Saturday, June 23, 2007

இஸ்லாமிய இலக்கிய கழக செயலாளர் ஹிதாயத்துல்லாவின் அறிக்கைக்கு பதில்- கசப்பான பதிவு

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு இலங்கை ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்துழைப்பு தரவில்லையென்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்
[22 - June - 2007] [Font Size - A - A - A]

* இஸ்லாமிய இலக்கிய கழக செயலாளர் ஹிதாயத்துல்லாவின் அறிக்கைக்கு பதில்

-ஜின்னா ஷரிபுத்தீன்-

ஒரு சர்வதேச மாநாட்டைத் திட்டமிடுவதற்குத் தெரியாமல் நடத்திவிட்டு இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் கூட தன்னிலை விளக்கம் அளிக்கும் பரிதாபம் சகோதரர் ஹிதாயத்துல்லாஹ்வுக்கு நேர்ந்திருக்கிறது.

அவரது அறிக்கை சோடிக்கப்பட்ட அப்பட்டமான பொய்களால் ஆனது என்பதை இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று மாநாட்டில் கலந்து கொண்டோர் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளதால் அவரது நியாயங்கள் இலங்கையில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை முதலில் அவருக்கும் அவருடைய `இலங்கைப் பினாமி' களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அவரது அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்களின் உண்மைத் தன்மையை அம்மாநாட்டின் இலங்கை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவன் என்ற முறையில் தெளிவு படுத்த வேண்டியது எனது கடமையாகும்.

இலங்கை ஒருங்கிணைப்பாளர்களில் இரு பிரிவுகளாகப் பிரிந்து தாங்களாகவே இலங்கைப் பத்திரிகைகளில் தனித் தனி அறிக்கை வெளியிட்டிருந்தனர் என்று ஹிதாயத்துல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

என்னையும் அஷ்ரஃப் சிஹாப்தீனையும் நண்பர் எஸ்.முத்து மீரானையும் ஒருங்கிணைப்பாளர்களாக அவர்கள் நியமித்திருந்தனர். எனக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்குமான கடிதத்தை எனது முகவரிக்கே அனுப்பியிருந்தனர். இந்த நியமனம் நடக்குந் தருணத்தில் எஸ்.முத்து மீரான் சென்னையில் இருந்தார். அவரது கடிதம் அங்கு வைத்தே வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வந்த எஸ்.முத்து மீரான் தினகரன் பத்திரிகையில் இது குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் தன்னுடன் சேர்ந்து என்னையும் அஷ்ரஃப் சிஹாப்தீனையும் ஒருங்கிணைப்பாளர்களாக மாநாட்டுக் குழுவினர் நியமித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். எங்களுக்கான கடிதம் வந்த போது மாநாட்டுக்குச் செல்ல விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி கொடுத்தோம். எஸ்.முத்து மீரான் கிழக்கில் இருந்தார். நாங்கள் கொழும்பில் இருந்தோம். விபரம் கோரியவர்களிடம் அவர்களது வசதிக்கேற்ப அவரையோ எங்களையோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தோம்.தொலைக்காட்சிப் பேட்டிகளின் போதும் வானொலிப் பேட்டிகளின் போதும் நானும் அஷ்ரஃப் சிஹாப்தீனும் இதைத் தவிர வேறு எதையும் பிரஸ்தாபிக்கவில்லை என்பதை இந்நிகழ்ச்சிகளைப் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அறிவார்கள்.

இதற்கிடையில் இந்திய இலக்கியவாதிகளால் ஒதுக்கப்பட்ட ,இந்தியாவில் தானே பிரபல்யம் மிக்க இலங்கை எழுத்தாளன் என்று பீத்திக் கொள்கிற ஓர் இலக்கியக் கோமாளியின் நச்சுக் கருத்துக்களை அறிந்தோ அறியாமலோ உள்வாங்கிக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் தப்பான கருத்துக்களை வெளியிட்டுச் சிண்டு முடிவதற்கு முயற்சித்தார் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இதில் ஹிதாயத்துல்லாஹ் சொல்வது போன்ற அறிக்கைகளை எந்தப் பத்திரிகைகளுக்கும் நாமோ நண்பர் முத்துமீரானோ கொடுத்திருக்கவில்லை. செய்திக்கும் அறிக்கைக்கும் இடையில் வித்தியாசம் தெரியாத அவர் இம் மாநாட்டின் செயலாளராகச் செயற்பட்டிருக்கிறார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

பிரிந்திருந்தஎம்மை ஒற்றுமைப்படுத்துவதற்காக இலங்கைக்கு வந்ததாக ஒரு பொய்யை அவர் எழுதியுள்ளார். எமக்குள் அப்படி ஒரு பிரிவினை இருக்கவில்லை. அவர் ஓர் ரெண்டுங்கெட்டான் அரசியல்வாதியாக இருப்பதால் இலங்கைக்கு யசூசி அகாஸி ,எரிக் சொல்ஹெய்ம் போன்ற சமாதானத் தூதுவர்கள் வந்து செல்வதால் தானும் ஒரு சமாதான தூதுவராகப் போய்வர வேண்டும் என்று ஒர் அற்ப ஆசை அவருக்குள் இருந்திருக்கலாம்.

ஸஹீஹ் முஸ்லிம் என்ற ஹதீஸ் கிரந்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு விழாவுக்குவிக்கோ,றஹ்மத் அறக்கட்டளையின் அழைப்பில் இலங்கை வருகிறார் என்பதாலும் கவிக்கோவும் மாநாட்டு முக்கியஸ்தர் என்பதாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாநாட்டுக்குப் பணம் சேர்ப்பதற்காக -அவரது பாஷையில் சொல்வதானால் மாநாட்டின் பெயரால் பிச்சை எடுப்பதற்காகவே - ஹிதாயத்துல்லாஹ் இலங்கை வந்தார். புரவலர் ஹாஷிம் உமர் மற்றும் வர்த்தகர் பாயிக் மக்கீன் போன்றவர்களிடம் உதவிப் பணம் பெற்றுத் தருமாறு அவர் என்னை வற்புறுத்தினார்.வேறு செல்வந்தர்களிடம் பணம் கறக்க முடியுமாயின் கறந்து தரும்படியும் வேண்டுகோள் விடுத்தார். முடியாத பட்சத்தில் அவர்களது தொலைபேசி இலக்கங்களையாவது தாருங்கள் என்று என்னிடம் கேட்டார்.

இது பற்றி நான் புரவலர் ஹாஷிம் உமரிடம் தகவல் தெரிவித்தேன். அவர் இது பற்றி எக்கருத்தையும் வெளியிடவில்லை. ஏற்கனவே இலங்கை வந்த ஒரு பிரபல்யம் மிக்க இந்திய இலக்கியவாதியினால் ஏற்பட்ட கசப்புணர்வு அவர் மனதில் இருப்பதை நான் அறிவேன்.ஆனால் ஒரு விடயத்தை நிச்சயமாக என்னால் குறிப்பிட முடியும். இலங்கைப் புரவலர்கள் பணம் இறைத்திருந்தால் அழைப்பிதழில் அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் பணம் சேர்ப்பதே ஹிதாயத்துல்லாஹ்வின் முழு நோக்கமுமாக இருந்தது.; கடந்த காலங்களில் மாநாடு நடத்துவதற்கு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் எந்தவொரு செயலாளரும் இவரைப்போல் யாசகம் கேட்டு தெருத் தெருவாக அலைந்தது கிடையாது.

இலங்கைக்கு வந்து அமைச்சர் ரவூப் ஹக்கீமையும் அவர் சந்தித்தார். அவரிடமும் கூட பணம் சேர்த்துத் தாருங்கள் என்றுதான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிணங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் பெற்றுக் கொடுத்த `சன்டெல்' மற்றும் `ஹட்ச்' நிறுவனங்களின் விளம்பரங்களை நீங்கள் மாநாட்டு மலரில் காணலாம்.

பேராளர்களிடம் சேர்த்த பணத்தை தங்குவதற்கான அறைகள் ஒதுக்கிக் கொண்டிருந்த வேளை அவர்கள் கேட்டும் கூட நாங்கள் கொடுக்கவில்லை என்று ஒரு பெரும் பொய்யை ஹிதாயத்துல்லாஹ் சொல்லியிருக்கிறார்.

எம்முடைய பட்டியலில் உள்ளடங்கியிருந்த 75 பேரில் 56பேர் எங்களுடன் ஒரே விமானத்தில் வந்தவர்கள். இவர்கள் அனைவரும் பேராளர் கட்டணத்தை விமானக் கட்டணத்தோடு சேர்த்து எமக்குச் செலுத்தியிருந்தார்கள். மீதிப் பத்தொன்பது பேரும் மாநாட்டில் எம்முடன் இணைந்து கொள்வதாகத் தெரிவித்து விட்டு சில தினங்கள் முன்பதாகவே இந்தியா சென்றுவிட்டனர். இவர்களில் சிலர் மட்டுமே உரிய வேளையில் பேராளர் கட்டணம் செலுத்தியவர்கள். ஏனையோர் எம்மைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்காததால் இந்தியாவில் வைத்து அதனைச் செலுத்துவதாகத் தெரிவித்திருந்தனர். வந்த முதல் நாளிலேயே தங்கும் அறைக்காக விடுதி விடுதியாக அலைந்து திரியும் போது அவர்களிடம் பணம் கேட்டு நிற்பது அநாகரிகம் என்பதால் அடுத்த தினமே அதனைச் சேகரிக்கத் தொடங்கினோம்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் நெறியாளர்கள் ஐந்து பேர். துணைத்தலைவர்கள் ஒன்பது பேர், துணைச்செயலாளர்கள் ஒன்பது பேர், தவிர தலைவர், செயலாளர், துணைப்பொதுச்செயலாளர், பொருளாளர் என நான்கு பேர், இவர்களில் பொருளாளரைத் தவிர வேறு எவரும் எமது பக்கமே தலைவைத்து கூடப்படுக்கவில்லை. இவர்களில் பொறுப்புள்ள ஒருவர் வந்து அப் பணத்தைக் கேட்டிருந்தாலோ அல்லது ஒரு நபரை அனுப்பி பணத்தை அனுப்பக் கோரியிருந்தாலோ நாம் அதனைக் கொடுத்திருப்போம். ஏனெனில் நமது நாட்டைச் சேர்ந்த எந்தப் பேராளரும் பிச்சைக்காரர்கள் அல்லர் என்பதால் அவர்களுக்கான பணத்தை மாநாட்டை நடத்துவோரிடம் கொடுத்து விட்டுப் பின்னர் பெற்றுக் கொள்ளத் தயாராயிருந்தோம்.

அப்படியாயின், பணத்தை உங்களைப் பார்க்க வந்த பொருளாளரிடம் கொடுத்திருக்கலாமே' என்று நீங்கள் நியாயமான ஒரு கேள்வியைக் கேட்க முடியும்.` திட்டமிட்டே என்னை ஓரம் கட்டினார்கள்' என்ற தலைப்பில் சமரசம் 16 -30 ஜூன் இதழில் பொருளாளர் சொல்லியிருக்கும் வார்த்தைகளை இங்கு தருவதன் மூலம் இக் கேள்விக்கான தெளிவான விடை உங்களுக்குக் கிடைக்கும்.அவர் இவ்வாறு சொல்கிறார்....

"....பேராளர் கட்டணத் தொகை மற்றும் விளம்பரத்திற்காக கிடைத்த தொகை மட்டுமே வங்கியில் இருந்தது; புரவலர்களிடமிருந்து கிடைத்த தொகைக்கான விபரங்களை அவர்கள் என்னிடம் தெரிவிக்கத் தயாராக இல்லை. இந்நிலையில் `செக்'கில் (காசோலை) கையெழுத்துப் போட்டு மொத்த `செக் புக்' கையும் எங்களிடம் தந்து விடுங்கள். நீங்கள் கணக்கை எழுதிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் நான் ஒரேயடியாக எல்லா ஆவணங்களையும் செக் புக்கையும் தலைவரிடம் ஒப்படைத்து விட்டு வெளிவந்து விட்டேன்.அதன் பிறகு அவர்கள் என்ன வசூல் செய்தார்கள், என்ன செலவு செய்தார்கள் என்ற விபரம் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. நான் பெயருக்குத்தான் பொருளாளர்"

அவரது பதில் மூலம் நாம் தெரிந்து கொள்வது ,உண்மையில் இலங்கையருடன் இருந்த நட்பின் பேரில் தான் அவர் அங்கு வந்து நலம் விசாரித்தாரே தவிர,பொருளாளராக அல்ல.

இதேவேளை கவிக்கோவும் தலைவர் கெப்டன் அமீர் அலியும் செயலாளர் ஹிதாயத்துல்லாஹ்வும் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் பொருளாளரிடம் வெற்றுக் காசோலையில் கையெழுத்திட்டு தரக்கேட்டதைக் கொண்டு ஓரளவு புரிந்துகொண்டிருப்பீர்கள்.

பேராளர் பணத்தைத் தந்தால்தான் வசதிகள் யாவும் செய்து தரப்படும் என்று ஒரு வார்த்தை எமக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருக்குமாக இருந்தால் அதனை இலங்கையிலிருந்தே நாம் அனுப்பி வைத்திருப்போம். 15 500 ரூபாவுக்கு விமானச் சீட்டு வாங்க முடிந்த நமது நாட்டுப் பேராளர்களுக்கு பேராளர் கட்டணமான 660 ரூபாயைத் தருவது சிரமமானது என்று நாங்கள் எண்ணவில்லை.அந்தப்பணம் அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதியிருந்தால் சென்னை விமான நிலையத்தில் நாம் விமானத்தை விட்டு இறங்கும் போது ஹிதாயத்துல்லாஹ் அங்கு நின்று அதை வாங்கிச் சென்றிருக்கலாம்.

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு நாங்கள் கப்பலில் சென்று இறங்கிய போது மண்டபம் என்ற இடத்தில் எம்மை வரவேற்க வந்திருத்த மாநாட்டுப் பொறுப்பாளர்களில் ஒருவரான மர்ஹூம் ஜமால்தீன் என்னிடம் பேராளர் கட்டணத்தை அறவிட்டு மொத்தமாக தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டார். அதன்படி அனைத்துப் பேராளர்களிடமும் அதனை அறவிட்டு மாநாட்டு மண்டபத்தில் வைத்து அதனை ஒப்படைத்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

உணவுக்காக கூப்பன் இல்லாத வரிசைகளை உருவாக்கியதாக ஹிதாயத்துல்லாஹ் மற்றொரு பொய்யையும் சொல்லியிருக்கிறார். விபரம் வேண்டுபவர்கள் இலங்கையிலிருந்து சென்ற பேராளர்களைத் தொடர்பு கொண்டு ஹிதாயத்துல்லாஹ்வின் வார்த்தைகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

40 பேரை அழைத்து வந்த குழுவினர்களில் ஜனாப் நிலாம் தலமையில் வந்த15 நபர்கள் என்று அவரது அறிக்கையில் சொல்கிறார். ஒரு குழுவினர் 75 பேர்களை அழைத்து வந்தவர்கள் என்று ஒரு இடத்திலும் மீதம் இருபத்தைந்து பேர்களை அழைத்து வந்தவர் என்று மற்றொரு இடத்திலும் சொல்கிறார். அவரது அறிக்கையின் ஓரிடத்தில் இலங்கைப் பேராளர்களை அழைத்து வந்த குழுத் தலைவர் இடையூறுகளைச் செய்து கொண்டே இருந்தார் என்று சொல்கிறார்.அவர் எத்தனை பேரை அழைத்து வந்த்து எந்தத் தலைவர் என்று குறிப்பிடாததால் இது குறித்து நம்மால் பதில் தர முடியாது. தவிரவும் சகட்டு மேனிக்கு இடையூறுகள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இருந்த போதும் அந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தது நாம் அல்லர்.

இதற்குள் இருக்கும் எனது வினாக்கள் எவையென்றால் விரும்பியவரெல்லாம் ஆளுக்கு ஒரு குழுவை அழைத்து வர முடியும் என்றால் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டது எதற்காக? 40 பேரைஅழைத்து வந்தவர் எந்த ஒருங்கிணைப்பாளர்?

நிலாம் சரியாக நடந்துகொண்டார் என்று குறிப்பிடும் ஹிதாயத்துல்லாஹ் ஒர் இலங்கைப் பேராளனாக இருந்து மாநாட்டில் இலங்கையருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களைக் குறித்து நிலாம் எழுதிய விடயங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் எழுதிய கட்டுரைகள் 2007.06.10 ம், 17 திகதிய `தினக்குரல்' பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. ஹிதாயத்துல்லாஹ் எவற்றை மறைக்க முயற்சிக்கின்றாரோ அவற்றை நண்பர் நிலாம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். நண்பர் நிலாமை சரி கண்டார் என்றால் ஹிதாயத்துல்லாஹ்வின் அறிக்கை பொய்களால் ஆனது என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார் என்றும் அர்த்தப்படும்.

ஹிதாயத்துல்லாஹ்வின் அறிக்கையில் உள்ள உச்சக் கட்ட நகைச்சுவையாக நான் கருதுவது `ஜின்னாஹ்வுக்குப் பொற்கிழி வழங்குவதென யாரும் வாக்களிக்கவில்லை' என அவர் தெரிவித்திருப்பது. நான் பொற்கிழி வழங்கக் கோரினேன் என்பதை அவர் முதலில் நிரூபிக்க வேண்டும்.அவர் இலங்கைக்கு வந்திருந்த போது பயணத்துக்கு வாகன ஏற்பாடுகளை இலவசமாகச் செய்து கொடுத்தவன் நான். எனது சொந்தப் பணத்தில் மாநாடு பற்றிய கூட்டத்தை நடத்த தமிழ்ச் சங்கத்தில் மண்டபம் ஏற்பாடு செய்தவன் நான். இலங்கையில் அவர் நின்ற நாட்களி&#

No comments: