்றாகும்.

இவைகளெல்லாம் கிழக்கு மாகாண மக்களின் அக்கறை சார்ந்த விடயங்கள் இல்லை என நீங்கள் கூற முடியுமா?

தேசம்நெற்: இறுதியாக இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பில் கூட நீங்கள் ரி.எம்.வி..பிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டு சலசலப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே ?

ஸ்ராலின்: இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் வைப்பவர்கள் யார்? அவர்களது மூல நோக்கங்கள் என்ன? முகவரி இல்லாத கேள்விகளை தயவுசெய்து நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். கண்முன்னே நடந்த இலக்கியச் சந்திப்பு பற்றி இதுபோன்ற பொய்களை புழுகுமூட்டைகளை காவித்திரிகின்ற மர்ம நபர்கள் உங்கள் கேள்விகளின் உந்துசக்தியாக இருப்பது உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் மீதான நம்பகத்தன்மையை பாதிக்கின்ற விடயம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தகவல்களை நாலாபுறமும் விசாரித்த பின்னரே அவற்றை குற்றச்சாட்டுகளாக அவைக்கு கொண்டுவர வேண்டும்.

அந்த நிகழ்வை தலைமையேற்று நடத்திய பரா மாஸ்ரர் அவர்களிடமோ அங்கு கலந்துகொண்ட 100ற்கு மேற்பட்ட பார்வையாளர்களில் சில 10 பேர்களிடமோ நீங்கள் விசாரித்திருக்க முடியும். இருந்தாலும் கேள்வி என்று வந்த பின்னர் பதிலிறுக்க வேண்டிய பொறுப்பு எனக்குண்டு என்பதால் அங்கே நடந்த விடயத்தை ஒப்புவிக்கின்றேன்.

இலக்கியச் சந்திப்பில் போடப்பட்ட தலைப்பின்படி தீர்வுத்திட்டம் பற்றிய ஒரு பேச்சு திரு.சிவலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அவரது பேச்சு திஸ்ஸவிதாரண யோசனைகளின் அடிப்படையில் பல நல்ல அம்சங்கள் தமிழ் மக்களுக்கு இருப்பதை முன்னிறுத்தி அமைந்திருந்தது. அதையொட்டி திஸ்ஸவிதாரண யோசனைகளை இலக்கியச் சந்திப்பு ஆதரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கின்ற முன்மொழிவை அங்கு சிலர் ஆதரித்தனர்.

இந்த நிலையில் மேற்படி யோசனைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மேலும் சிலர் சுட்டிக்காட்டினர். குறிப்பாக முஸ்லிம்களின் தனித்துவம் பற்றிய சில பார்வைகளை தொட்டுக்காட்டி பசீர் அவர்களும், தலித் மக்களுக்கு விசேட சிறப்புரிமைகள் வழங்க வேண்டிய திருத்தத்தை பிரான்ஸ் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரும், பெண்களின் நிலை தீர்வுத்திட்டங்களில் கவனம் கொள்ளப்படுவதில்லை என்பதால் அதுகுறித்த உபசரத்துக்களை பெண்களின் சார்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உமா அவர்களும் குரல் எழுப்பினர். இதே போன்றுதான் வடக்கு, கிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு தொடர்பாக திஸ்ஸவிதாரண யோசனைகளில் கிழக்கில் இருந்து வெளிவரும் எண்ணங்களும், ஆலோசனைகளும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் என நானும் முன்மொழிந்தேன்.

அதாவது கிழக்கில் இருந்து மூன்று அமைப்புக்கள் இதுவரை தீர்வுத்திட்டம் குறித்த தமது கருத்துக்களை வெளியிட்டு இருப்பதை சுட்டிக்காட்டினேன். ரி.எம்.வி.பி. எனும் அமைப்பினது தீர்வுத்திட்டம் திஸ்ஸவிதாரணவிடம் நேரடியாக கையளிக்கப்பட்டு இருந்தது. கிழக்கு முஸ்லிம் குழுவினது தீர்வுத்திட்டம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதே போன்று ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினராகிய நாங்கள் கடந்த ஆண்டு ஸ்ருற்காட்டில் கிழக்கின் சுயநிர்ணயம் எனும் விரிவான தலைப்பில் ஆவணப்படுத்திய முடிவுகள் போன்றவை முக்கியமானவையாகும். கிழக்கில் இருந்து வெளியான குரல்கள் எனும் அடிப்படையில் திஸ்ஸவிதாரணவின் தீர்வுகளுடன் இணைந்து கிழக்கு மாகாண இணைப்பு பற்றிய விடயத்தில் முடிவுகளை எடுப்பதில் மேற்படி மூன்று அமைப்புகளினதும் ஆலோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினேன். இதுதான் நடந்தது.

முஸ்லிம்கள் சார்பிலும், தலித் மக்கள் சார்பிலும், பெண்கள் சார்பிலும், கிழக்கிலங்கை மக்கள் சார்பிலும் சில விசேட கவனங்களை கோருகின்ற எங்களது திருத்தங்கள் திஸ்ஸவிதாரண யோசனைகளை தீர்மானமாக நிறைவேற்ற முயன்றவர்களுக்கு உவப்பளிக்கவில்லை. விவாதங்களை எதிர்கொள்ளாமலும் முன்திட்டமிடப்பட்ட வகையிலும் «திஸ்ஸவிதாரண யோசனைகளை ஏகமனதாக இலக்கியச் சந்திப்பு தீர்மானித்ததென்று» அறிக்கைவிடத் தயாராய் இருந்தவர்கள் எங்கள் கருத்துக்களை முதலில் நிராகரித்தனர். பின்னர் கவனத்தில் கொள்வதாக கூற முயன்றனர். இறுதியில் தீர்மானம் நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட்டு பின்வாங்கினர். இதுதான் நடந்தது.

எங்கேயோ யாராலோ திட்டமிடப்படுகின்ற யாரினதோ அரசியல் அட்டவணைகளுக்காக வேலை செய்கின்ற முன்முடிவுகளுடன் வந்தவர்களுக்கு இலக்கியச் சந்திப்பின் விவாதக் கலாசாரத்திற்கும் பன்முகப் பார்வைகளைக் கொண்ட உரையாடல் பாரம்பரியங்களுக்கும் முகம்கொடுக்க முடியாமல் போனது என்பதுதான் அந்த நிகழ்வுகளின் சாரம். மற்றையோரின் கருத்துகளுக்காக உயிரைக்கொடுக்க வேண்டாம், மற்றையோரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டாம், மற்றையோர் கருத்துச் சொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு எனும் குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக பண்புகள் கூட அற்ற வக்கிரமான மனப்பான்மையில் இருந்துதான் நான் ரி.எம்.வி..பி. இற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற முயன்றதாக பொய்ப் பிரச்சாரங்கள் முளைத்தெழுகின்றது.

தேசம்நெற்: கருணாவுடைய பிளவின் ஆரம்பத்தில் ரி.பி.சி வானொலி கருணாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. அப்போது நீங்களும் குமாரதுரை போன்றவர்களும் ரி.பி.சிக்கு உங்கள் பங்களிப்பை வழங்கி வந்தீர்கள். பிற்காலங்களில் கருணாவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் தாங்கள் கருணாவில் இருந்து அந்நியமானதாக ராம்ராஜ் கூறுகிறார். ரி.பி.சி உடனான உங்கள் முரண்பாட்டிற்கு என்ன காரணம் ?

ஸ்ராலின்: ரி.பி.சி. என்பது பாசிசத்திற்கெதிரான ஒரு ஜனநாயக குரல்களின் சங்கமிப்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் எங்களின் பங்களிப்பு இருந்தது. இது எந்த ஒரு இயக்கத்தினதோ, கட்சியினதோ கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே நாங்கள் கருதியிருந்தோம். ஆனால் காலப்போக்கில் ரி.பி.சி.யின் பணிப்பாளராகிய ராம்ராஜ் அவர்கள் சார்ந்த கட்சியின் (ஈ.என்.டி.எல்.எவ்) மறைமுகமான கட்டுப்பாட்டுக்குள் ரி.பி.சி. இழுத்து செல்லப்படுவதையும் ரி.பி.சி.யில் பங்கெடுத்து வந்த ஜனநாய சக்திகளின் செல்வாக்கு ஈ.என்.டி.எல்.எவ். இன் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதையும் நாங்கள் அவதானித்தோம்.

அது மட்டுமல்ல ஒரு புறத்தில் ரி.பி.சி. யில் பாசிச எதிர்ப்புப் பிரச்சாரம் பண்ணிக்கொண்டு மறுபுறத்தில் தீப்பொறி என்கின்ற இணையத்தளத்தில் பாசிச எதிர்பாளர்களை கொச்சைப்படுத்தி புலிகளின் நிதர்சனத்தின் தோழமை இணையத்தளமாக சுழியோடும் சுத்துமாத்து அரசியலையும் ரி.பி.சி.யின் பணிப்பாளராய் இருக்கின்ற ராம்ராஜ் அவர்கள் அரங்கேற்றி வருகின்றார். இந்த நிலையில் ரி.பி.சி. ஆனது யாருடைய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றது எதைநோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்கின்ற கேள்விகள் இன்று எங்களிடம் மட்டுமல்ல பல தரப்பினரிடமும் எழும்பியுள்ளது. இதன் காரணமாகத்தான் ரி.பி.சி. மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையும் இன்று பாரிய சரிவு கண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீங்கள் ரி.பி.சி. யினுடைய தொடர்பை நிறுத்திக் கொண்டவர்களாக என்னையும் குமாரதுரை அவர்களையும் மட்டுமே சுட்டிக்காட்டி இருப்பது எங்களது வெளியேற்றத்தை ரி.பி.சி. யுடனான எங்களது முரண்பாட்டை கருணா பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கின்ற தவறான பார்வையில் இருந்தே எழுகின்றது. ஆனால் இன்று ரிபி.சி. யின் முதுகெலும்பான அரசியல் விவாதங்களில் பங்கெடுத்து வந்த 90 வீதமானவர்கள் ரி.பி.சி. யுடன் முரண்பட்டு வெளியேறி இருப்பதை இட்டு நீங்கள் கேள்வி கேட்கவேண்டும்.

ரி.பி.சி யில் அரசியல் ஆய்வாளர்களாக கடமையாற்றிய ஜெயதேவன், பசிர், விவேகானந்தன் போன்றோரும், அரசியல் விவாதங்களில் பங்கெடுத்த கார்த்திக், நிமோ, சோலையூரான், ஜெமினி, கவி, யோகரெட்ணம், நவம், மற்றும் விஜி, சுதா …. என்று ஏராளமானோர் விலகிவருவதன் (விழித்துக்கொண்டதன்) காரணங்களை நீங்கள் தேடுங்கள். இவர்களோடெல்லாம் ஏற்பட்ட முரண்பாட்டுக்கு ரி.பி.சி. யின் பணிப்பாளராகிய ராம்ராஜ் அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்?

தேசம்நெற்: நீங்கள் கருணாவினுடைய நிதி பரிமாற்றங்களில் ஈடுபட்டு உள்ளதாகவும் அதிலிருந்து பெறப்பட்ட பணத்தில் வீடு வாங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது. உங்களுடைய மறுப்பறிக்கையில் நீங்கள் அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. (நீங்கள் வாழும் வீடும் தற்போது வாங்கியதாகச் சொல்லப்பட்ட வீடும்) இக்குற்றச்சாட்டுப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

ஸ்ராலின்: கடந்த மாதம் 20 ஆம் திகதி நீங்கள் பாரிஸ் தலித் மாநாட்டுக்கு வந்திருந்தபோது இக்குற்றச்சாட்டு பற்றிய உங்கள் வினாவலுக்கு எனது தன்னிலை விளக்கத்தை அளித்திருந்தேன். «கருணாவின் வருகைக்கும், நிதி பரிமாற்றங்களுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை.» - ஸ்ராலின் மறுப்பு எனத் தலைப்பிட்டு அந்த செய்தியை தேசம் நெற் இணையத்தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். அதன் பின்னரும் மேற்படி குற்றச்சாட்டுகளை முகவரி இல்லாத இணையத்தளங்கள் நிறுத்திக் கொள்ளாததன் காரணமாக ஒரு பகிரங்க மறுப்பை நானே முன்வந்தும் தெரிவித்திருந்தேன். «என்மீதான சேறடிப்புகளையும், குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுக்கிறேன்.» என்ற தலைப்பில் 26 ஒக்டோபர் மாதம் தேனி, விழிப்பு போன்ற இணையத்தளங்களில் அந்த மறுப்பு பிரசுரமாகியிருந்தது. அதனையும் உங்களது இணையத்தளத்தில் நீங்கள் மீள வெளியிட்டிருந்தீர்கள்.

இந்த எனது பகிரங்கமான மறுப்பில் பக்கம் பக்கமாக நான் எழுதியிருந்த விளக்கங்களின் இறுதியில் மீண்டுமொருமுறை எனது மறுப்பை தெளிவுபடுத்தி «என் மீதான இந்த சேறு பூசல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை, அநீதியானவை என்று கூறி இவை அனைத்தையும் கடுமையாக மறுக்கின்றேன்.» என முடித்திருந்தேன்.

இவையனைத்துக்கும் பிறகு இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் எதற்காக என்னை நோக்கி எழுப்புகின்றீர்கள்? மடியிலே கனமில்லாதவன் யாருக்கும் மண்டியிடத் தேவையில்லை என்பதற்கிணங்க அணுவளவு கூட உண்மையற்ற குற்றச்சாட்டுக்களுக்காக இத்தனை மறுப்புகளுக்கும் மேலாக நான் எனது தனிப்பட்ட வாழ்வு பற்றிய சுயவிபரங்களை விபரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை எனது சுயமரியாதைக்கு இழுக்காகக் கருதுகின்றேன்.

மாறாக குற்றச்சாட்டுகளை பரப்புகின்றவர்கள் தங்கள் சொந்த முகங்களுடன் வெளியே வரட்டும். அவர்கள் முகம் அற்;ற மனிதர்களாக அலைவதிலேயே உங்களுக்கு புரியவில்லையா?

இவையெல்லாம் ஆதாரமில்லாத பொறுப்பற்ற சேறடிப்புகள் என்று. இது வெறும் சேறடிப்பு மட்டுமல்ல இதில் மறைந்திருக்கின்ற சூழ்சியை நான் அம்பலப்படுத்தியே ஆக வேண்டும். நான் கொண்டுள்ள அரசியல் கருத்துகளுக்கு முகம் கொடுக்க முடியாத கோழைகள் என் கருத்துக்களை மட்டுமல்ல என்னையும் அழிப்பதற்கான ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நேரடியாகச் சொன்னால் இது ஒரு கொலை முயற்சியாகும்.

கருணாவின் மீது புலிகள் கொண்டுள்ள பழி தீர்க்கும் படலத்தை லாவகமாக என்னை நோக்கி திருப்பிவிட்டு புலிகளைக் கொண்டு என்னைக் கொலை செய்வதற்கான ஒரு திட்டமிட்ட சதி அரங்கேறிக்கொண்டிருப்பது என்பதையிட்டு ஒரு பொறுப்பு மிக்க பத்திரிகைத் துறையில் ஈடுபடுபவர்கள் எனும் வகையில் நீங்கள் கவனம் கொள்ள வேண்டும். எனது சொந்த விலாசத்தை எனது முழுப்பெயரை, இலங்கையில், எனது சொந்த முகவரியை, எனது நிழற்படத்தை தயார் செய்து போலிக் குற்றச்சாட்டுக்களுடன் புலிகளின் கொலைக் கருவியான நிதர்சனத்துக்கு அனுப்புபவன் கொலைவெறி கொண்டலைபவன் அன்றி வேறென்ன. இதுபற்றி கள்ள மௌனம் காத்துக்கொண்டிருக்கின்ற புகலிடத்து ஜனநாயக முகங்களையும் நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

ஆகவே இப்போது ஒரு ஊடகம் எனும் வகையில் நான் உங்களுடாக ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். என்மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் என்ன? குற்றங்களைச் சுமத்தியவர்கள் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாட்டில் இருந்து தப்ப முடியாது. அதே போன்று அந்த ஆதாரங்களைப் பெற்று பகிரங்கப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த கேள்விகளுடன் என்னை அணுகியவர்கள் எனும் வகையில் உங்களுக்கும் உரியது.

என்மீது நிதிக்குற்றச்சாட்டு செய்திகளைப் பரப்பிய அந்த முகவரி இல்லாத மர்ம நபர்கள் அதற்குரிய ஆதாரங்களை உடனடியாக வெளியிடுமாறு கோருகின்றேன். ஆதாரங்களை வெளியிட தாமதிக்கின்ற ஒவ்வொரு பொழுதுகளும் அவர்கள் என்மீதான கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்கின்ற எனது குற்றச்சாட்டு வலுவடைந்து கொண்டே இருக்கும். மாறாக தமது அநாகரிகமான செயற்பாடுகளை உணர்ந்து எனக்கு அநீதி இழைத்தமைக்காக இவர்கள் பகிரங்க மன்னிப்பு கோரியே ஆகவேண்டும்.

தேசம்நெற்: உங்கள் மறுப்பறிக்கையில் நீங்கள் ஒரு பிரதேசவாதியல்ல என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் வடக்கு – கிழக்கு இணைப்பை நீங்கள் கடுமையாக எதிர்க்கிறீர்கள். வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். இதில் நீங்;கள் வைக்கும் நியாயம் என்ன ?

ஸ்ராலின்: ஆம் நான் நிட்சயமாக பிரதேசவாதியல்ல. ஒரு பிரதேசத்தின் பெயரால் மற்றொரு பிரதேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முனைவதுதான் பிரதேச வாதம். கிழக்கு மாகாணமானது ஒருபோதும் யாரையும் அடிமை கொண்ட வரலாறோ, மேலாதிக்கம் செலுத்திய வரலாறோ அற்றதொன்றாகும். நாங்கள் எங்கள் பிரதேசத்தின் நிர்வாகம் எங்களிடம் இருக்க வேண்டும் என கோருவது எங்களது பிரதேச நலன் சம்பந்தப்பட்ட விடயம். எங்களது மக்களின் அரசியல் அபிலாசைகள் சம்பந்தப்பட்ட விடயம். அதைத்தாண்டி வேறு ஒரு பிரதேசத்தை தேடி அதை ஆக்கிரமிக்க அதன் மேல் ஆட்சிசெலுத்த முனையும் போதுதான் அது பிரதேசவாதம் ஆகின்றது.

மட்டக்களப்பில் வாழுகின்ற யாழ்ப்பாணத்து வியாபாரிகளை மட்டக்களப்பை விட்டு துரத்த முயன்றால் அது அப்பட்டமான பிரதேசவாதம். தமது பிரதேசத்தில் வாழும் மற்றய பிரதேசத்து மக்களை இரண்டாம் தர பிரசைகளாக நடாத்த முனைவது நிட்சயம் பிரதேச வாதமாகத்தான் இருக்க முடியும்.

அதை விடுத்து நாங்கள் கிழக்குமாகாண மக்கள் தனிமாகாண, தனிநிர்வாக அந்தஸ்துக்குரியவர்கள் என குரலெழுப்புவது எங்களது பிரதேச நலன் சார்ந்த விடயம். இன்று தமிழர் தரப்பு அரசியல் வாதிகள் எல்லோரும் தமிழர்களுக்காக தனிநிர்வாகம் கோருவது என்பது இனவாதமாகுமா? இனத்தின் பெயரில் உரிமை கோருவது என்பதால் அது இனவாதம் ஆகிவிட முடியாது. ஆனால் தமிழர்களின் பெயரில் உரிமை கோரிக்கொண்டு தமிழர்களோடு வாழும் சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் அகற்றிவிட்டு தனித்தமிழ் நிலமாக வடகிழக்கை ஆக்க முனைவதுதான் அப்பட்டமான இனவாதமாகும்.

ஆகவே தமிழர்களது அதிகாரப் பகிர்வு கோரிக்கையில் இருக்கின்ற நியாயங்கள் தமிழர்களது சுயநிர்ணயம் சார்ந்த விடயம் என்கின்றோம் அல்லவா? அதைபோன்றுதான் கிழக்கு மாகாணம் தனித்து இயங்க வேண்டும் என்பதும் கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணயம் சார்ந்த விடயம். இதை யார் மறுக்க முடியும். ஒரு மக்கள் கூட்டம் எதை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்கப்படுவதாகக் கூறுகின்றதோ அந்த அடையாளத்தை வைத்தே தமது உரிமைகளைக் கோரும். அது மொழியாகவோ, இனமாகவோ, பிரதேசமாகவோ ஏன் சாதியாகவோ கூட இருக்கலாம்.

யாழ்ப்பாணத்து தமிழர்களிடையே காணப்பட்ட சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் 1970 களில் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் ஒரு தனி தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்றதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆகவே தமிழர்களின் உரிமைகளை கேட்கின்றவர்கள் கிழக்கு மக்களின் உரிமைகளைப் பற்றி பேசுகின்ற எங்களை எப்படி பிரதேசவாதி என்று சொல்ல முடியும். தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கின்ற «சிஹல உறுமய» வை சிங்கள இனவாதிகள் என்று சொல்ல முடியும் என்றால் கிழக்கு மக்களின் உரிமைகளை மறுக்கின்ற எல்லாத் தலைமைகளையும் யாழ்ப்பாண பிரதேசவாதிகள் என்று சொல்ல முடியும்.

ஆம் நாங்கள் அல்ல பிரதேச வாதிகள். எங்களை பிரதேசவாதிகள் என்று சுட்டுகின்ற ஒவ்வொருவரும் யாழ்மேலாதிக்க மனோபாவம் கொண்ட பிரதேசவாதிகளேயாகும். கிழக்கு பிரியவேண்டும் என்பதற்கான நியாயங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் ஒற்றைவரிக்குள் அடக்கிவிடலாம். அதுதான் சுயநிர்ணய உரிமை. (கிழக்கின் சுயநிர்ணயம் எனும் பெயரில் ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி சார்பில் வெளியிடப்பட்ட ஆவணக் கையேட்டைப் பார்க்கவும்)

ஆனால் கிழக்கு மாகாணம் தனித்து இயங்குவதற்கு நியாயங்களை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நீண்ட நெடிய வரலாறு எங்கும் கிழக்கும் வடக்கும் ஒருபோதும் இணைக்கப்பட்டிருக்கவில்லை. அறியப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் உறுகுணை ராச்சியத்தின் (கண்டி) உபபிரிவாகவே கிழக்கு மாகாணம் என இன்று அழைக்கப்படுகின்ற பிரதேசங்கள் அனைத்தும் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தது. முதன் முதலாக மாகாண பிரிப்புகள் வெள்ளையரால் ஏற்படுத்தப்பட்ட போது 1832 ஆண்டு கோல்புறுக் -கமறூன் குழுவினரின் ஆலோசனைகளுக்கு இணங்க மாகாணங்கள் எனும் புதிய புவியியல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டது.

அன்றில் இருந்து 1987 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை அடாத்தாக வடக்குடன் இணைக்கும் வரை இன்னிலை நீடித்தது. அதற்காகத்தான் கிழக்கு மாகாணம் தனித்து இயங்க வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம். வடக்குடன் கிழக்கை இணைக்கக் கோருபவர்கள்தான் அதற்கான நியாயங்களை முன்வைக்க வேண்டும். ஆம் - சவால் விடுகின்றோம், விவாதிக்கத் தயாராயிருக்கின்றோம், வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பதற்கு என்ன நியாயங்கள் உண்டு என்பதை முன்வையுங்கள். வடக்குடன் இணைவதால் கிழக்கு மாகாணத்துக்கு என்ன நன்மைகள் உண்டு? சேறடிப்புகளையும், கறைபூசல்களையும் விடுத்து நேர்மையான பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள் என அழைக்கிறோம்.

தேசம்நெற்: வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டால் கிழக்குத் தமிழர்கள் சிறுபான்மையினர் ஆவார்கள். அதனால் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அரசியல் லாபம் என்ன ?

ஸ்ராலின்: இது நீங்கள் மட்டுமல்ல பல தேசியவாத இயக்கங்களும் முன்வைக்கும் கேள்வியாகும். நாங்கள் எவ்வளவுதான் ஜனநாயகம் பேசினாலும், எவ்வளவுதான் மனித உரிமைகள் குறித்துப் பேசினாலும், எவ்வளவுதான் இன ஜக்கியம் பேசினாலும் தமிழ் நோக்கில் இருந்து வெளியேவர முடியவில்லை என்பதற்கு ஆதாரம் இக்கேள்விதான். உங்களுக்கு (இக்கேள்விகளுடன் அலைகின்ற எல்லோருக்கும்) தமிழர்களைப் பற்றியே கவலை. கிழக்கு மாகாணத்தின் பல்லின வரலாறு, பாரம்பரியம், சமூகப் பரம்பல் என்ற விடயங்கள் பற்றிய பரிட்சயம் அற்றவர்கள் இப்படித்தான் கேட்க முடியும்.

ஆனால் நாங்கள் தமிழர்கள் என்ற குறுகிய பார்வையுடன் மட்டும் பேசவில்லை. அக்குறுகிய பார்வையுடன் கிழக்கு மாகாணத்தை அணுகுவது சமூகவியல் ரீதியில் பொருத்த மற்றதொன்றாகும். ‘கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு மட்டும் உரிய நிலம் அல்ல. அது தமிழர்களுக்கும் உரிய நிலம்.’ கூடவே முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும், பறங்கியர்களுக்கும், ‘வேடர்கள்’ என்று சொல்லப்படுகின்ற வன சுதந்திர மனிதர்களுக்கும் உரிய நிலம். நாங்கள் கிழக்கு மாகணம் எனக் கூறும் போது வெறும் «தமிழ் நோக்கு அரசியல்» இங்கே பொருத்தமற்றது.

தமிழ் தேசியவாதத்தின் வரவே எங்களிடம் இனப்பகையை மூட்டியது. ஈராயிரம் ஆண்டு கால இன ஒற்றுமையும், சகிப்புத் தன்மையும், கூட்டு வாழ்க்கையும் கொண்டவர்கள் நாங்கள். ஒரு போதும் இனத்தின் பெயரில் ஒரு துளி இரத்தம் சிந்தியதாகக் கூடி வரலாறு இல்லை. இந்த தமிழ் அரசியல், தமிழ் தேசியவாதம் என்பவைகள் என்று கிழக்கில் காலடி எடுத்து வைத்ததோ அன்றில் இருந்துதான் இனங்களிடையே பரஸ்பர சந்தேகமும், இனமுரண்பாடுகளும், இன பகைமையும், கலவரங்களும் அங்கே உருவாகத் தொடங்கின.

ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது.

ஆகவே எங்களை முன்புபோல் வாழ விடுங்கள் என்று கேட்கின்றோம். தமிழ் மண் எனும் ஒற்றை அடையாளம் எங்கள் பல்லினத்தன்மைக்கு எதிரானது. தமிழர்களாகவும், முஸ்லிம்களாகவும், சிங்களவர்களாகவும் எமது தனித்துவங்களுடன் நாங்கள் கிழக்கு மாகாணத்தின் மக்களாக வாழ விரும்புகின்றோம். கிழக்கை கிழக்காக இருக்க விடுங்கள்.

தேசம்நெற்: கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்கான அரசியல் அடையாளத்தை தேடும் ஒரு முயற்சியாக நோக்கப்படுகிறது அது பற்றிய உங்கள் கருத்து என்ன ?

ஸ்ராலின்: ஆம் அது எங்களுக்கான அரசியல் அடையாளத்தைத் தேடும் முயற்சியேதான். வடக்கில் இருந்து மொழியின் பெயரால் எம்மீது திணிக்கப்படுகின்ற ஒற்றை அடையாளத்தை நாம் மறுதலிக்கின்றோம். எங்கள் பன்முக அடையாளங்களை தேடியபடி இன்னும் இன்னுமாய் எங்கள் முயற்சி தொடரும்.

குறிப்பு --
முகவரியினையும் முழுப்பெயரினையும் வெளியிட முடியாதவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதனை ஸ்ராலின் தவிர்த்துக்கொள்வது பொருத்தமானதாகும். அத்துடன் தமிழ்மக்களின் நலனுக்காகவும், தமிழர்தாயக பிரதேசத்திற்காகவும் குரல் கொடுப்பவர்களுக்கு தமிழ் மொழியில் எழுதத்தெரியாமை அவர்களின் மொழியின்மீதான பற்றினையும் ,இனத்தின்மீதான பற்றுறுதியினையும் வெளிக்காட்டும் வேடிக்கையென நான் கருதுகின்றேன். நன்றியுடன் குமாரதுரை

vizhippu.net