Wednesday, June 13, 2007

வாழ்வு தொடங்கும் - யுத்தம்-2



யுத்தம் பரிசளிக்கப்படுகின்றது...1983
இ(ஈ)னக்கலவரம் எம் தீவு முழுக்கப்பரவிக்கொள்கின்றது.
எனக்கு 5 வயதிருக்கும். இன்னமும் அழியாமல் மனதில் பதிந்து விட்டது.
என் மாமனாரை அடிக்கும் பொலிஸார்
என் வீட்டு முற்றதில் வெடிக்கும் கண்ணீர் புகைக்குண்டு
கண்திறக்க அவதிப்படும் என் இளைய தம்பி
கிழிந்த உடையுடன் வீட்டுக்கு வந்த் என் தந்தை
இன்னும் என் மனக்கண்ணில்....
1983-1986 வரை ஒரு மௌனமான யுத்தம்...
விடுதலை இயக்கங்கள் பற்றிய கதைகள்
துண்டுப்பிரசுரங்கள்
இவ்வளவுதான்
1986- முதலாவது ஈழப்போர் உக்கிரமடையும் காலம்
கொழும்பில் தற்காலிகமாக 1 வருடம் தங்கல்
1987- இந்திய அமைதிப்படை வருகையுடன்
மீண்டும் தயகத்தில்.....
1990 எம்மை வேரருக்கும் வரை தமிழ் அன்பர்களுடன் கூட்டு வாழ்கை.
இன்பம், யுத்தம், வளம் என எல்லாம் பகிர்ந்து
வாழ்ந்த இன்பகாலம்.
பதுங்கு குழிக்குள் அடிக்கடி தஞ்சம் கண்டு
இயக்க வீரர்களை- நெருங்கி நேசித்து
எமக்கும் தனி நாடு வேண்டும் என்று பள்ளிக்கூடமெங்கும் சத்த்ம் செய்த
மகத்தான காலம்.

No comments: