Friday, June 29, 2007

புலிகளின் யுத்த பலத்தை பலவீனப்படுத்தாமல் எந்த வகையிலும் அரசியல் தீர்வுக்காண பேச்சுவார்த்தையை நடத்த முடியாத

Rajapaksa_22.jpgபுலிகளை அழிப்பதற்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் மிகவும் புத்தி சாதுரியமாக செயல்படுகின்றனர். அதனால் தான் கிழக்கில் பாரிய வெற்றிபெறமுடிந்தது. புலிகளின் யுத்த பலத்தை பலவீனப்படுத்தாமல் எந்த வகையிலும் அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பௌத்த தேரர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அந்த வைபவத்தில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் தெரிவிக்கையில் இந்திய அமைதிப் படைக்கு முடியாததை இலங்கை படையினர் செய்துள்ளனர். தொப்பிகலை பகுதியை தவிர கிழக்கு மாகாணத்தில் முழுப்பகுதிகளையும் படையினர் தம்வசம்படுத்தி அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். புலிகளுடனான படையினரின் வெற்றியை குறைத்து மதிப்பிடமுடியாது. சிலர் இந்த வெற்றியுடன் அரசியலை கலந்து அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடும் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்

படையினரால் பெறப்பட்ட வெற்றியை அரசியலுடன் தொடர்பு படுத்த வேண்டாம். பயங்கரவாதத்தை இந்த சந்ததியினருடன் தோற்கடிக்க வேண்டும் அதøன அடுத்த பரம்பரைக்கும் விட்டுச்செல்லமுடியாது. விட்டுச்செல்லமாட்டேன். கடந்த 25 வருட கால ஆட்சியில் செய்ய முடியாததை இந்த அரசாங்கம் செய்துள்ளது. நாம் பெற்ற வெற்றிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் தேசத்துரோகிகள். அந்த துரோகத்தனமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க போவதில்லை.

சர்வதேச சமூகம் மற்றும் அண்டைய நாடுகளுடன் தொடர்ந்து தொடர்புகளை வைத்துள்ளோம் இந்தியாவுடனான தொடர்பு வலுப்பெற்றுள்ளது. அவர்களிடமிருந்து பெரும் உதவிகளை பெற்றுள்ளோம். அதேபோல அமெரிக்காவும் எமக்கு உதவிகளை செய்து வருகின்றது. எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து பல உதவிகளை எதிர்பார்க்கலாம் என்பது அமெரிக்காவுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்திலிருந்து புலனாகின்றது.

No comments: