Tuesday, July 31, 2007

அதிகாரப்பரவலாக்கல் மூலமான தீர்வை முன்வைத்தால் போராட்டம் வெடிக்கும்

இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகாரப் பரவலாக்கம் மூலமான தீர்வை சர்வ கட்சி குழு முன்வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். இலங்கையில் சர்வதேசம் சதித் திட்டங்களை அரங்கேற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஜே.வி.பியின்
முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம் சர்வதேச சதித் திட்டத்தின் ஓர் அங்கமேயாகும். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான எமது போராட்டம் தொடரும். ஆனால் ஐ.தே.க. வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியமைக்கவும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம் சர்வதேச சதித் திட்டத்தின் ஒரு அங்கமேயாகும். சர்வதேச சதித் திட்டத்துக்கான தேசிய முகவராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்களை ஏமாற்றி விட்டது. இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஜே.வி.பி. நடவடிக்கை எடுக்கும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஆட்சியினை கைப்பற்றுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். தேசிய சக்திகளைக் கொண்ட மாற்று அரசாங்கமொன்றே நாட்டில் உருவாக வேண்டும். அதற்கான முயற்சியிலேயே ஜே.வி.பி. ஈடுபட்டுள்ளது. இலங்கையில் சர்வதேசம் சதித் திட்டங்களை அமுல்படுத்த நாம் அனுமதிக்க மாட்டோம்.

அரசாங்கத்துக்கு எதிராக ஐ.தே.க. மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணியும் சர்வதேச சதித் திட்டத்தின் ஓர் அங்கமேயாகும். சர்வதேச சமூகம் ஐ.தே.க. வினை வைத்து இலங்கையினை ஆட்டிப் படைக்க நினைகின்றது. இதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம்.

இன்று நாட்டில் உண்மையான எதிர்க்கட்சியாக ஜே.வி.பியே. செயற்படுகின்றது. எதிர்க்கட்சித்தலைவராக எமது பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்சவே செயற்படுகின்றார். மக்களுக்கான கட்சியாக ஜே.வி.பி.யே திகழ்கின்றது. ஐ.தே.க. வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக செயற்படவில்லை.

இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வுகாண அரசாங்கம் முயன்றால் ஜே.வி.பி. வீதிக்கு இறங்கிப் போராடும். சர்வகட்சி குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தீர்வுத் திட்டமொன்றினை தயாரித்து வருவதாக கூறி வருகின்றார்.

சர்வகட்சி குழு அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முற்பட்டால் அதற்கான தீர்வுத் திட்டத்தினை முன்வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். இதனை உணர்ந்து அரசாங்கம் செயற்பட வேண்டும். அரசாங்கம் மக்கள் மீது சுமைகளை சுமத்தி வருகின்றது. எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இத்தகைய நிலை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.

Thursday, July 26, 2007

கொலை செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது ஆலயக் காளை??????

கொலை செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது ஆலயக் காளை


வேல்ஸ் ஆலயக் காளை சம்போ
வேல்ஸ் ஆலயக் காளை சம்போ
பிரிட்டனின் வேல்ஸ் பகுதியிலுள்ள ஸ்கந்தவேல் பல்சமய ஆலயத்தில் காசநோயால பீடிக்கப்பட்டிருந்த சம்போ எனப்படும் காளை கொலை செய்யப்படுவதற்காக வியாழக்கிழமை மாலை எடுத்துச் செல்லப்பட்டது.

விலங்குகளுக்கு ஏற்படும் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்தக் காளையை கொல்வதற்கு எடுத்துச் செல்லும் பொருட்டு இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

முன்னதாக வேல்ஸ் சட்டசபை, நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அந்தக் காளையை கொல்ல உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை நிறைவேற்ற இன்று ஆலயத்திற்கு சென்ற அதிகாரிகளை அந்த ஆலயத்திலுள்ள இந்து மத குருமார்ககளும் பக்தர்களும் திருப்பியனுப்பி விட்டனர்.


சம்போவிற்காக பிரார்த்தனை போராட்டம்
சம்போவிற்காக பிரார்த்தனை நடத்திய பக்தர்கள்
இதையடுத்து அரசு அதிகாரிகள் அந்த பிடியாணை உத்தரவை அந்த ஆலயத்தில் ஒட்டிவிட்டு திரும்பிவிட்டனர். அதிகாரிகள் அங்கு சென்றபோது ஆலயத்தில் சம்போவைச் சுற்றி அதை காப்பாற்றும் முகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு மதநிகழ்வில் நூறு பேருக்கும் மேலாக பங்கு பெற்று கொண்டிருந்ததால் அந்தக் காளையை அவர்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை.

பின்னர் மாலையில் மேலும் சில போலீஸாருடன் அரசு அதிகாரிகள் வந்துனர் எனவும், ஆனால் ஆலயத்திலுள்ள இந்து மதகுருமார்கள் வாகனங்களை நிறுத்தி சாலைத் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் பிரிட்டிஷ் இந்து அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் கல்லிடை தமிழோசையிடம் தெரிவித்தார்.

அந்தக் காளையை அரசு அதிகாரிகள் எடுத்துச் செல்வதை தடுக்கும் முகமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதைச் சுற்றி மத வழிபாடுகளை நடத்தி வருகின்றனர் எனவும், அவ்வாறு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயம் அதில் குறுக்கிடுவது இந்து மதத்தவரின் உணர்வுகளை புண்படுத்தும் விடயம் எனவும் முன்னதாக ரமேஷ் அவர்கள் கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும் வியாழனன்று மாலை பிரித்தானிய நேரம் 7.30 மணி அளவில் வேல்ஸ் அரசு அதிகாரிகள் ஆலயத்திலிருந்து சம்போவை கொலை செய்வதற்காக ஒரு வண்டியில் ஏற்றிச் சென்றனர்.

ஒரு விஷ ஊசியின் மூலம் அந்த ஆலயக் காளை கொல்லப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_currentaffairs.shtml
26th July 2007

Wednesday, July 25, 2007

வன்னி மக்களே விழித்தெழுங்கள்! வன்னிவாழ் மக்களுக்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அறைகூவல்

அன்பார்ந்த வன்னி வாழ் மக்களே!

கிழக்கு மாகாணத்தில் இன்று பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டு மக்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் வடக்கு வாழ் மக்களும் பிரபாகரன் தலைமையிலான புலிப்பயங்கரவாத அடக்குமுறைக்குள் இருந்து விடுபட்டு சுதந்திரக்காற்றை சுவாசிக்கவேண்டும் என்பதே எமது அவா. ஆரம்பகாலங்களில் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்காகவும் தொடங்கப்பட்ட போராட்டம் காலப்போக்கில் பிரபாகரனின் சுயலாபநோக்கிற்காக தனிமனித அதிகாரத்திற்கான போரட்டமாக மாற்றப்பட்ட வரலாறு யாவரும் அறிந்ததே.

இன்று பிரபாகரன் கிழக்கு மாகாணத்தை முற்றாக இழந்த நிலையில் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு ஈழம் என்ற மாயையைக்காட்டி 6.000 அப்பாவிகளை பலிக்களத்திற்கு அனுப்புவதற்கு திரட்டும் முகமாக வன்னியில் உள்ள அப்பாவிப்பொதுமக்களை எல்லைப்படை என்ற பெயரில் பலிக்கடாக்களாக்கும் சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றான். இதேபோன்றே கிழக்கில் வாகரை மக்களையும்மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி பல அப்பாவி உயிர்களை பலி கொடுத்தது பிரபாகுழு.

பிரபாகரனின் பாசிசப்போக்கை வெறுத்து எமது ரி.எம்.வி.பி என்னும் கட்சியின் தலைவர் கருணா அம்மானின் தலைமையில் நாம் 2004 இல் வெளியேறியபோது எம்மைத்தட்டிக்கொடுத்து வரவேற்ற ஆயிரக்கணக்கான ஜனநாயக விரும்பிகளில் வன்னிவாழ் மக்களாகிய நீங்களும் அடங்குகின்றீர்கள் என்பதனை நன்றியுடன் நினைவுகூறுகின்றோம்.

அவ்வேளையில் வன்னிப்பிரதேச மக்களால் “எமது தலைவிதியை நிர்ணயிப்பது யார்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றின் சில வரிகளை இங்கு நினைவுகூற விரும்புகின்றோம்.

இதோ உங்களால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் வரிகள்:

“யாழ்ப்பாணத்தை விட்டு புலிகள் வெளியேற சிந்திக்கும்போதுதான் வன்னி பற்றிய கரிசனை அவர்களுக்கு வருகின்றது. அதுவரை கோட்டைக்கும், பலாலிக்கும் என்று சண்டையிட்டுக்கொண்டிருந்தவர்கள் பூநகரி, மாங்குளம், முல்லைத்தீவு என்று தமது சண்டையைத் திசைதிருப்பினார்கள்”. வன்னியைத் தமது பாதுகாப்புத்தளமாக மாற்றினார்கள். மாங்குளத்தைத் தமிழ் ஈழத்தின் தலைநகர் என்று காதில் பூச்சுற்றி தமது மக்களை ஏமாற்றினார்கள்.(ஏற்கனவே திருகோணமலையை தலைநகர் எனப் பிதற்றினார்கள்) மக்களும் தமது மண் என்ற கனவில் ஏமாந்துகொண்டிருக்கின்றார்கள். ஒரு காலத்தில் நமது இளைஞர்களைக்கொண்டு தலைமைதாங்கிய மாத்தையாவின் இழப்பு எவ்வாறு நடந்தேறியது என்பதை யாவரும் மறந்திருக்கமாட்டார்கள். பிரபாத்தலைமைப் புலிகள் வன்னிப்பிரதேசத்தில் இருப்பது தமது பாதுகாப்பிற்கு மட்டுமேயன்றி வேறொன்றிற்கும் இல்லை. அவர்களுக்கு வன்னி மீது எவ்வித அக்கறையும் இல்லை. இது தானே வரலாறு. மட்டக்களப்பு மக்களை புலிகள் எப்படிப்பயன்படுத்தினார்கள் என்று கருணா அம்மான் விளங்கியிருப்பதுபோலவே வன்னி மக்களையும் புலிகள் பயன்படுத்துகின்றார்கள். வன்னியில் எவ்வித அபிவிருத்தியும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. தமக்கான இருப்பிடங்களை அவர்கள் விசாலிப்பதற்கு இருக்கும் அக்கறை எமது மக்கள் மீது இருப்பதில்லை. நாமும் உங்களைப்போல் காலாகாலமாகப் போராட்டத்தின்பேரில் ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம். எமது நிலையைத்தெரியப்படுத்த வேண்டிய நேரம் இது. துரோகி என்றும், மாவீரர் என்று பிரபாத்தலைமைப்புலிகள் நமது வீரர்களைக் கொன்றுகுவித்துவிட்டது. கருணா அம்மானுக்கு நமது மனப்பூர்வமான ஆதரவையும் அன்பையும் தெரிவித்துக்கொள்ளும் இதேநேரம் நமது இளைஞர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” (இதுவே அத்துண்டுப்பிரசுரத்தின் வரிகள்)

ஆம் மக்களே! நிச்சயமாக நீங்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்றுமே வீண்போகாது. சில நாசகார சக்திகள் கூறுவது போல் நாம் பிரதேசவாதம் பேசுபவர்களல்ல. எமது சேவை கிழக்கு மாகாணம் என்ற வட்டத்திற்குள் மட்டுமே குறுகிவிடவில்லை. மாறாக அது ஒட்டு மொத்த தமிழர்களுக்குமானது.

உங்களது தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை இரண்டு வருடங்களுக்கு முன்பே எங்களிடம் ஒப்படைத்துவிட்டீர்கள். உங்கள் பாதுகாப்பிலும் நலன்களிலும் அக்கறை செலுத்தவேண்டிய பாரிய பொறுப்பு இன்று எம்மிடம் உள்ளது. தான் பதுங்கு குழிக்குள் சொகுசாக இருந்து கொண்டு எல்லைப்படை என்ற பெயரில் உங்களைக் களப்பலியாக்க பிரபாகரன் முனைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தாமதியாது அங்கிருந்து வெளியேறி பாதுகாப்புப்பிரதேசத்தை நோக்கி விரையுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

பிரபாகரனின் ஏகாதிபத்தியத்தால் எமது வரலாறு கண்ட வடுக்கள் ஏராளம். எமது சந்ததியாவது நிம்மதியாக வாழட்டுமே.

வன்னி மக்களே விழித்தெழுங்கள்!
ஒலிப்பதிவுகள்

Saturday, July 21, 2007

மீண்டும் பல்லாயிரம் தமிழ்மக்களை பலிகொடுக்க வன்னியில் தயாராகும் பாஸிஸப் புலிகள

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இளைஞர்கள் பலவந்தமாக படைகளில் இணைக்கப்படுவதால் இளைஞர்கள் ஒளிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களிடம் அப்பிரதேசவாசிகள் பலர் உரையாடியுள்ளனர் . அமெரிக்கா, பிரித்தானியா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடை செய்யபட்ட புலிகள் அமைப்பிற்கு குடும்பத்தில் ஒருவரை வழங்க வேண்டுமென புலிகள் வலியுறுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்.

உங்கள் குடும்பத்தில் புலிப்போராளிகள் யாரும் இல்லை எனவே நீ கட்டாயமாக அமைப்பில் இணைய வேண்டுமென புலிகள் வலியுறுத்தினர் எனினும் நான் அதற்கு உடன்படவில்லை என்னை அவர்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் அவர்கள் என்னை போராளியாக்க முயற்சித்தனர் .

அழைத்துச் சென்று பயிற்சிகள் மற்றும் மோதல் தொடர்பாக விளக்கமளித்தனர் . எனினும் எனது குடும்பம் என்னில் தங்கியிருப்பதால் இதற்கு நான் உடன்படவில்லை என 20 வயதுடைய இளைஞனான ராஜதுரை பொன்னம்பலம் (உண்மையான பெயர் குறிப்பிட விரும்பாது பெயர் மாற்றி கூறியுள்ளார்)

இவர் தப்பியுள்ளார் எனினும் பலருக்கு இவ்வாறான வாய்ப்பு இல்லை பலர் அடுத்து தாங்களே என்ற அச்சத்துடன் வாழ்கின்றனர் எனினும் புலிகள் தாங்கள் பலவந்தமாக படைகளில் ஆட்களை சேர்ப்பது தொடர்பாக வெளியான கருத்துக்களை மறுத்துள்ளனர் தொண்டு நிறுவன பணியாளர்கள் புலிகள் இவ்வருட ஆரம்பத்தில் அவ்வாறு செய்தனர் எனினும் பின்னர் தொண்டர்களை விதிவிலக்காக்கியிருந்தனர் என தெரிவித்துள்ளதாக ரொய்டஸ் தெரிவித்துள்ளது

எனினும் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொருவரை போராட்டத்தில் அர்பணிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை சில குடும்பத்திலிருந்து ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் இணைத்துகொள்ளவில்லை என்பதனை உறுதிப்படுத்தவே நாம் முயல்கின்றோம் என புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

வடக்கே புலிகளின் பகுதிகளில் உள்ள குடும்பங்களிற்கு புலிகளிடமிருந்து யார் அமைப்பில் இணையவேண்டுமென கோடிட்டு கடிதங்கள் அனுப்படுகின்றன. . சில சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தமது உள்ளுர் பணியாளர்களை அனுப்பாது தடுத்துள்ளது சில அரசார்பற்ற நிறுவனங்களும் இவ் ஆட்சேர்பு தொடர்பாக கவலையடந்துள்ளது.
அதாவது சில பணியாளர்கள் கடத்தப்படுகின்றனர். காரணம் இவ் ஆட்சேர்பிற்காக புலிகளின் அரசியில் துறைப் பொறுப்பாளர் மனிதாபிமான தொண்டர்கள் ஆட்சேர்ப்பில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என உறிதியளித்துள்ளார் . எனினும் அப்படி தற்போது இல்லை என தெரியவருகிறது என நோர்வே தன்னார்வ தொண்டு நிறுவனமான போரூட்டின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகரத்தில் ஆட்சேர்ப்பு தொடர்பான விளம்பரங்கள் போஸ்டர்கள் ஒட்டப்படுள்ளன கரும்புலிகளின் படங்கள் கடைகள், பஸ் தரிப்பிடங்களில் ஒட்டப்பட்டுள்ளன இவற்றில் எம்முடன் இணையுங்கள் எங்கள் மண்னை சிங்கள இராணுத்திடமிருந்து காப்போம் எனற வசனங்களுடன் துப்பாக்கி ஏற்றியவாறு நிற்கும் புலி போராளியின் படத்துடன் காணப்படுகிறது.

கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுவரின் கயிற்றுடன் தூக்கியவாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிற்கும் படம் பெரிதாக கிளிநொச்சி நகர்புறத்தில் காணப்படுவதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எனது ஒரு மகன் 63 நாட்களிற்கு முதல் புலிகளுடன் இணைந்துகொண்டார் எனினும் அவர் சுய விருப்புடன் இணையவில்லை அவரது தாயார் சுகவீன மடைந்துள்ளார் எனவே மகன் சென்றவுடன் தாயின் உடல் நிலை மோசமடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இன்னொருவர் புலிகள் அமைப்பில் இணைந்துள்ள தனது மூத்தமகன் செல்வத்தைத் தடுக்கவே மகன் இணைந்தார் என தெரிவித்தார் . இப்பகுதிகளில் 70 சதவீதமானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். (பிரதான புலிப் பயங்கரவாதிகளை தவிர) இவர்களின் நாளந்த வருமானம் 1 டொலரினையும் விட குறைவு என தெரியவருகிறது.

இவ்வாறான நிலை இரு தசாப்தங்களாக தொடர்கின்றது 1983 வரையான உள்நாட்டு மோதலில் 70.000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.ஜக்கிய நாடுகளின் சிறுவர்களக்கான யுனிசெப் அமைப்பு தற்போதும் புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்ந்துக்கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளது.

1.591 முறைப்பாடுகளை வயது குறைந்தோர் படையில் சேர்ப்பது தொடர்ப்பில் யுனிசெப் பதிவு செய்துள்ளது. இவற்றுள் ஒரு சிறுவன் 9 வயதுடைவன் என்று குறிப்பிடத்தக்கது. அதே வேளை ஜ.நாவின் தூதுவர்கள் இராணுவத்தினர் சிறிவர்களை படையில் சேர்ப்பதற்கு கருணா குழுவினரிற்கு உதவுவதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் தாம் சிறுவர்களை படைகளில் சேர்ப்பதாக ஜ.நா தெரிவித்துள்ள கருத்தினை மறுத்துள்ளது அதே வேளை 18 வயதிற்கு மேற்பட்டோரையே தாம் படையில் சேர்ப்பதாகவும் சிலர் படையில் சேரவிரும்பும்போது தமது உண்மையான வயதினை சொல்வதில்லையென புலிகள் தரப்பு தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகள் பெரும் படை நடவடிக்கை ஒன்றினை செயல்படுத்தும் முகமாக ஆட்சேர்ப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் என ரொய்ட்டர் தனது ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளது

Thursday, July 19, 2007

ஈழக்கனவை சுக்குநூறாக்கிவிட்ட செய்தியை குடும்பிமலையின் உச்சியில் நின்று உலகுக்கு அறிவித்துள்ளோம்: மகிந்த ராஜபக்ச



ஈழக்கனவை சுக்குநூறாக்கிவிட்ட செய்தியை குடும்பிமலையின் உச்சியில் நின்று உலகுக்கு அறிவித்துள்ளோம்: மகிந்த ராஜபக்ச
[வியாழக்கிழமை, 19 யூலை 2007, 15:12 ஈழம்] [கொழும்பு நிருபர்]

குடும்பிமலையின் உச்சியில் நின்று பயங்கரவாதத்தின் ஈழக்கனவை சுக்குநூறாக்கி விட்ட செய்தியை எமது சிறிலங்கா இராணுவத்தினர் உலகுக்கு அறிவித்துள்ளனர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற "கிழக்கின் உதயம்" நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது:

இந்த மகத்துவமிக்க நாளில் உங்கள் மத்தியில் உரையாற்றக்கிடைத்த அரச தலைவராக இருப்பதையிட்டு அளவிலா பெருமிதமடைகிறேன். முழு நாட்டுக்கும் பெருமையைப் பெற்றுக்கொடுத்த சிறிலங்கா தேசத்தின் மதிப்புமிக்க இராணுவத்தினருக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு நான் இந்த கௌரவத்தை பணிவுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் சிறிலங்கா வரலாறு எழுதப்படும் சந்தர்ப்பத்தில் முப்படை தளபதிகளினால் அரசாங்கத்தின் பொறுப்புதாரரான என்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற இந்த செய்தியினால் குறிப்பிடப்படும் அத்தியாயம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. பல தசாப்தங்களாக எமது தாய் நாட்டின் வளமிகுந்த கிழக்குப் பகுதியையும் அங்கு வாழ்ந்த சிங்கள - தமிழ் முஸ்லிம் மக்களின் சுதந்திரத்தை பறித்துக்கொண்டிருந்த கொடூர பயங்கரவாத்தை முற்றாக விரட்டிவிட்டோம் என்று கூறுவதைப் போன்ற ஆறுதலானதும் கௌரவமானதுமான செய்தியை நாம் கடந்த காலத்தில் காணவில்லை.

கொடிய பயங்கரவாதத்தின் பணயக்கைதிகளாக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த மக்களின் விடுதலைக்காக சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட துணிச்சலான தைரியமான நடவடிக்கைகளின் பெறுமதி இந்த புனித பூமியில் என்றுமே பாதுகாக்கப்படும்.

எமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அதனை பல நூற்றாண்டுகள் நினைவுகூறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் உலகெங்கிலும் உள்ள இராணுவத்தினருக்கு முன்மாதிரியாக இருந்து பொதுமக்களுக்கு ஆகக்குறைந்த சிரமத்தையும் இராணுவத்தினருக்கு குறைவான சேதத்தையும் ஏற்படுத்தி இந்த நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றி பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை மிதித்து விட்டது எனக்கூறும் சில விமர்சனங்களைக் கண்டேன். பெரும்பான்மை இனம்; சிறுபான்மை இனம்; என்ற இந்த சொற்பிரயோகங்களைக்கூட நான் விரும்பவில்லை. நாம் அனைவரும் இலங்கையர்கள். கிழக்கின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தே குடும்பிமலையில் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு வழி வகுத்தார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு ஏற்படுத்திய தோல்வியை வெறுமனே இராணுவ வெற்றியாக மட்டுமே குறிப்பிடுவதற்கு நான் விரும்பவில்லை. அதற்கும் அப்பால் தேசிய அனைத்துலக பெறுபேறும் இந்த வெற்றியினுள் பொதிந்திருக்கிறது.

பயங்கரவாதத்திற்கு சட்டரீதியான அதிகாரப் பிரதேசம் ஒன்று இருக்கின்றது என்பதை ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொண்டது போன்ற அநியாயமான செயலை சிறிலங்காவில் இன்றி உலகில் வேறு எங்குமே நடக்கவில்லை.

இந்த பிரதேச அதிகார மாயையை அம்பலப்படுத்தியதன் மூலம் பயங்கரவாதத்தின் ஈழக்கனவு சுக்குநூறாகச் செல்லும் செய்தியையே குடும்பிமலை உச்சியில் இருந்து கொண்டு எமது வீரம்மிக்க இராணுவத்தினர் உலகுக்கு எடுத்துக் கூறினார்கள்.

அது மட்டுமா? நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்குப் பகுதி முன்னேற்றமடையாத பிரதேசம் ஒன்றாகவே கருதப்பட்டது. வன்முறையில் சிக்குண்டதனால் வளமிக்க கிழக்கின் தைரியமிக்க மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஊனமுற்றார்கள். அரசியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அவர்கள் அங்கவீனமடைந்தனர். முக்காடு அணிந்த பிள்ளைகளினதும் நெற்றியில் பொட்டு வைத்த தமிழ் பிள்ளைகளினதும் ஏனைய சிங்களப் பிள்ளைகளினதும் கல்வி கற்கும் உரிமையை அவர்கள் பறித்துக்கொண்டனர்.

உங்கள் 12 வயது 14 வயது பிள்ளைகள் ஆயுதங்கள் ஏந்துவதை உங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா? உண்மையிலேயே முடியாது. என்றாலும் கிழக்கிலும் வடக்கிலும் இதுதான் யதார்த்தம். புத்தகங்களுக்கும் கலர் பென்சில் பெட்டிகளுக்கும் பதிலாக அவர்களுக்குக் கிடைத்தது விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகளும் குண்டுகளும் சயனைட் குப்பிகளும் ஆகும்.

இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பிள்ளைகளின் எதிர்கால உலகைக் கட்டியெழுப்புவோம்.

இதற்கு குறிப்பாக எமது அனைத்துலக நண்பர்கள் எமக்கு உதவுவார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன். அதேபோல் பொய்யான முழக்கங்களை ஏந்திக்கொண்டு கிழக்கின் இந்த உதயத்தைத் தடுக்க வேண்டாம் என்று அனைத்துலக சமூகத்திடமும் எமது சில அரசியல்வாதிகளிடமும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

உலகம் முழுவதும் சுற்றித்திரிந்து தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

எம்மிடம் குறைபாடுகள் இருந்தால் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவற்றை விமர்சனம் செய்து கொள்வோம். மகிந்த ராஜபக்சவை விமர்சனம் செய்தால் பரவாயில்லை. ஆனால் இந்த உன்னதமான நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாம்.

மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது எமது அடிப்படையான பொறுப்பாகும். நான் எனது காலம் முழுவதும் அதற்காக உறுதியாகச் செயலாற்றினேன் என்பது உங்களுக்கு இரகசியமான விடயமல்ல. எனினும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கும் மனித உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாகவே புரிந்து கொள்ள வேண்டும். இதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.

அதேபோல் இராணுவத்தினரதைத் தூற்றுவதன் மூலமோ அல்லது அவர்கள் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமோ இந்த வெற்றியை மூடிமறைக்கும் முயற்சியை நாம் காண்கிறோம். மகா சங்கத்தினருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதன் மூலம் தமது சுயரூபத்தை மறைப்பதற்கான முயற்சிகளையும் நாம் காண்கிறோம்.

குடும்பிமலை ஒரு காட்டுப் பிரதேசமா? சரணாலயமா? அங்கு எத்தனை வாவிகள் இருந்தன? அங்கு எத்தனை வீடுகள் இருந்தன? ஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் இருந்தன? போன்ற கேள்விகள் வரைபடக் கலைஞர்களுக்கு மட்டுமே முக்கியமாகின்றது.

தயவு செய்து பொறாமையோடு இதைப் பார்க்க வேண்டாம். இது அரசாங்கத்தின் அல்லது எனது தனிப்பட்ட வெற்றியல்ல.

இது பாதுகாப்புச் செயலாளரினதோ முப்படைத் தளபதிகளினதோ தனிப்பட்ட வெற்றியும் அல்ல. சிலர் அவ்வாறு நினைத்தே பித்துப்பிடித்ததுபோல் உளறுகின்றார்கள்.

இது மக்களின் வெற்றியாகும். அந்நியராக இல்லாமல் வெற்றியின் ஒரு பங்காளராகும்படி எதிர்க்கட்சித் தலைவரையும் நான் கௌரவத்துடன் அழைக்கிறேன். என்னைத் தூற்றினாலும் எனது குடும்ப அங்கத்தவர்களைப் தூற்றினாலும் பரவாயில்லை. அதை நாம் பொறுத்துக்கொள்கின்றோம். ஆனாலும் எமது இராணுவத்தினரைத் தூற்றிப் பரிகசிக்க வேண்டாம். இராணுவத்தினரை குறைத்து மதிப்பிடவும் வேண்டாம். அவர்கள் தமது உடல், உயிர், இரத்தம் என்பவற்றை தியாகம் செய்தே தாய் நாட்டுக்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள்.

நாம் அரசியலில் இருந்து விடைபெறும் நாளில் உனது பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்தாய் என்று மனச்சாட்சி எம்மிடம் கேட்கும். காலனித்துவ நாட்டையா? பிளவுபட்ட நாட்டையா?

இல்லை. நாம் எமது பிள்ளைகளுக்கு கௌரவத்துடன் வாழக்கூடிய நாட்டையே பரிசளிப்போம்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் பிள்ளைகள் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல் மகிழ்ந்து வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் அவர்களுக்கு அன்பளிப்புச் செய்வோம்.

அனைத்துக் கட்சி மாநாட்டினூடாக இந்நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களை ஒருங்கிணைத்து வடக்குää கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வை வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இதனை மேலும் தாமதமடையச் செய்ய வேண்டாம். எல்லா அரசியல் கட்சிகளும் தமது ஆலோசனைகளை விரைவாக முன்வைக்கும்படி பகிரங்கமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஒன்றுபட்டு இறுதித்தீர்வுக்கு வாருங்கள்.

தமிழ் பேசும் மக்களை கூடுதலாக அரசியல் அதிகாரத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வடக்கு - கிழக்கு மக்களுக்கு நியாயமான பிரச்சினைகள் இருக்குமாயின் நாம் அதற்காக பொறுப்புணர்வுடன் செயற்படுவோம்.

தமிழராக அல்லது முஸ்லிமாக இருக்கின்ற காரணத்தினால் எவரும் துன்பத்திற்கு ஆளாகக்கூடாது.

அதேபோல் துப்பாக்கிகளின் மூலமோ குண்டுகளின் மூலமோ சயனைட் குப்பிகளின் மூலமோ தமிழ் மக்களின் விடுதலையை ஏற்படுத்திக் கொள்ள இயலாது என்ற யதார்த்தத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்கள் பாழ்படுத்துகின்றார்கள். நாட்டுப் பிள்ளைகள் அனைவரினதும் எதிர்காலத்தையும் தான். அவர்கள் தமது கலாசாரத்தையும் அழிக்கின்றார்கள். எவ்வளவுதான் பயங்கரமானாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வன்முறைக் குரலுக்கு நான் அடிபணியவோ அல்லது பயப்படவோ போவதில்லை. அவர்களுடைய கொலை அச்சுறுத்தல்களுக்கும் நான் அசையப்போவதில்லை. நாட்டுக்கான எனது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்ற நான் உளப்பூர்வமாக கட்டுப்பட்டுள்ளேன்.

கிழக்கு மாகாண மக்களுக்கு தமது அடிப்படை உரிமையான வாக்கைப் பயன்படுத்தும் உரிமை கிடைக்கப்பெற்றிருந்தா? 15 வருடங்களாக இந்த அப்பாவி மக்களின் குடிஉரிமை பறிக்கப்பட்டிருந்தது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை நாம் மீண்டும் பெற்றுக்கொடுப்போம். இந்த வருட இறுதியில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும். இவ்வருட இறுதியில் தமது பிரதிநிதிகளை உள்ளுராட்சி மன்றங்களுக்கும் மாகாண சபைக்கும் தேர்ந்தெடுக்கும் உன்னத உரிமை கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைக்கும். கடந்த காலம் முழுவதும் தேர்தல் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இதற்கும் கனவில் பயந்தது போல் சப்தமிடுகின்றனர்.

வாக்குரிமை மட்டுமல்லாமல் மின்சாரம் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து பாடசாலைகள் மருத்துவமனைகள் புதிய கைத்தொழில்கள் போன்ற அனைத்தும் கிழக்கு மாகாணத்தை வளமாக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

நிலத்தின் சுதந்திரத்தைப் போல பொருளாதார சுதந்திரமும் முக்கியமானதாகும். இதற்காக விவசாயக் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி வேலைத் திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த துரித வேலைத் திட்டத்தின் மூலமாக இந்த நாடு இழந்த பொருளாதார வளத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.

ஜனரஞ்சகமான அரசியல்வாதியாக வரலாற்றில் இணைந்துகொள்ள நாம் விரும்பவில்லை. இந்த நாட்டையும். நாட்டின் எல்லா உயிர்களையும் நாட்டின் எல்லா பசுமைகளையும் நேசித்த பாதுகாவலனாக வரலாற்றில் இடம்பெற்றால் அதுவே எனக்குப் போதுமானதாகும். தேர்தலுக்காக அல்லாமல் நாட்டுக்காக அரசியலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவராக வரலாற்றில் நான் அறிமுகப்படுத்தப்பட்டால் அதுவே நான் பெறுகின்ற உயர்ந்த கௌரவமும் திருப்தியுமாகும்.

தாய் நாட்டை உண்மையாகவே நேசிக்கின்ற மக்களுடைய உறுதிப்பாட்டின் ஓர் அடையாளமாக குடும்பிமலை வெற்றியை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்நாட்டின் உழைக்கும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும் மத்தியிலும் நிதானமாக இதற்கு வழங்கிய தைரியத்தை நான் உணர்வுமிக்க நேசத்துடன் மதிக்கின்றேன். வேலைநிறுத்தம் மற்றும் ஏனைய குழப்பங்கள் இன்றி இதை நாம் நிறைவேற்றினோம். இது உங்கள் பொறுமையின் வெற்றியாகும்.

இந்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் இந்த போராட்டத்தில் முன்னணியில் நின்று தமது பொறுப்பை நிறைவேற்றின. இதற்கு அரசாங்கத்தின் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.

எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் நம்நாட்டின் அப்பாவி மக்கள் பிளவுபடாத தேசத்தை கௌரவமான சமாதானத்தைதான் வேண்டினார்கள். பிரஜைகளே இது உங்கள் வெற்றியாகும்.

அதேபோல் அரசாங்கத்தின் பாதுகாப்புக்காக நிபந்தனைகளின்றி செயற்படுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இச்சந்தர்ப்பத்தில் இந்த வெற்றியின் பங்காளிகள் ஆகின்றார்கள்.

தமிழ் பேசும் எனது அன்பார்ந்த நண்பர்களே

நியாயமான காரணங்களுக்காக இடம்பெறுகின்ற யுத்தத்தை விட உங்களுக்கு சமாதானம் பெறுமதிமிக்கதென்பதை நான் அறிவேன். அது எம்மனைவருக்கும் பெறுமதியானது. நிறைந்த உணவுப்பாத்திரத்தை விட சுதந்திரம் உங்களுக்குப் பெறுமதியானது என நான் உணர்கின்றேன். உங்களிடம் விட்டுச் செல்லப்பட்ட அந்தக் கண்ணீர் நிறைந்த வரலாற்றைப் பற்றி எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனாலேயே உங்களதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலப் பொறுப்பை நான் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.

கிழக்கின் உதயம் கிழக்கிலங்கை மக்களின் அப்பாவி வாழ்க்கையை ஒளிமயப்படுத்தி அந்த ஒளியினூடாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் வரலாற்று ரீதியான சகோதரத்துவமும் தளிர்விட்டு வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே இந்த வெற்றியை அண்மைக்கால சிறிலங்காவின் சரித்திரத்தை மாற்றியமைக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துங்கள்.

எல்லா இனங்களையும் மதங்களையும் சார்ந்த மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வோம் என உறுதிபூணுமாறு உணர்வுபூர்வமாகவும் மிகப் பொறுப்புடனும் நான் வேண்டிக்கொள்கிறேன் என்றார் அவர்.

Tuesday, July 17, 2007

கிழக்கு மாகாண நிர்வாகத்தின் தலைமைச் செயலர் புலிப்பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

17 July 2007



herath__abeyweera.jpgInne_harbour_Road.jpg1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கைக்கமைய உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பு கடந்த வருடம் செல்லுபடியற்றது என இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான நிர்வாகக் கட்டமைப்புக்கள் தனித்தனியாக உருவாக்கப்பட்டன. இந்நிலையில் கிழக்கு மாகாண நிர்வாகத்திற்கென நியமிக்கப்பட்ட அரச தலைமைச் செயலாளர் எச். எம். ஹெரத் அபேவீர என்பவர் புலிப்பயங்கரவாதிகளினால் நேற்று திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணம் கடந்த ஜனவரி மாதத்தில் இரு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாக வடக்கு, கிழக்கு என இரு மாகாணங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

நேற்று மாலை திருகோணமலையின் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண செயலக அலுவலகத்தில் புலிப்பயங்கரவாதிகளின் ஆயுததாரியினால் இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது சடலம் தற்போது திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்தப் பகுதியின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது

Monday, July 16, 2007

வடக்கு - கிழக்கு பிரச்சினை???????

வடக்கு - கிழக்கு பிரச்சினை?
[16 - July - 2007] [Font Size - A - A - A]
தென்னிலங்கை அரசியலை இப்போது தொப்பிகல பிரதேசமே ஆக்கிரமித்து நிற்கிறது. இப்பிரதேசத்தை கடந்த வாரம் இராணுவத்தினர் கைப்பற்றியதை அடுத்து கிழக்கு மாகாணம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதாக பிரகடனம் செய்திருக்கும் அரசாங்கம், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு நிகரான வகையில் தேசிய அளவிலான வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. பிரதான வைபவம் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவிருக்கிறது. சுமார் கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரில் தொப்பிகலவில் சாதித்ததைப் போன்ற மகத்தான வெற்றியை அரசாங்கப் படைகள் இதுவரை கண்டதில்லை என்ற தோரணையிலேயே அரசாங்கமும் அதன் இராணுவ முனைப்புக்கு ஆதரவளிக்கும் தென்னிலங்கைச் சக்திகளும் பேசி மகிழ்ந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உலகில் பலம்பொருந்திய - பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவின் படைகளினால் கூட 20 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் சாதிக்க முடியாததை இலங்கைப் படைகள் சாதித்துவிட்டதாகவும் பெருமை பேசப்படுகிறது.

தொப்பிகல கைப்பற்றப்பட்டதன் பிறகு தென்னிலங்கை அரசியலில் வாதப்பிரதிவாதங்களின் திசையும் மாறி யிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற பாரதூரமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை மூடிமறைப்பதற்கும் அந்த நெருக்கடிகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும் அரசாங்கம் தொப்பிகல வெற்றியை பயன்படுத்துவதாக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது. தொப்பிகல வெறும் காட்டுப் பிரதேசம், அதைக் கைப்பற்றியதில் கொண்டாடுவதற்கு எதுவுமேயில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். இவ்வாறு கூறியதன் மூலம் பெரும் தியாகங்களைச் செய்து போரிட்டுக்கொண்டிருக்கின்ற முப்படையினரையும் அவர் அவமதித்து விட்டதாக அரசாங்கத் தரப்பினர் தர்மாவேசம் கொண்டிருக்கிறார்கள். அரசாங்க ஊடகங்களும் விக்கிரமசிங்கவை கடுமையாகச் சாடியிருக்கின்றன. தொப்பிகல மலையுச்சியில் இராணுவத்தினர் தேசியக் கொடியை ஏற்றிய படத்தைக் கொண்ட சுவரொட்டிகள் தென்னிலங்கையெங்கும் ஒட்டப்பட்டு வருகின்றன. கொண்டாட்ட வேகம் இவ்வாரம் உக்கிரமடையக் கூடியதாக அரசாங்க இயந்திரம் முழு மூச்சாக செயற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

தொப்பிகலவில் இராணுவத்தினர் கண்டதாகக் கூறப்படும் `சரித்திர முக்கியத்துவ வெற்றி'க்குப் பிறகு தேசிய இனப்பிரச்சினையின் வரைவிலக்கணத்தைக் கூட மாற்றியமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடக்கு- கிழக்கு பிரச்சினையே பொதுவில் இனநெருக்கடி என்று கூறப்பட்டு வந்திருக்கிறது. இப்போது கிழக்கு மாகாணம் முழுமையாக அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டதாக அரசாங்கம் உரிமை கோருகின்ற நிலையில், இனநெருக்கடியென்பது வடக்கு -கிழக்குப் பிரச்சினையல்ல; வெறுமனே வடக்குப் பிரச்சினைதான் என்று பேரினவாத சக்திகள் புதிய வரைவிலக்கணம் ஒன்றை வகுக்க ஆரம்பித்திருக்கின்றன. நேற்றைய தினம் `சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் முன் பக்கத்தில் பிரதான தலைப்புச் செய்தி `தொப்பிகல கைப்பற்றல் மாயைகளைத் தகர்க்கிறது. வடக்கு- கிழக்குப் பிரச்சினையென்று ஒன்றில்லை - ஜாதிக ஹெல உறுமய கூறுகிறது' என்ற தலைப்பில் அமைந்திருந்தது. தொப்பிகல கைப்பற்றப்பட்ட பிறகு நாட்டில் வடக்கு - கிழக்குப் பிரச்சினை என்று எதுவும் கிடையாது. அதை வடக்குப் பிரச்சினை என்று அழைப்பதே சிறந்தது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிச் செயலாளர் உதய கம்மன் பில் கூறுவதாக அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`கிழக்கு விடுதலை செய்யப்பட்டமை இலங்கையின் அண்மைக்கால சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியாகும். நெருக்கடியுடன் தொடர்புடைய பல மாயைகளை இந்த வெற்றி தகர்த்திருக்கிறது. இன்று இருப்பது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னர் நாம் கண்ட கிழக்கு அல்ல. விடுதலைப் போராளிகள் என்று கூறப்படுபவர்களிடம் இருந்து வடக்கையும் விடுவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை' என்று கம்மன்பில கூறியிருக்கிறார். இப்போது இருப்பது வடக்கு - கிழக்குப் பிரச்சினையல்ல. வெறுமனே வடக்கு பிரச்சினைதான் என்ற கருத்தை சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான எந்தவொரு அபிலாஷையையும் அங்கீகரிக்கத் தயாரில்லாத ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்கள, பௌத்த பேரினவாத கட்சி மாத்திரம் கூறவில்லை. இத்தகைய கருத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ கூட கடந்த வாரம் தெரிவித்திருந்தார். தெதுறுஓயா பிரதேச விவசாயிகளின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் கடந்த வாரம் சந்தித்த ஜனாதிபதி அங்கு பேசுகையில், ஒரு கட்டத்தில் வடக்கு - கிழக்கு பிரச்சினையென்று கூறிவிட்டு உடனடியாகவே இன்று கிழக்கில் பிரச்சினை இல்லை. வடக்கில் மாத்திரமே பிரச்சினை என்று குறிப்பிட்டதை தொலைக்காட்சி செய்தியின்போது காணக்கூடியதாக இருந்தது.

கிழக்கை முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிறகு கிழக்கில் பிரச்சினை இல்லை என்று கூறுகின்ற ஜனாதிபதி, அடுத்து வடக்கு மாகாணத்தையும் முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அவரின் நோக்கத்தின் பிரகாரம் முழுமையான வடக்கு மாகாணமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டால், வடக்கிலும் பிரச்சினை இல்லை என்று அல்லவா அவர் கூறப்போகிறார். அதற்குப் பிறகு ஒட்டுமொத்தத்தில் இன நெருக்கடி என்று ஒன்று இலங்கையில் கிடையாது என்றும் அரசாங்கம் உலகிற்கு பிரகடனப்படுத்திவிடக் கூடுமல்லவா? இராணுவ வெற்றிக்குப் பிறகு கிழக்கில் பிரச்சினை இல்லை என்ற கூற்றும் அடுத்து வடக்கையும் முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வையல்ல, இராணுவத் தீர்வையே காண்பது என்ற அரசாங்கத்தின் அடிப்படை நோக்கத்தை எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி அம்பலப்படுத்துகின்றன. உண்மையில் அரசியல் தீர்வு பற்றிய உலக ஒப்பாசாரத்துக்கான பேச்சு எல்லாம் இராணுவத் தீர்வை முழு மூச்சாக முன்னெடுப்பதற்கான கால அவகாசத்தைப் பெறுவதற் கே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

Friday, July 13, 2007

பொருளாதார, இராணுவ நிலைகளை தாக்கப்போவதாக புலிகள் எச்சரிக்கை

பொருளாதார, இராணுவ நிலைகளை தாக்கப்போவதாக புலிகள் எச்சரிக்கை
[13 - July - 2007] [Font Size - A - A - A]
இலங்கை ஜனாதிபதியுடன் சமாதானமென்பது சாத்தியப்படாதென்பதால் இலங்கையின் பொருளாதார நிலைகள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கப்போவதாக விடுதலைப்புலிகள் எச்சரித்துள்ளனர்.

மட்டக்களப்பில் குடும்பிலை (தொப்பிகல) பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் கிழக்கு மாகாணத்தைக் விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த 24 மணிநேரத்திலேயே விடுதலைப் புலிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் `ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்;

இலங்கை இனப் பிரச்சினைக்கு சமாதான வழிகளில் தீர்வொன்றைக் காண முடியுமென்ற சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீரழித்துள்ளார்.

இதனால் எமது எதிர்கால இலக்குகளாக இலங்கை அரசின் மிகப்பெரும் இராணுவ மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளும் இருக்கும். இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கும் இராணுவ ஆட்சிக்கும் இவை உதவியாயிருந்ததாலேயே அவை இலக்குகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. எண்ணெய்க்குதம் மீதான எமது தாக்குதலானது இதற்கொரு உதாரணமாகும்.

இவ்வாறான இலக்குகள் மீதான தாக்குதல்களானது இலங்கையின் பொருளாதார மற்றும் இராணுவ ஆற்றல்களை முடக்குமென்பதால் அதுதான் எமது தாக்குதல் தந்திரமெனவும் அவர் தெரிவித்தார்.

Tuesday, July 10, 2007

கிழக்கு மாகாணம் இல்லாத ஈழம் பிரபாகரனுக்கு தேவையே இல்லை

கிழக்கு மாகாணம் இல்லாத ஈழம் பிரபாகரனுக்கு தேவையே இல்லை
11 July 2007

* செய்திகள்

Trinco_Full_Map_0.jpgPrepakarad_Lower.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் கிழக்கு மாகாணத்துடனான ஈழத்தை பெற்றுக்கொள்வதற்கே கனவு கண்டு கொண்டிருக்கின்றார் அந்த கனவு பலிக்காது என்பதுடன் சகல வசதிகளையும் கொண்டுள்ள கிழக்கு மாகாணம் இல்லாத ஈழம் பிரபாகரனுக்கு தேவையே இல்லை அங்குள்ள மூலவழங்களைச் சுரண்டி வன்னியை வழம்படுத்துவதே பிரபாகரனின் தமிழீழப் போராட்டத்தின் குறிக்கோளென தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கடந்த கால வரலாற்றை எடுத்து பார்க்கின்ற போது எந்த அரசாங்கம் இருந்தால் என்ன புலிகள் கிழக்கு மாகாணத்தையே தங்களது யுத்ததளமாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கும் படையினருக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தினர். கடந்த காலங்களில் புலிகளின் யுத்த பலம் கிழக்கிலேயே வெளிப்படுத்தப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; பெறுமதியில்லாத கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் கைப்பற்ற முயற்சிக்கின்றது அது முன்னரே படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதி என்று கூறி கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் படைநடவடிக்கைகளை வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கான முயற்சிகள் தேசவிரோதக் கும்பல்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணம் எட்டு மாவட்டங்களை எல்லைகளாக கொண்டிருக்கின்றது இந்த மாகாணத்தில் தான் சிங்கள, தமிழ், முஸ்லிம், ஆகிய மூன்று இனங்களை சேர்ந்தவர்களும் சமமாக வீதத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மாகாணத்தில் தான் கலை காலாசாரம் பொருளாதாரம் அரசியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கு முக்கியதுவம் பெற்ற இடங்களும் இருக்கின்றன. கடந்த கால வரலாற்றை எடுத்து பார்க்கின்ற போது எந்த அரசாங்கம் இருந்தால் என்ன புலிகள் கிழக்கு மாகாணத்தையே யுத்ததளமாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கும் படையினருக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தினர்.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ ஆட்சி காலத்தில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுக்கொண்டிருந்த போது கிழக்கில் 400ற்கு மேற்பட்ட பொலிசாரை கைதுசெய்து இரத்தத்தை எடுத்துக்கொண்டு பின்னர் சுட்டுக்கொலை செய்திருந்தனர். அறந்தலாவ தாக்குதல் முஸ்லிம்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்திலேயே மேற்கொள்ளப்பட்டன.

புலிகளின் பாரிய தாக்குதல்கள் கிளிநொச்சியிலோ முல்லைத்தீவிலோ மேற்கொள்ளப்படவில்லை கிழக்கை படையினர் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அரசியில் கட்சிகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரநடவடிக்கைகளை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சித்து வருகின்றன.

புலிகள் தங்களது யுத்தபலத்தை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் காண்பிப்பதற்கு கிழக்கு மாகாணத்தையே பயன்படுத்தினர். கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மையங்கள், வெளிநாட்டு முதலீடு செய்வதற்கான இடங்கள், சுற்றுலாத்துறை, கடற்படையினரின் முகாம் மற்றும் வடக்கிற்கு உணவு வழங்குவதற்கான முக்கிய பாதைகள் இருக்கின்றன

அத்துடன் மாவிலாறு, சம்பூர், பவுள்பொயின்ட் ஆகிய இடங்களிலிருந்தே புலிகள் கடற்படையினர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டனர். எனினும் அரசாங்கம் கிழக்கை முழுமையாக மீட்டு அந்த மாகாணத்திற்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் வகையில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. இந்நிலையில் சிலர் கிழக்கு மாகாண படை நடவடிக்கைகளை தங்களது அரசியல் இலாபத்திற்கான பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் திருகோணமலை துறைமுகம், பொருளாதார மையங்கள் இல்லாத ஈழம் குறித்து சிந்திக்கவே மாட்டார். ஆனால் அவரது அந்த கனவு பலிக்காது 25 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாணத்தை முற்றுப்புள்ளி வைப்பதற்கான முதல் படி ஆரம்பமாகியுள்ளது.

கிழக்கு இல்லாத ஈழம் பிரபாகரனுக்கு தேவையில்லை இந்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியலை பயன்படுத்துவது சாதாரணமானதல்ல என்பதுடன் அரசியல் இலாபம் பெற்றுக்கொள்வதற்காக தொழில்வாய்ப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றங்கள் இருக்கின்றன. புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களுக்கான திட்டங்கள் முறியடிக்கப்படுகின்றன புலிகளிலிடமிருந்து தப்பி வந்தவர்களும் படையினருக்கு தகவல்களை வழங்குகின்றனர். தகவல்களை யார் கொடுக்கின்றார்கள் என்பது முக்கியமல்ல தகவலே முக்கியமானதாகும் அவ்வாறான தகவல்களின் பிரகாரம் படையினர் செயற்பட்டமையினால் பாரிய தாக்குதல்களுக்கான திட்டங்கள் முறியடிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் ஒடுக்குவதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைத்து வருகின்றது அதன்பிரகாரம் புலிகள் இயக்கத்திற்கு வெளிநாடுகளின் நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் புலிகளுக்கு நிதிசேகரிக்கும் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார் இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் விமான நிலைய தாக்குதல்: ஒரே சமயத்தில் 30 இடங்களை குண்டு வைத்து தகர்க்க திட்டம்- உலகை உலுக்கும் பயங்கர சதி அம்பலம்??????

லண்டன் விமான நிலைய தாக்குதல்: ஒரே சமயத்தில் 30 இடங்களை குண்டு வைத்து தகர்க்க திட்டம்- உலகை உலுக்கும் பயங்கர சதி அம்பலம்
9 July 2007

* வெளிநாட்டுச் செய்திகள்

Glasgo_2.jpgஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மார்க்கெட் மற்றும் பூங்கா பகுதியில் கடந்த 29-ந்திகதி சில வெடிகுண்டு கார்களை போலீசார் தக்க சமயத்தில் கண்டுபிடித்தனர். இதற்கு மறுநாள் 30-ந் திகதி கிளாஸ்கோ விமான நிலையத்தை தகர்க்கும் முயற்சி நடந்தது. இதையும் போலீசார் சமயோசிதமாக முறியடித்தனர்.

இந்தசம்பவத்தில் எரியும் நிலையில் விமான தளத்திற்குள் ஜீப்பினை ஓட்டிவந்த கபீல் அகமது என்பவனை போலீசார் அமுக்கிப் பிடித்து உயிருடன் மீட்டனர். கபீல் அகமது உடலில் தீக்காயங்களுடன் அங்குள்ள ராயல் அலெக்சாண்ட்ரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

கபீல் அகமது பெங்களூரை சேர்ந்தவன். இந்த சம்பவத்தில் கபீலின் உற்ற நண்பன் பிலால் அப்துல்லா,கபீலின் சகோதரர் சபீல் அகமது, தந்தை மக்பூல் அகமது, டாக்டர் முகமது அனீப் உள்பட 7 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இவர்களில் கபீல் அகமதுவுக்கும், பிலால் அப்துல்லாவுக்கும் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஈராக்கை சேர்ந்த பிலால் அப்துல்லா, பின்லேடனின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளான். கபீல் அகமதுவின் குடும்பத்தினர் அனைவருமே தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளனர். கபீல் குடும்பத்தினர் அனைவருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

மேற்கண்ட தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்கள் ஈமெயில் மூலம் சதித் திட்டங்களை பரிமாறி உள்ளனர். இவர்கள் எதற்காக இந்த சதி திட்டத்தை தீட்டினார்கள் என்பது பற்றிய தகவலும் தெரியவந்துள்ளது.

ஈராக் மீது தாக்குதல் நடத்தியதற்காக இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரொனிபிளேயருக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என்று சதிக்கும்பல் முடிவெடுத்துள்ளது. ஈராக் தாக்குதலின் போது பிலால் அப்துல்லாவின் வீடு தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கார் வெடிகுண்டு தவிர, விஷவாயு தாக்குதல் உள்பட பல நூதன திட்டங்களையும் அவர்கள் வகுத்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக ரொனி பிளேயரை கொல்லவும் அவர்கள் சதி செய்துள்ளனர்., இதனை செயல்படுத்துவதற்கு அப்பாவி இளைஞர்களையும் அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

இதற்காக கபீல் அகமது ஏராளமான நண்பர்களிடம் "வெளிநாட்டு வேலை இருக்கிறது. கைநிறைய பணம் கிடைக்கும்'' என்று கூறி வந்துள்ளான்.இதுபற்றி அவனது நண்பர்கள் பலர் போலீசாரிடம் தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.

இன்டர்நெட் மூலமாகவும் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களை தொடர்பு கொண்டுள்ளனர். இதற்கிடையே உலகையே தங்கள் பக்கம் திரும்பிபார்க்கும் வகையில் இங்கிலாந்தை ஒட்டுமொத்தமாக தகர்க்கும் சதி திட்டம் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒரே சமயத்தில் கார் வெடிகுண்டு, விஷவாயு தாக்குதல்கள் நடத்தி 30 முக்கிய இடங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக 1700 தீவிர வாதிகள் 200 வழிகளில் `நெட்வொர்க்' மூலம் இணைந்து திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இங்கிலாந்து முழுவதும் புலனாய்வு போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இதுபற்றிய தகவலால் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளின் அனைத்து விமான நிலையங்களும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

பிராங்பர்ட், முனீச், ஹாம்பர்க் உள்பட முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.இதற்கிடையே கபீல் அகமது தங்கி இருந்த வீட்டில் இருந்து போலீசார் ஒரு முக்கிய கடிதத்தை கைப்பற்றி உள்ளனர்.

அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்து கொள்வதாக கபீல் அகமது எழுதிவைத்துள்ளான். இந்த கடிதம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கபீலின் பெங்களூர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கிருந்து மதம் சம்பந்தமான பல சி.டி.ககளை கைப்பற்றி உள்ளனர். இன்டர்நெட்டில் இருந்து `வெடிகுண்டு மாதிரி'யை அவன் `டவுன் லோட்' செய்து இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

இதற்கிடையே முக்கிய முதல் குற்றவாளியான கபீல் அகமது சாகும் தறுவாயில் உள்ளான். அவனது உடலில் 90 சதவீதம் கருகிவிட்டது. பெரிய அளவிலான "மொபைல் போன்'' ஒன்று உருகிப்போன நிலையில் அவனது உடல் முழுவதும் ஒட்டியுள்ளது.

கபீலின் மரணம் எந்த நேரத்திலும் நிகழலாம் என்ற நிலையில் உள்ளது. அவனை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். தொடர்ந்து தீவிரவாத கும்பல்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தவண்ணம் உள்ளன

Sunday, July 8, 2007

புதிய 7 உலக அதிசயங்கள்

புதிய 7 உலக அதிசயங்கள் (இடமிருந்து): சீனப் பெருஞ்சுவர், ஜோர்டானின் பெத்ரா, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்து ரட்சகர் சிலை, பெரு நாட்டின் "மச்சுபிச்சு' கட்டுமானம், மெக்சிக்கோவில் உள்ள மாயர்களின் நகரமான சிச்சன் இட்சா, ரோம் நகரில் உள்ள கொலாசியம், மற்றும் தாஜ்மகால்.

உலகம் முழுவதிலும் இருந்து 10 கோடி மக்களின் பேராதரவுடன் புதிய 7 உலக அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

1. சீனப் பெருஞ்சுவர்: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, படிப்படியாகக் கட்டி முடிக்கப்பட்ட, உலகின் மிகநீண்ட மதில்சுவர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருந்து மத்திய ஆசியா வரை அமைந்துள்ளது. உலக பாரம்பரிய மையமாக யுனெஸ்கோவால் 1986-ல் தேர்வு செய்யப்பட்டது. இப்போது வாக்கெடுப்பு மூலம் பெருந்திரளான மக்களின் ஆதரவைப் பெற்று 7 அதிசயங்களில் இடம்பெற்றுள்ளது.

2. ஜோர்டானின் பெத்ரா: ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து தெற்காக 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெத்ரா. இளஞ்சிவப்பு நிறத்தில் காண்போரை வியப்படையச் செய்யும் வகையில் மலையைச் செதுக்கி உருவாக்கப்பட்ட வழிபாட்டிடங்களும், கோபுரங்களும் அமைந்த புராதன சின்னம் இது. வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன நகரமான பெத்ரா, இந்தியா, சீனா மற்றும் தெற்கு அரேபியாவை, எகிப்து, சிரியா, கிரீஸ் மற்றும் ரோம் நகரத்துடன் இணைத்த, வர்த்தக மையமாகத் திகழ்ந்த நகரம்.

3. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்து ரட்சகர் சிலை: 38 மீட்டர் உயரமும், 700 எடையும் கொண்ட பிரமாண்டமான இயேசு கிறிஸ்து சிலை இது. ஆண்டுக்கு 18 லட்சம் பேர் வந்து செல்லும் சுற்றுலாத்தலம். பிரேசிலின் கார்கோவடோ மலையில் 710 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிரேசிலின் அடையாளமாகத் திகழும் இந்தச் சிலை 1931-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

4. பெரு நாட்டின் "மச்சுபிச்சு' கட்டுமானம்: இன்கா நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது உருவாக்கப்பட்ட அற்புத நகரம். கடல்மட்டத்தில் இருந்து 2430 மீட்டர் உயரத்தில், மலைக்குன்றுகளின் மீது உருவாக்கப்பட்ட பிரமாண்ட நகரம். பெரு நாட்டின் உருபம்பா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த புராதனக் கட்டமைப்பைக் காணும்போது வியப்பால் விழிகள் விரிவதைத் தடுக்க முடியாது.

5. மெக்சிக்கோவில் உள்ள மாயர்களின் நகரமான சிச்சன் இட்சா: மெக்சிக்கோவில் உள்ள யுட்டகன் தீபகற்பத்தில் கி.பி. 500 வாக்கில் கட்டப்பட்ட நகரம் சிச்சன் இட்சா. மிகப் பிரமாண்டமான பிரமிடு, வானியல் ஆய்வு மையம், போர்வீரர்கள் கோயில் போன்ற புராதன கட்டுமானங்கள் உள்ளன. மாயர்களின் நகரம் இது.

6. ரோம் நகரில் உள்ள கொலாசியம்: 50 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க கட்டப்பட்ட அரங்கு. ரோமப் பேரரசின் பெருமையைப் பறைசாற்றுவது. கி.பி. 80-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரங்கு 500 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்தது. "ஆம்பிதியேட்டர்' என அழைக்கப்படும் "வட்ட அரங்கு' வகையைச் சேர்ந்தது இது.

7. தாஜ்மகால்: முகலாய அரசன் ஷாஜகானால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. உலகெங்கும் காதல் சின்னமாகப் போற்றப்படுகிறது. போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சனிக்கிழமை நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில் 7 உலக அதிசயங்கள் அறிவிக்கப்பட்டன. தாஜ்மகாலும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்ததை, இந்தி நடிகை பிபாசா பாசு, அட்டன்பரோ இயக்கிய காந்தி படத்தில் நடித்த பென் கிங்ஸ்லி ஆகியோர் மேடையில் அறிவித்தனர்.
இலங்கையின் மறுத்தான் அரசியலை சர்வதேசம் இனியும் சகிக்குமா? -(தேசியன்)
[08 - July - 2007] [Font Size - A - A - A]
சர்வதேச சமூகத்தால் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை சீர்தூக்கிப் பாராது குற்றம் சுமத்துவோரில் குற்றங்காணும் இலங்கை அரசின் போக்கானது உலக அரங்கில் எவ்வளவு காலத்துக்கு எடுபடப்போகின்றதென்பதே இன்றைய முக்கிய கேள்வியாக மேற்கிளம்பி நிற்கின்றது.

ஜூன் போனால் ஜூலைக் காற்றுத்தான் வீசும். ஆனால் இலங்கைத் தீவில் தமது இருப்புக்காக போராடும் தமிழினத்தைப் பொறுத்தமட்டில் ஜூலைக் காற்று என்பது பிண வாடையை கொண்டுவரும் அடக்குமுறைக் காற்றாகவே வீசியுள்ளது - வீசுகின்றது.

இலங்கையில் தமிழர்கள் ஏராளமாக கொன்று குவிக்கப்பட்டமையும் அடித்துத் துரத்தப்பட்டு வீடு வாசல்களை இழந்தமையும் இந்த மாதத்தில் தான் என்பதை வரலாற்றின் பதிவுகள் கோடிட்டுக் காட்டி நிற்கின்றன.

ஆயினும் பல தசாப்தங்களாக கூடு கலைந்த வாழ்வுக்குச் சொந்தக்காரர்களாகவுள்ள ஈழத் தமிழர்களுக்கு எல்லா மாதங்களும் எதுவுமற்றவையாகவேயுள்ளன. தம்மீது மேற்கொள்ளப்படும் பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் தமிழ் மக்கள், தமது நியாயமான இடித்துரைப்புகளுக்கு உலகம் காட்டும் கடும் போக்கு நிலையையிட்டு மனமுடைந்தே நிற்கின்றனர்.

உள்ளூரில் இலங்கை அரச படைகளால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அராஜகங்கள் உலகுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்துவிட்ட பொழுதும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது உலகம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பதானது வேதனைக்குரிய விடயமாகும்.

மாறாக இலங்கை அரசின் ஏமாற்று வித்தைகளுக்கும் பொய்ப் பிரசாரங்களுக்குள்ளும் சர்வதேசம் விரும்பியும் விரும்பாமலும் தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளது. தமிழர் படுகொலையை விசாரிப்பதற்கென இலங்கையில் எண்ணுக்கணக்கற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எவையும் எந்த முடிவையும் காணவில்லை. தற்பொழுது குறிப்பிட்ட சில மனிதவுரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்கவென இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்தார். இந்த விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளை கண்காணிக்கவென சர்வதேச பிரபல்யம் வாய்ந்ததோரைக் கொண்ட சுயாதீனக் குழு (International Independant Group of eminent persons - IIGEP) என்ற சர்வதேச நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது.

பகவதி - சட்டமா அதிபர் கருத்து மோதல்

இக் குழு தனது முதலாவது இடைக்கால அறிக்கையினை கடந்த ஜூன் முதலாம் திகதி இலங்கை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது. இக் குழுவின் தலைவர் முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் பகவதி, இவ் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியமளிப்போரை பாதுகாக்கவில்லையெனவும் கால இழுத்தடிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் தனது முதலாவது அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, கடந்த ஜூன் 15 இல் தனது இரண்டாவது அறிக்கையை வெளியிட்ட சர்வதேச நிபுணர் குழு ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் தோல்விப் பாதையில் செல்வதாகவும் அது பக்கச்சார்பானதெனவும் தெரிவித்திருந்தது.

இக் குழுவின் முதல் அறிக்கையை பார்த்துவிட்டு அதை கவனமாக படித்துவருவதாக கூறிய இலங்கை அரசாங்கம், இரண்டாவது அறிக்கையில் பொறுமை இழந்துவிட்டது. வழமைபோல் சர்வதேச சமூகத்தின் வாயை அடைக்க பயன்படுத்தும் தனது `மறுத்தான் அரசியலை' பயன்படுத்த தொடங்கியது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கையானது, இலங்கை அரசாங்கம் தனது பெறுமதிமிக்க புதல்வர்கள், புதல்விகள் என பெருமையுடன் கருதும் கௌரவம் மிக்க ஆணையாளர்களை நேரடியாக அவமதிப்பதாக கூறியுள்ள இலங்கையின் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா நிபுணர் குழு அடுத்தடுத்துவிடுத்த இரு அறிக்கைகளால் ஜெனீவாவில் ஐ.நா.வின் மனிதவுரிமைகள் குறித்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்த இலங்கைக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டதாகவும் பகவதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் இந்த கடிதத்துக்கு பதிலளித்துள்ள முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் பகவதி, இலங்கையின் சட்டமா அதிபர் அவசரப்பட்டு கருத்துக்களை தெரிவிப்பதாகவும் விமர்சனங்களை கௌரவமான மொழியில் முன்வைக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

"இலங்கை சட்டமா அதிபர் `சர்வதேச நிபுணர் குழு'வை விமர்சிப்பது குறித்து நான் கவலையடையவில்லை. நானும் அந்தக் குழுவைச் சேர்ந்தவன் தான். ஆனால் நாங்கள் தெரிவிப்பது பிழையெனக் கருதினால் அவர் அதனை முறையான கௌரவமான மொழியில் குறிப்பிட வேண்டும். அது தூற்றுவதாக அமைந்தால் தவறாகும்" என பகவதி தெரிவித்துள்ளார். இந்த கருத்து மோதலைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிபுணர் குழுவின் தலைவர் பகவதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் 11 பேர் கொண்ட நிபுணர் குழுவில் ஒருவராவது விசாரணைகளின் போது பிரசன்னமாகியிருக்க வேண்டுமென கோரியுள்ளார்.

நிபுணர் குழுவுக்கு அரசாங்கம் ஒரு புறத்தில் மறுத்தான் அடித்துக் கொண்டிருக்க மறுபுறத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கை சூட்டோடு சூடாக மறுத்தான் அடித்துவிட்டது. இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவின் ஆயுதங்களை களையவேண்டுமென அமெரிக்கா விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, அமெரிக்கா விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை களையச் சொல்லுமா? என கேள்வியெழுப்புயுள்ளார்.

இலங்கையின் மறுத்தான் அரசியல் இன்றைக்கு வந்ததல்ல. இலங்கையில் போர் நிறுத்தத்தை கண்காணிக்க வந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இந்த மறுத்தானுக்கு முகம் கொடுக்க முடியாமல் அறிக்கைகளை திருத்தி மீள வெளியிட்ட வரலாறும் இங்குண்டு.

இது இவ்வாறிருக்க, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹோகன்ன, மேற்குலகின் உதவி நிறுத்தத்தால் இலங்கை வங்குரோத்து நிலையை அடையாதெனவும் தமக்கு இந்தியா, சீனா, ஜப்பான் ஆகியவை உதவி தருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்விதமாக இலங்கை சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களை வாயால் வெட்டி வீழ்த்தியே வருகின்றது.

ஆயினும் சர்வதேச சமூகம் இதை தனக்கேற்படும் கௌரவக் குறைச்சலாக பார்த்து ஒதுங்கிக் கொள்ளுமா என்பது சந்தேகமே.

இராஜதந்திர தளத்தில் இவ்வாறான மறுத்தான்களை முகம்கொடுக்கும் மேற்குலகால் இலங்கைக்கு பாடம் புகட்ட முடியுமா? பகவதி போன்ற தனிநபர்கள் தமக்கு இலங்கையின் செயற்பாடுகள் கௌரவக் குறைச்சலை ஏற்படுத்துவதாக கூறுகின்ற போதும் நாடுகள் இவ்வாறு கூறுவதற்கு தடையாகவிருப்பது தனிப்பட்ட தமது நாட்டு நலன்களேயாகும்.

எது எப்படியிருந்த பொழுதும், இலங்கையின் மறுத்தான் அரசியல் எவ்வளவு தூரம் வேலை செய்யும் என்பதை காலம் விரைவில் பதில் சொல்லும்.

Friday, July 6, 2007

பிரிட்டன் விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியரா?


Londom_12-06.jpgஅவுஸ்திரேலியாவில் கைதான டாக்டரிடம் பெண் போலீஸ் அதிகாரி விசாரணை மெல்போர்ன்: பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதல் முயற்சி தொடர்பாக அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய டாக்டர் முகமது அனீப்பிடம் பிரிட்டன் பெண் போலீஸ் அதிகாரி மற்றும் அவுஸ்திரேலிய போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். முகமது அனீப்பை இந்திய தூதரக அதிகாரியும் சந்தித்து பேசியுள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையம் மீது நடந்த தாக்குதல் ஆகிய சம்பவங்கள் தொடர்பாக பிரிட்டனில் ஏழு பேரும், ஆஸ்திரேலியாவில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விவரம் வருமாறு:

1. பிலால் தலால் அப்துல் சமது அப்துல்லா(ஈராக்கில் டாக்டர் பட்டம் பெற்றவர், விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடந்த வந்த ஜீப்பில் பயணம் செய்தவர்.)

2. காலித் அகமது( ஜீப்பை ஓட்டி வந்தவர். 90 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்தவர். முதலில், இவர் ஒரு டாக்டர், லெபனானை சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.)

3. முகமது ஜமீல் அப்துல் காதிர் ஆஷா(ஜோர்டானைச் சேர்ந்தவர். பிரிட்டனில் டாக்டராக பணி புரிகிறார்.)

4. ஆஷா மனைவி மார்வாஸ் ஆஷா(மருத்துவ உதவியாளர்.)

5. சபீல் அகமது(இந்தியாவில் பெங்களூரில் டாக்டர் பட்டம் பெற்றவர். பிரிட்டனில் பணியாற்றி வந்துள்ளார்.)

இது தவிர மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் டாக்டர். மற்றொருவர் மருத்துவ மாணவர். மேலும், அவுஸ்திரேலியாவில் பணியாற்றி வந்த இந்திய டாக்டர் முகமது அனீப் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட எட்டு பேரும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். பிரிட்டனில் தங்கிய போது தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள். இவர்களில் சபீல் அகமது, முகமது அனீப் ஆகியோர் பெங்களூரில் உள்ள ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கார் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்கள். இதில் முகமது அனீப் ஒரு ஆண்டு சீனியர். சபீல் அகமதுவின் தந்தை முஷ்டாக் அகமது, தாய் ஜாகியா அகமது ஆகியோரும் டாக்டர்களே. தற்போது பெங்களூரில் தங்கியுள்ளனர். பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். மகன் சபீல் அகமது குறித்து ஜாகியா அகமது கூறுகையில், "" எனது மகன் சமூக சேவையில் நாட்டம் கொண்டவன். பிரிட்டனில் தங்கியுள்ள இந்தியர்களிடம் நல்ல தொடர்பு கொண்டவன். அப்பாவி. இப்பிரச்னையில் இருந்து மீண்டு வருவான்,'' என்றார். இது தவிர சபீல் அகமதுவும், அவுஸ்திரேலியாவில் கைதாகியுள்ள முகமது ஹனீப்பும் உறவினர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் முக்கிய பகுதியில் குண்டுகள் பொருத்தப்பட்ட இரண்டு கார்களை நிறுத்தியது பிலால் அப்துல்லா மற்றும் காலித் அகமது. பின்னர் இவரும் ஒரு ஜீப்பில் ஸ்காட்லாந்துக்கு சென்றனர். அங்குள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப்பை மோதி பெரும் விபத்தை ஏற்படுத்த முயன்றனர். இதில் இருவரும் சிக்கி விட்டனர்.

இந்தியரான சபீல் அகமதுவுக்கும், பிலால் அப்துல்லாவுக்கும் நேரடி தொடர்பு உண்டு. கிளாஸ்கோ நகரில் உள்ள ராயல் அலெக்சாண்டரியா மருத்துவமனையில் பிலால் அப்துல்லாவும், முகமது ஜமீல் ஆஷாவும் பணியாற்றியுள்ளனர். முகமது அனீப் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் முன் தனது சிம் கார்டை சபீல் அகமதுவிடம் கொடுத்து சென்றுள்ளார். இதுதவிர கபீல் அகமது என்ற இன்ஜினியர் ஒருவரை போலீசார் தேடி வந்தனர். இவர் சபீல் அகமதுவுக்கு சகோதரர் என்றும் தகவல்கள் வெளியாகின. இவருக்கும் பயங்கரவாத தாக்குதல் முயற்சிக்கும் தொடர்பு உள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. ஆனால், இந்த தகவலை பெங்களூரில் உள்ள சபீல் அகமதுவின் உறவினர்கள் மறுத்தனர். சபீல் அகமதுவுக்கு கபீல் அகமது என்ற பெயரில் ஒரு சகோதரர் உண்டு. ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை என்று சபீல் அகமதுவின் உறவினர்கள் மறுத்தனர். அவர் எங்கிருக்கிறார் என்று பிரிட்டன் போலீசார் விசாரித்த போது ஐஸ்லாந்து நாட்டுக்கு விடுமுறைக்கு சென்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தொடர்ந்து நடந்த விசாரணையில் பல உண்மைகள் வெளியாகின. விமான நிலையம் மீது ஜீப்பை மோதி, கடுமையான தீக்காயம் அடைந்தவர் தான் கபீல் அகமது. முதலில் அவரது பெயர் காலித் அகமது என்று தவறாக கூறப்பட்டது. கபீல் அகமதுவும் இந்தியாவை சேர்ந்தவர் தான். இவர் இந்திய டாக்டர் சபீல் அகமதுவின் சகோதரர் என்பதை உறுதி செய்யும் பணியில் பிரிட்டன் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவர் மருத்துவமனையில் இருந்த போது குண்டுகள் பொருத்தப்பட்ட பெல்ட் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது என்று பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட முகமது அனீப்பிடம் விசாரணை நடத்த பிரிட்டன் போலீசில் பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி, லண்டனில் இருந்து சிங்கப்பூர் வழியாக நேற்று அதிகாலை பிரிஸ்பேன் சென்றுள்ளார். முகமது அனீப்புக்கு 48 மணி நேர காவல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவுடன் அந்த கெடு முடிவடையும் நிலை காணப்பட்டதால், பிரிட்டன் போலீஸ் அதிகாரி விசாரணையை உடனே துவக்க முடிவு செய்தார். அதன்படி ரகசிய இடத்தில் முகமது அனீப்பை அவரும், அவஸ்திரேலிய போலீசாரும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இத்துடன் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் முகமது அனீப்பை சந்தித்து பேசினார். இதை இந்திய தூதரக துணை ஹை கமிஷனர் வினோத் குமார் உறுதி செய்துள்ளார்.

Tuesday, July 3, 2007

எந்த முகத்துடன் பேச வந்தீர்கள்

தமிழ், முஸ்லிம் தலைமைகள் கைகோர்த்து ஒரே குரலில் பேசினால் மாத்திரமே பேரினவாதிகளின் கண்கள் திறக்கும்
[03 - July - 2007] [Font Size - A - A - A]

* ``முதலில், அவர்கள் "கம்யூனிஸ்ட்களை தேடி வந்தனர். நான் ஒரு "கம்யூனிஸ்ட் அல்ல என்பதால் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அடுத்து, அவர்கள் யூதர்களைத் தேடி வந்தனர். நான் ஒரு யூதன் அல்ல என்பதால் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. பின்னர், அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தனர். நான் ஒரு புரட்டஸ்தாந்து மதத்தவன் என்பதால் நான் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. கடைசியில்,அவர்கள் என்னைத் தேடி வந்தனர். அப்போது எனக்காக குரல் கொடுப்பதற்கு யாருமே இருக்கவில்லை". - MARTIN NIEMOLLER

திருகோணமலை மாவட்டம் சிங்களமயமாக்கும் நீண்டகாலத் திட்டத்தின் தொடர்ச்சியாக அண்மையில் சம்பூர் மற்றும் மூதூர் கிழக்குப் பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியது பற்றியும் அதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தது பற்றியும் முன்பு குறிப்பிட்டிருந்தேன். பிந்திய செய்தியின் படி அது ஒரு அடிப்படை மீறல் நடவடிக்கையென ஆட்சேபித்து அந்தப் பிரகடனத்தினை இரத்துச் செய்யுமாறு மாற்றுக் கொள்கை நிலையத்தின் (CPA) பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அறியக்கிடக்கிறது.

திருகோணமலை மாவட்ட சிங்கள மயமாக்கல் படலத்தின் முஸ்லிம்களின் காணிகளும் பேரினவாத சக்திகளினால் அபகரிக்கப்படுவதால் அதற்கு எதிராக போராடுவதற்குத் தயாராக இருக்க வேண்டுமென குறிப்பாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ரி. ஹசன் அலி (உப பயிர்ச்செய்கை அபிவிருத்தி பிரதியமைச்சர்), பைசல் காசிம் (விஞ்ஞான தொழில் நுட்பப் பிரதியமைச்சர்) இரண்டு மாதங்களிற்கு முன் சாய்ந்தமருதுவில் அறைகூவல் விடுத்திருந்தமை ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. இப்பிரச்சினையானது ஒட்டுமொத்தமாக முஸ்லிம் மற்றும் தமிழ் இரு சமூகங்களையும் மிக மோசமாக பாதிக்கின்றது என்ற வகையில் இரு சமூகங்களின் தலைமைகளும் இணைந்து விடாப்பிடியாக போராட வேண்டிய அவசர அவசியத்தையும் நாம் எடுத்துக்கூறியிருந்தோம். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், எவ்வித அநீதிகளையும் கைகட்டிப்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எந்த ஒரு கட்சியிடமும் தாம் அடகு வைப்பவர்களோ, தட்டிக்கேட்காமல் துதிபாடுபவர்களோ அல்ல என்று சூளுரைத்திருந்தார்.

பின்னர் மே மாத இறுதியில் ஜனாதிபதி விடுத்த உத்தரவின் பேரில் சம்பூர் மற்றும் கிழக்கு மூதூர் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டன. அங்கிருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரம் தமிழர்களுக்கு மீளக் குடியமரும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் கிழக்கு மாகாணம் முழுவதும் அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக எதிர்த்துள்ளது. பல்லாயிரம் தமிழர்கள் இடம்பெயர்ந்தும் ஏறத்தாழ, 15,000 பேர்வரை இந்தியாவிற்கும் ஓடியுள்ள நிலையில் தேர்தல் என்ற பேச்சுக்கு இடமிருக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பிரதியமைச்சருமான ரி.எம். ஹசன் அலி உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தலை வரவேற்பதாகவும் முஸ்லிம் சுயாட்சி கோரிக்கையை முன்வைத்து தேர்தலுக்கு முகம் கொடுப்பது பயனளிக்கும் எனவும் கூறியுள்ளார். இது ஒரு தப்புக்கணக்கு என்று கூறலாம்.

தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒரு குரலில் பேசி கைகோர்த்து நின்றால் தான் சிங்கள பேரினவாதிகளின் கண்கள் திறக்கும். மாறாக, பிரித்தாளும் பேரினவாத ஆட்சியாளர் விரிக்கும் வலையில், வீழ்ந்து விட்டால் விளையப்போவது பாரிய தீமையே தவிர வேறொன்றல்ல. எனவே, திருகோணமலை சிங்களமயமாக்கப்படுகிறது என காலங்காலமாக வெறுமனே தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பதை விட்டு தமிழ், முஸ்லிம் தலைமைகள் உடனடியாக மக்களை அணிதிரட்டி போராட்டத்தில் குதிப்பது தட்டிக்கழிக்கக் கூடியதல்ல " செய் அல்லது செத்துமடி" எனும் நிலை நிச்சயமாக வந்துவிட்டது.

அன்று ஜேர்மனியில் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் நாசிப் படையினர் நரவேட்டையாடிய காலத்தில் பெற்ற அனுபவத்தினை மாட்டின் நீ மொல்லர் பாதிரியார் கூறிவைத்தது இக்கட்டுரையின் மத்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதனை அட்டூழியங்களுக்கு ஆளாக்கப்படும் மக்கள் என்றும் சிரமேற்கொண்டு செயற்பட்டால் தான் உய்வு உண்டு.

இணைத்தலைமை நாடுகளின் ஒஸ்லோ சந்திப்பு

25.06.07 திகதி ஒஸ்லோவில் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை நிலைமை தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தினர் அல்லவா? வழமையான கூட்டறிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையாயினும், யுத்த முனைப்பைக் கைவிட்டு நம்பகத் தன்மையானதொரு அரசியல் தீர்வுத் திட்டத்தினை முன்வைத்துப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது. குறிப்பாக, அமெரிக்க பிரதிநிதி றிச்சட் பௌச்சர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் யுத்தமுனையில் கிடைக்கும் தற்காலிக வெற்றிகள் இனப் பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டுவராது, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தம் விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை தமிழர்களுக்கு உண்டு என எடுத்துக்கூறியுள்ளார்.

மறுபுறத்தில், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்த வரை 25 வருடங்களுக்கு முன் தமிழரால் நிராகரிக்கப்பட்டதான மாவட்ட சபை திட்டத்தினை முன்வைத்து, ஒற்றையாட்சி முறைமையில் மாற்றமில்லை என்பதில் அழுங்குப்பிடியாய் உள்ளது. விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவருவதற்கு யுத்தம் தொடர்ந்து நடத்தியாக வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றது.

இத்தகைய பின்புலத்தில் வாஷிங்டனுக்கு ஒருவார விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளதைப் பார்ப்போம். இலங்கை அரசாங்கம் இராணுவ பலத்துடனேயே தமிழ் மக்களுடன் இணக்கப்பாட்டிற்கு வரமுடியும், சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டியிருப்பதால் கடுமையான இராணுவ நடவடிக்கை அவசியமாகிறது. இந்த நிலையில் தான் யுத்தம் தொடர்கிறதே ஒழிய இதற்கும் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்கும் இடையில் முரண்பாடு இல்லையென அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார். இது ஒரு கேலிக்கூத்தான வாதம் என்பதை வாஷிங்டன் தரப்பினர் புரிந்துள்ளனர் எனலாம். ஏனென்றால், மேற்கு நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்குவதை நிறுத்துவது "துன்பமான தவறு", பயங்கரவாதத்திற்கு உற்சாகமளிக்கவல்லது, இலங்கை அரசாங்கம் இதயசுத்தியாக செயற்படுகிறது என்றெல்லாம் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கிற்கு அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளது எதுவும் கணக்கெடுக்கப்படவில்லை என்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக, இலங்கையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் நிறுத்தப்பட்டு பொதுமக்களின் மனித உரிமைகள் உரிய முறையில் பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்க குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டையும் சேர்ந்த 50 காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதி புஷ்ஷிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் பீரிஸ் அன்று சந்திரிகா அரசாங்கத்தில் அங்கம் வகித்தபோது 1995 இல் ஜனாதிபதி சந்திரிகா முன் வைத்த "பிராந்தியங்களின் ஒன்றியம்" என்ற அடிப்படையிலான தீர்வுத் திட்டத்தினை தேயச் செய்வதில் பிரதான பாத்திரம் வகித்தவர். ஆனால், தான் அரசியல் அமைப்பு அமைச்சராக இருந்து தமிழருக்காக பாடுபட்டதன் காரணமாக சிங்களவர்கள் தன் மீது வெறுப்புக் கொண்டிருந்தமையால் அடுத்த தேர்தலில் தமிழர் தான் தனது வெற்றிக்குக் கைகொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தவர். பின்பு பதவி ஆசை காரணமாக ஐ.தே.கட்சிக்குத் தாவியவர் ஐ.தே.க.வும் ஷ்ரீ.ல.சு.க. வும் 2006 அக்டோபரில் புரிந்துணர்வு பதவி ஒப்பந்தம் செய்து கொண்ட கையோடு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சர் பதவி பெற்றுக் கொள்வதற்கு முண்டியடித்து முதலாவதாக நின்றவர் தான் ஜீ.எல். பீரிஸ். தமிழரின் வாக்குப்பலத்தில் அன்று வெற்றிகொண்டவர் இன்று யுத்தம் கடுமையாக நடத்தப்படுவதற்கும், தமிழரைக் கொழும்பிலிருந்து வெளியேற்றப்படுவதற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழர் தமக்காக குரல் கொடுப்பவர்களின் கையைப் பலப்படுத்த வேண்டுமென்று சிந்திக்காமல் பச்சோந்திகள் மற்றும் பசுத்தோல் போர்த்த பேரினவாதிகளையும் நம்பிக் கெட்டது போதும்.

சமஷ்டி ஆட்சி முறைமையில் தலைசிறந்த நிபுணர் எனக் கருதப்படுபவராகிய கலாநிதி ஜோன் கின்செட் சென்றவாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அதன் பொருட்டு கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையத்தில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் அரசியல் விஞ்ஞான பேராசிரியர் ஒருவர், வணிகத்துறை முக்கியஸ்தர் ஒருவர் அடங்கலாக சிலர் பங்கு பற்றியிருந்தனர். அழைப்பு ஒன்றினை ஏற்று நானும் பங்குபற்றினேன்.

சமஷ்டி முறைமையிலான அரசியல் தீர்வொன்றினை தமிழர் தரப்பினர் 1950 கள் முதல் வேண்டி நின்றபோதும், அது பிரிவினை நஞ்சு என தென்னிலங்கையில் சிங்களவர் அழுங்குப்பிடிவாத பிரசாரம் செய்து எதிர்த்து வந்தமையால் இன்று 25 வருட கால யுத்த அழிவிற்குப் பின்னரும் அதே நிலைப்பாடு தான் காணப்படுகிறது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென கூறுபவர்கள் அதற்கு வித்திட்ட அரச பயங்கரவாதம் பற்றிப் பேசுவது கிடையாது. மூன்று தசாப்த காலமாக தாம் உண்டு தமது கல்வியுண்டு என எண்ணி அமைதி காத்துவந்த தமிழ் இளைஞர் பொறுத்தது போதும் என்ற நிலையிலேயே ஆயுதம் ஏந்திப் போராட தலைப்பட்டனர். அதனை முறியடிக்கும் முயற்சியில் தான் கடந்த 25 வருட காலமாக எல்லா அரசாங்கங்களும் ஈடுபட்டு வந்துள்ளனவே தவிர அடிப்படை பிரச்சினையாகிய தேசிய இனப்பிரச்சினைக்கு நீதியானதொரு தீர்வைக்கண்டு நாட்டை முன்னேற்றுவதற்கு எந்தவொரு அரசாங்கமும் உழைத்தது கிடையாது என நான் கின்செட்டுக்கு விளக்கினேன். சர்வகட்சி பிரதிநிகள் குழு (APRC) தலைவர் அமைச்சர் பேராசிரியர், வித்தாரணவையும் தான் சந்தித்ததாக கின்செட் கூறினார். சந்திப்பு வரவேற்கத்தக்கதாயினும் APRC யில் யாரும் நம்பிக்கை வைப்பதில் பிரயோசனமில்லை என அவரிடம் எடுத்துக் கூறினேன். ஆனால், தமது தரப்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தினேன்.